வெள்ளி, 2 அக்டோபர், 2009

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!
பரத்தில் என்ன பாரம் உனக்கு-புலத் தமிழா
பகலவன் பாரமேந்திய களமதை
சற்றேனும் நினையடா,பரத்தையர்
கூட்டமொன்று மென்று துப்பிய எங்கள்
கலத்தையும் கலையில் கொள்ளடா,

விலைமாதர் கூட்டமொன்று எங்கள்
விதை அழித்த சுவடு உன் சுவாசத்துடன்
சூழட்டும் அது கனலாக,கலமாக உன்
நெஞ்சகக் கூடதனில்!
வெறும் கூடாகாமல் அவன் விரித்த
கூறுகளை கூற்றுக் கொள்ள குதம் கொள்ளடா,

கரத்தில் நல்ல கலவு மொள்ளு-உன்
சரத்தில் அதன் சாரம் அள்ளு,இகத்தில்
இந்த
ஈன,ஊனம் சுமத்திய சூரர்களை,அவன்
சூதகமது சூல்(ள்) கொட்டிய ரணங்களெல்லாம்
உன் கரங்களாலேயே கறை அகற்ற வேண்டும்,
சுரமது உன் சுத்தமான சுதி கொள்ளட்டும்,விதி
வரைந்தோமென்று கரைந்தவன் களம் கலைக்கட்டும்.

வீழ்ந்தெல்லாம் விளைவதற்கே என்ற-எங்கள்
வேதங்கள் அங்கு வெங்களம் ஏந்த
சூழ்ந்தெல்லாம்,சுரந்தெல்லாம் சுதந்திரத்தின்
சுனைகளென்ற சுரம் சுகிக்கட்டும்,
மாய்ந்த எங்கள் மாமனிதங்களின் மரண
ஓலையின் மேலொரு சுவடு பதித்து.எங்கள்
சுதந்திர சன்மானங்கள் ஆங்கே மதிப்பேந்த
நிரந்திரமான நீதி அங்கு நியமாற்ற,

நிர்மலான அந்த மேகங்களின் மினுக்கில்
மாவீர மனங்கள் ஆதங்கங்கள் அசையும்
கர்மங்கள் உன் கடனாக கயமற்ற கலயமேந்தும்,
வர்மங்கள் வலு ஏந்த வாகை உன் யாகமாகும்,
வலு ஏற்று அன்றி எந்த வலுக்களும் உன்
வயல் மீட்க வகை தகைக்காது.

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்