சனி, 3 அக்டோபர், 2009

நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,

இங்கு பதியம் பகுப்பவைகளால்-எமது
விடியல் ஒன்றும் விளங்கப் போவதில்லைதான்,
ஆயினும்,
உள்ளத்தில்,
உணர்வில்,
ஆதங்கத்தில், எம் மக்களின்,
அவலத்தில் அவர் தாங்கொணா தவிப்பதில்,
என்னால் ஏதும் ஆக்க பூர்வமாய் எதையும்,
எந்த ரீதியிலும் எந்த முகூர்த்தத்தாலும்,
எதையும் ஆற்ற,தேற்ற எவ்வித,
தோற்றமும் தேற்றமிழைக்க முடியவில்லையே!

இந்த ஆர்ப்பனவுகளை,
அதன் அங்கலாய்ப்புக்களை,
அனலூடலான அந்தரிப்புக்களை,
அவையெல்லாம் எம் அகம் எரிக்கும்,
ஆர்ப்புக்களை!
எந்த கலயத்தில் ஒதுக்கி கவசம் சூடுவோம்?

வெந்தணல் புழுவாய்,இவ் வேதினியில் எம்
ஆத்மங்கள் அங்கே அனு தினமும்,
ஆற்றுவாரோ,தேற்றுவாரோ,போற்றுவாரோ.,
யாருமின்றி அவமானங்களின்
உச்சத்தில் அது ஊட்டும் அச்சத்தில்

வாழ்வாதாரம்?
வதைகளாக,பதை,மதைப்புக்களாக,
எந்த,
பத்ம வியூகத்தில் எம் காலக் கடனை
காப்பரணாய் களமிறக்குவோம்?
வேதனை சூழும் வேளத்தில் என்
வேதாகமங்கள்,
ஆழிப்பரப்பின் அக்கறையில் ஒர் நாள்
அடுயோடழிந்த அந்த அனர்த்தங்கள்,
ஆமியின் அக்கிரமத்தால்,அடாவடிகளால்
இன்று
அருவருப்பாய் தினமும்,

ஏதாவது என்றென்ன?
இப்படி எம் ஆற்றாமைகளை!
அனலெடுத்து எழுத்துக்களாய்,
தினம்,
வினையெடுக்க முடியாத என் முடிச்சுக்களை,
எழுத்துக்களில் வெப்பகம் ஊற்றி,
எனதான விடுதலையின் எமக்கான மறுகரையினையும்,
எமதான உறவுகளின் விடுதலையின்,
விகற்பத்தையும் ஏந்த ஒரு நல் வழி இயற்றும்.
நாயகனின் வருகைக்காய்,அந்த தலைவனின்,
தர்மத்திற்காய்,

இந்த எழுத்துக்களை பவுசேற்றும் வரவேற்பில்,
உணர்வுகளின் அந்தரிப்பில் கருத்தரித்த,
இந்த காயப கல்பங்களை காத்திரமாய்.
பதிவேற்றி எம் பாமர,மக்களிற்காய் பதியமிடுகின்றேன்,
வார்த்தைகள் வாழ்க்கையாகாதென்றால்,
பா எதற்கு?,பத்திரம் எதற்கு?
புத்கமாய் புவியில் பூமி சாத்திரம் எதற்கு?

புரியாத பதர்கள் எப்போதும்,
வரிக்கும் வன்மங்களை எங்கும் கண் கொள்ளார்.
வலிக்கும் வார்த்தை தொடுத்து எம் வைகையர்களை
வதம் கொள்ளும் வக்கணையே இவர் தேர்வு,
புற நானூற்றை புரிந்து படியென்றால் இவர்கள்
புறம் கூறும் நாள் நூற்று அறம் கூற வித்தை கொண்டார்.

எமதான சமூகத்தில் அடிப்படை வாழ்வே
வேலி ஊடி, ஒட்டு கேட்டு, ஓதி வாழுதல்-இதில்
எங்கே திருத்தல்கள் திவ்வியம் கொள்ளும்?
மற்றவரை சுட்டி காட்டி,குறை கறைத்து,கரித்து,
எம் சமூகம் வரைந்த வார்ப்புக்கள்,
எதற்கெடுத்தாலும்,
அயலவனை அர்ச்சித்து,அவனின் வீழ்ச்சியில்
எழுச்சி கண்டதுவே இந்த தமிழ் சமூகம்,
இது முற்று முழுதான மூச்சடைக்கும் உண்மை.

மனம் வலிக்கும் உண்மை இதை ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இன்றி பலர் இன்றும் புல வாழ்வில்
இது நாளும் பொழுதும் இன்றும் ,இப்போதும்,
எல்லா ஐரோப்பிய,அமெரிக்க கண்டத்திலும்
இதுதான் இன்றும் அவலமாய் ஆர்த்தெடுத்து
ஐயகோ!
அனுபவம்
கண்டத்தில் எல்லாம் கச்சிதமாய்,
காத்திரர் வாழ்வதனை கண்கொள்ளா,
மானிடமும் கனடா முதல் அமெரிக்காவரை,
இதையே இங்கு கோர்த்தெடுக்க கோகிலம் கொண்டு
நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
நோத்திரம்,
தோத்திரமாய் தோரணை சூடி!

இராமரிற்கு அணில் ஏதோ,
அதனாலான சிறு அர்ப்பணிப்பு,
ஒப்பிற்காய் இதை ஒற்றவில்லை
ஒடுங்கும் என் இனம்
ஒடுங்கா மனம் வேண்ட
ஓர்மமாய் ஓர் ஓலை வேண்டும்,
கூர்ம அவதாரமோ அன்றி
வர்ம மனுதாரமோ,
எந்த மயிலிறகும் எம் மானம் காக்கா,

பசிக்கு உணவு எப்படியோ?நோய்க்கு
மருந்து அவ்வாறே,அதேபோல்
விடுதலைக்கு கருவி அத்தியாவசியம்.
அதை எதிரி தீர்மானிக்கும் போது,நாம்
அதையை ஆர்த்தெடுத்தல் அவசியமான,
ஆணையாகும் அன்றி விதையற்றுப் போனது.
ஈழசரிதம். இதை ஆழ நினைத்தல் ஆள,எமை
அழ புதைக்கும் ஆரூடம்,ஆக

ஊசியை ஊசியால் தடுத்தல் பக்க
விழைவற்றதாகும்,
இங்கு
ஊசி என்பதை கூர்மமாய் கவனி
வீசி எறிந்து வேளை தகர்க்கும் வேள்விக்கு வேளை குறி.
அஃதின்றேல்
ஆழி தின்றது போக,மீதி ஆமி அழிப்பது போக
இனி மீதி வேள்வி ஏந்தாவிடில்
மேதினியில் நிச்சயமாய் ஏதும்!
நிறைவினிலே நிழல் ஒற்றாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்