வியாழன், 22 அக்டோபர், 2009

என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?


உள்ளம் உறையும்?
உறங்கா உண்மைகள் உயிர் கரிக்க,
உபரிகளாகும் உயிர்களின்
உன்னதம் உறக்குமா?
சின்னங்களேந்தி சிதைக்கும் சின்னத்
தனங்கள்-எங்கள்
வண்ணக் கனவுகளின் வரைபுகளை வறுத்தெடுத்து,
ஈனத்தனம் ஈற்றும் இந்த இழி பிறவிகளை,
என்ன தனம் கொண்டு கறுத்தலாம்,

இன்னமும் எத்தனை உறங்கா!
உண்மைகள் உறவரிக்கும்,ஊன
சிங்களனின் இந்த சித்தத்தை,எந்த
மத்தையில் போட்டு மகுடமெரிக்க,
வித்தகம் விதற்றுவோம்?கண்கள்
ஒத்தடம் ஒதுக்கும் ஓர் விழி கரையும்,
நீர் வரைந்த இந்த நிலவுகளை,எந்த
கானத்தில் வைத்து கழுத்தறுத்தானோ?

புத்தனிற்கு அபிசேகம் எங்கள்
புண்ணியரின் குருதியிலென்றால்
புத்தனும் கூட சித்தம் மகிழ்வானா?
தித்திக்க,திகட்டாமல் எங்கள் சதைப்பிண்டங்களில்
என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
விகாரையின் விகாரங்களில் விக்கிப்பதெல்லாம்
முகாரி விக்கும் வினயமாற்றும் தமிழ் குருதியன்றோ!

என்றோ ஒர் நாள் விடையிறுக்கும் என்று
மன்றாடி எங்கள் மானம் மறைக்கும்
மார்க்கம் வேண்டாம்,
நின்றறுப்பான் நித்திலனென்று நிழல் ஒதுக்கும்
மன்றத்தை விலத்தி,
கொன்றறுக்க கோர்க்கும் கோகிலத்தை கோர்ப்போம்,

அன்றேல்,
நாளை இது உன் வாசல் வந்து
வசந்தம் வரைக்கும்,
உன் வாசத்தை
சீழாக்கி, சூழாக்கும் சுரம்தான் சுரக்கும்,
உறவே!
உறங்கும் இந்த உபாதைகளை ஊர் பரப்பு,
கிறங்காத உந்தன் உறுப்பமை,
விரைவில் விடியல்!
இல்லையெனில்?
விதையெல்லாம் நுரை தள்ளும்
விரையின்றி விதையில்லை விகல்பகற்றி விரிவடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்