ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

சின்னத்தின் சிகரங்களே-என்றும்
சினங்களாக,ஏங்கும்
வன்மங்களின் வதைப்புக்களே-மனதின்
வாதைகளாக-ஏந்த
அகம் சீந்த இகம் என்ன வேள்வியை எங்கள்
வேலிக்குள் வேயவிடுகின்றது?

உன்னதங்கள் அதன் உரிமங்கள்
கன்னக் கதப்புக்களில் காஞ்சலாக
விஞ்சமுடியாத வேதனைளின்
வெப்பியாரங்கள்,துஞ்சாதா?
சோகம் துகிலாதா? எண்ணங்களிற்கு
எப்போதுமே வெட்கங்களை வேய்வதில்லை,
ஏனோ?

துன்பங்களின் சோபனமாய் வாழ்வரிக்கும்
மன்றங்களாய் எம் மனதரிக்கும்,
யதார்த்த கிண்ணங்களாய் அதுவே
இனி காரமும், காலமாய், கிரமங்களாய்,
கிள்ளி எம் சோலைகளை தமதான
சொப்பன வாழ்விற்காய் நிதமும்,நிதமும்

சின்னத்தனங்களின் சிற்பமாய்,சிரமமாய்
சீதளக் காற்றளைந்த எங்கள் சிம்மாசனங்கள்
ரணங்களை இனியும் சீரணிப்பார் சிறக்க
விவரணங்கள் சூட்டி வீராணங்களை விதைப்பார்.

தாக்கத்திற்கு மறுதாக்கம்,பெளதீகம் பகருகின்றது,
தாக்கமான தாக்கம் மொண்டு தகர்க்காமல் தரமெய்யோம்,
ஊக்கமான உளவுரனுண்டு ஊடறுத்து உருவெய்வோம்.
தீர்க்கமான திடம் கொண்டு தீர்த்து வைப்போம்,
எமதாக்கம்.

சர்வம் எங்கும் சாவிரித்தாலும் எம்,
சாந்தங்களை நாமே சகாயமாக்கவேண்டும்.
வர்மமான வளைகள் உண்டு. கர்மமாய் கடன் முடிப்போம்,
ஓர்மம் எங்கள் உடன் பிறப்பு ஓயாது அலைகளென,
சிந்தாத ரத்தம் சிறப்புறாது.
விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்