செவ்வாய், 6 அக்டோபர், 2009

தடையின்றி விடை இறுக்கும்..

சொல்லிற்குள் இல்லாத சொரூபங்கள்
மல்லுக்கு நிற்தில்லை.
வில்லுக்குள் என்றுமே அம்பு தூங்குவதில்லை-அது
கொல்லுமிடம் ஆர்த்தே கோலம் மொள்கின்றது.
வினைப்பவன் வினையாற்றமுன் வித்தைகளை,
தினைப்தில்லை,
காலம் நேரம் காத்திரம் கோலும்.
கனிந்துவர காத்திருத்தல் அவசியம்,
வேட்டை வெறும் வேட்கையல்ல-அது
கோட்டை விடாத கொலு வீற்றிருக்கும்.
பாட்டை பரிந்தெடுக்க பாத்திரமான,
பகுப்புக்கள் வேண்டும்-இது எல்லோர்க்கும்,
எந்நேரமும் கைகூடுவதில்லை,இதன்
நேத்திரங்கள் நெய்தலிற்கு அப்பாற்ட்டு,
தோத்திரங்களின் தோழமைகளை களைந்து,
ஆளுமைகளை மைக்கவேண்டிய கனகச்சிதமானது--,இதில்
கனிவுகள்கூட கால வெள்ளத்தால் களையிழந்து
போகலாம்.
பொங்கும் பொதியல்கள் குவியத்தை குறி
வைக்கும் போது கலயம் உடைவதுபோல்—உடைவது
கலயம் இல்லாமல் காவல்களே களையானால்,
எரிப்புக்களின் தகிப்புக்கள் அதிகமாக,அதிகமாக
அடுப்பே அனல் தாங்காமல் அழிவு நெய்தால்,ஆம்

எரிதலிற்கும் அளவு வேண்டும்-அது
எரிவாய்வாக எங்கள் களம் தீய்ந்தது,
பொஸ்பரசு எரிகுண்டாய் எங்கள் கனத்திரர்கள்,
பொசுக் குண்டாய்-----

எதிரி உண்மையில் வலுவுள்ளவனானால்,
நேரடி மோதலிற்குள் முகம் பூக்க வேண்டும்,அஃதின்றி
அயல் அட்டைகளுடன் அவனதன் ஆதிக்கத்துடனும்
களம் பொருதுதல் எந்த நீதி,நியமனங்களிற்கும் ஆகாது,
மனு நீதி என்பது நியமான போராளிகளிற்குள்ளேயே
குடிகொண்டிருக்கும்,அது
அற்றவனிடம் எதுவும் ஆற்றுமை மையாது,
அதுவும் ஆரிய வெறியனிடம் எந்த
வேதமும் வெயில் அள்ளாது.சிங்களவனிடம் எந்த
சிந்தையும் போர் முறை தழுவி இல்லை.
புணருதலிக்காய்,தமிழரை கொல்லுதற்காய்,
பிரேதத்துடன் பிதிராற்றும் பிடையர்கள்.

எல்லாமே நடந்தது எங்கும் பிணக்காடு,எங்கள்
பூமி ஒட்டுமொத்தமாக இத்தனை மைந்தர்களை,
எதிரியின் எத்தனத்தால்
மிகவும் பாரத்துடனேயே தன் பாயேந்தியது,
கருகியவர்கள்,காயங்களுடன் முனகியவர்கள்,
வயது வேறுபாடற்ற சமரசமாய் சாவு இவர்களை
ஆரியனின் கணக்கில் ஈடேற்ற இறுமாப்பு இந்தியனாலும்
இழைப்புக்கள் இலங்கியது,இல்லையில்லை,ஏதோ
ஒரு வகையில் அறவிடமுடியாக் கடனாக எங்கோ
ஒரு குரல் தன் குலம் காத்ததாக,கர்மம் ஆற்றியதாக
குரல் ஒடுக்கி நீலிக் கண்ணீர்-----???

உரிமக் குரல் உரிமைப்போர் உறவுக் களைவுகளால்
தன் இயக்கத்தை மாற்றி வழியின்றி மொளனித்துக் கொண்டது,
இது தாற்காலிக ஓய்வே நிச்சயமாய்,---ஆனால்
இதில் காலங்களின் காற்றசைவை எவரும்
கட்டியம் கூறமுடியாது,எனினும் அந்த ஈடிணையற்ற
தாகம் மீண்டும் தன் தவிப்பை தரணிக்கு தாக்கமாய்
தரவேந்த போகின்றது.

மொளனமான புயலாகவோ,அன்றி
மரண அவலத்தின் கடன் தீர்கும்,
புனலாகவோ ஏதோ ஒன்று இன்றோ,நாளையோ,
அப்போது தரணியே பார் புலத் தமிழனில்
புரையோடிப் போயிருக்கும்,அந்த
ரணகளங்கள்
ஒப்புவமைக்கு அப்பால்
இனி தடைஓட முடியாத புரவியாய்
தளம் அமைக்கும் தமிழரின் தாகம்
தடையின்றி விடை இறுக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்