வியாழன், 15 அக்டோபர், 2009

தினம் மென்னி கிள்ளும் மேனியரை!


உலகெங்கும் ஓலங்களாய்-எங்கள்
வலம். இது என்ன சீலம் என
கலம் நோகும்?உள்ளம்
உவகையை மறந்து பள்ளத்தில் பல நாட்களாய்-
எந்த,
பாசாங்கும் அற்று விசும்பும்
எண்ணற்ற உறவுகளின் தாகத் தவிப்பில்
தரணியில் தமிழர்,

உலகப் பரப்பை நிரப்பவா நாம்?
திலகம் இட்டுள்ளோம்,
நிலவாதா?
வசந்தமென நீட்சிக்கும்
நயங்கள் என்று நார் கோர்க்கும்?
கலகமென்று முன் காதை விட்டார்,
இன்று!
நிலக் கிளிகளாகக் கூட கூடின்றி
புலம் பெயரும் பூப்புக்களுள் எங்கள்
கோமேதகங்கள்,

கனவாகாத
எங்கள் வயல் மீட்டிருந்தால்???
நிலம் நீட்டி இருந்தால்!! இந்த நிலை
ஈய்ந்திருக்குமா?
ஈனம் இழைந்திருக்குமா?
இல்லை,இந் நிலை
இலங்கித்தான் இருக்குமா?

புலமே!
நீ
மெல்லுவது போல் உள்ளத்தை கரைசலில் தோய்த்து,
எங்கள் கனதியை குறைக்காதே.
இல்லாத திருநாளை உன் கலசத்தில் ஏந்தாதே.
மெல்லக்கூட வழியின்றி எம் இனம்
தினம் மென்னி கிள்ளும் மேனியரை
அவர் ஊனம் உலகாக்கி,
எங்கள் தள மைந்தர்களை
அவர் சுயமூட்ட,
தரமாக்க உற்ற தகமைகளை கரம் பற்று.

நிலமே,
எங்கள் வளமே,
நலமாக்க நல்ல ஞாயம் வகி,

புலமே!
சூலம் ஏந்தும் சூத்திரத்தை சூடு நீக்கி
ஞாலமேந்த இன நமைச்சலை நா`` விரி,
கீலங்கள் தான் விலக்கி
சீலங்கள் தான் சுமக்கவே!பகை
முகாம் சூடு விலக,
சீரியமான சிந்தையை கரம் கொள்-ஆரியன்
காரியமழித்து எங்கள் காலம் வெல்ல.
ஊர் வலம் வா.
தமிழர் பேரவையின் தாற்பாரியத்தில்
தகமை வகி,
இளையோரின் இலங்கலை இயைந்து கை கொடு
இலங்கட்டும் உன் ஈடிணையற்ற இருப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்