வியாழன், 22 அக்டோபர், 2009

சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.


திண்ணிய நெஞ்சினர்,
தினவெடுத்த தலைவனின்,
நுண்ணிய பார்வையின்,
நுனிவரை சென்றனர்.
எண்ணிய காரியம்-
ஏற்றியே முடித்தனர்.
எரி தழல் மீதிலோர்-
காவியம் தீட்டினர்.

எதிரியின் ஏற்றத்தை-
உதிரியாய் உதிர்த்தவர்.
குருதியின் குதத்திலே-
கூரிய களத்திலே-
பருதியாய் படித்தவர்.பாரினிலே,
ஈழப் பாரினிலே விடி வெள்ளியாகினர்,
புரவியின் பாய்ச்சலாய்-
பரவியே பனித்தனர்.
இரவின் மடியிலே-
விடிவினை விதைத்தனர்.

வார்த்தைகளின் வகிடுக்கப்பால்-
வைரமாய் வகைத்தவர்,இவர்,
ஈகையின் தொழுவம்,
ஈழப் பாதையின் விட்டம்,
விஞ்சமுடியாத வீரியத்தின் தொகுப்பவர்.

ஆற்றலே,
உறுதியின் உரமே,
மாற்றங்கள் இன்று ஈழப்பரப்பில்,எனினும்
உங்கள் ஈகங்களின் தாகங்கள் தரணியெல்லாம்
தாக்கமாக,
நாளை இந்த தோற்றம் மாறும்,
எங்கள் ஆதவன் உயர்த்திய ஈழக் கொடி
தங்களின் தியாகத்தின் தீப்பிழம்பில்
உலகப் பரப்பில் உத்வேகமாக உயரப் பறக்கும்,

ஞால கதிரதில் அன்று இந்த ஞானியரின்
ஞான விழா,
ஞாயிறாகும்,ஞாயங்கள்
ஞானம் தவிர்த்து நீர்ப்படையாது,

உங்கள் நிறங்களின் உரங்கள் தாகங்களை
தாற் பாரியமாக்கும்.தர்மம் தலை தவழ்வதாக
பவனி என்றுமே பார் மேயாது.
ஈழம் மலர்ந்த பின்பும்-உங்கள்
ஈகங்கள் செழித்தே ஓங்கும்.
கல்லறை மேனியரே உங்கள் களிப்பில்
சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்