ஞாயிறு, 4 அக்டோபர், 2009

என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

கருணை கொஞ்சம் வேண்டாதார்-எந்த
கருப்பையும் மனதில் தீண்டாதார்,
சுரணை மிஞ்ச சுரம் திண்ட சோகியவன்-எந்த
மரணையும் மருட்டி மகிழ் வெய்வார்,

பொருளை பிறன் பொருளை
காவு கொள்ளும் கடனாளி-சொந்த
மருளை மனதால் ஒறுத்து நிற்பான்,மீண்டும்
சரளை வீசும் கல்லாக அவன் கனவில்
தனியே தவித்து நிற்பான்.

ஒருவன் பொருளை மனதாலும்
சிறுமை பொங்க சுரண்டுபவன்,
கருமம் மறைந்தே மகிழ்ந்திடும்-இந்த
மார்க்கம் என்றும் நிலைத்திடுமா?

கற்ற கல்வி கலந்திட்டால்
பெற்ற யாவும் கலந்திடவே
மற்ற மக்களை மனம் கொள்ளும்,
உற்ற துணையாய் உறுப்பமைப்பான்,

ஆதலால்,
கல்வி ஒன்றே காலமெல்லாம்
உலவி உந்தன் உறவு கொள்ளும்,
நிலவும் இந்த நிலைகளை நீட்சி கொள்ள
புலவிலும் கல்வி கல்,ஏந்தி நிற்பாய்.

எனவே,
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,
அந்த மொழியை நிறைவாய் கற்றிட்டால்,
பொழிவு உந்தன் வாழ்வாகும்-நல்ல
கொழிவாய் நாளும் அகம் மொய்யும்,

தங்கி வாழ்வது வாழ்வல்ல-நீ
தாங்கி வாழ்வதே வாழ்வாகும்,
தூங்கி விழித்தால் தூபம் இல்லை-இதை உள்
வாங்கி உவப்பாய் உலவிடுவாய்.

பிச்சை ஏற்கினும் கற்றல் நன்றே,
உச்சமான வார்த்தையிது,
கொச்சை படுத்தி வாழ்வதிலே- என்ன
கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

மிச்ச நாளையாவது -நீ
கற்கையில் கவனம்
செலுத்திடு-அது சகவாசம் உன்னில்
தனைக் கொடுக்கும்,ஆள சகாயம்
உன்னில் உருத்திடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்