வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.


முரசேந்தி நின்றவன் ஈழ முகிலவன்,
பகலவனின் வாரிசாக வசம் தரித்து வகைந்தவன்,
உலக வலவில் உண்மைகளை உறுத்தவன்-,மிகையிலா
பலமதில் பாதை விரித்து பரந்தவன்,
செவ்வனச் செல்வன் எங்கள் சேந்தல்களில் இளையவன்,
இனியவன் இலங்குவதிலும், இழைவதிலும்,
ஈடில்லா ஈர்ப்பவன்,நூர்த்தவன் பாதைகளை
நுகை முகை புன்னகையுடன் பூத்தவன்
மிகையில்லா மிடுக்குகளை மிதமாகவே தரித்தவன்,
தமிழ்ச் செல்வனவன்,தார்மீகச் செல்வனவன்.

பிரிகேடியர்,
பிரிவதை தவிர மார்க்கம் மாற்றில்லையென
உரிமையுடன் உலக வலவில் உறுதியாய் உரைத்தவன்,
பரிவவன் பாதையெலாம் புவனம் பூபாளம்தான் புனைய
புன்னகையாலே புலவுகளை புதித்தவன்,
உதித்த திசையெல்லாம் தித்தித்தவன்,
மதித்தவன் மதியின் மரபில் மாண்பின் மனைப்பில்
கொதித்தவைகளை கோலம் கோர்த்தவன்.
ஆதலால்தான்!

எதிரியின் ஏவுகணைக்குள் எள்ளளவும்
தினையாமல் ஏற்றமாய் பிழைத்தவன்,
ஆரியனிற்கு அனலவன்,ஆர
அணைப்பவர்க்கு அனந்த களிப்பவன்,ஆக
இன்னமும் எதிரிக்கு கொள்ளிக் கண்ணாய்
கோலம் அளித்தவன்,

எனவேதான்!
எங்களவனை
எப்படியும் எரிக்க எதிரி முகாந்திரம் முச்சூடும் சூட்ட
தப்பாத தளத்தில்கூட தகமையாய் தப்பித்தவன்.
உப்பிட்ட உளத்தைக் கூட எங்கள் உறவுகள்தான்
உருவழிக்க என்ன மனம் காவி எதிரியில் சரணடைந்தானோ?
பாவி,பரதேசிகளின் பாங்கு எங்கோ,எப்படியோ அரணமைக்க
எங்கள் செல்வன் ஏகாந்த தேசம் நோக்கி அவன்
அறுவருடன் ஈழப் பரப்ழுக ஏகினான்.

அண்ணலே!
ஆரோக்கிய அகத்தவனே,இந்த
இகத்தில் ஈரடி இலக்க மூவடி சறுக்கும்,
முகத்தில் ஈரூடக பாய்ச்சலாய் ஈர்த்தவனே,
தகத்தில் அதன் தளத்தில் என்னே பரப்பளவேந்தினாய்,
பெரும் பாய்ச்சலின் பரமம் நீ-இன்று ஈராண்டு
இலக்கெய்ய ஈழத்தில் எத்தனையோ
இழவுகள் சுமந்து நாம்,ஆயினும் உங்களின்
உறுதியான உலைக்களத்தில் உந்தன்
நினைவு நீவி நாம் நிமர்வெய்வோம்.

தலைவனின்!
தார்மீகங்கள் தளராத பீறு நடை பிறளாமல்,
ஏந்த புலத்தில் புவியில் பூப்பெய்ய-நாம்
உன் சந்தங்களின் சாதிப்பில் சலியாமல்
சகமேற்றுவோம்,
நிச்சயம் சாதிப்போம்,
நிலப் பரப்பில் எங்கள் முகாந்திரம்
முத்தெய்யும்வரை.
அன்று உன் ஆசிகள் அனந்தம் பெறும்,
வனப்பெய்யும்,
வரம்புகள் எங்கள் வயலாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்