திங்கள், 12 அக்டோபர், 2009

வல்ல பகையால் எங்கள் வாசல்!

இலங்கிடுமா இவர்களின் இயலாமைகள்,
இந்திய காங்கிரசின் இலக்குகள்
இனியும் மறக்குமா?
ஈழத் தமிழனவன்னிற்கு
இன்னல்கள் இலக்கிய ஈனர்கள் இன்று
எந்த முகம் ஊக்கி எங்களவர் அகதி நிலை
ஆய வந்தார்.இல்லை வேய வந்தார்?

இன்னல்கள் சூழ முன்னர்
என்னவெல்லாமோ நாம் இரந்து நின்றோம்,
சொல்ல நாக்கூசும்,
நினைக்க மனம் கூசும்.

நாம்!
நெக்குருகி புழுவிலும் கேவலமாய்,
உக்கி உருகி செத்தழிந்த போதெல்லாம்,
செவிடராய்,
ஊமையாய்,
குருடராய்
குனுகி இருந்த இந்த குன்(ற்)றமெல்லாம்,,,

இன்று
எந்த மென்னியை அறுக்க
எங்கள் மேனியை நனைக்க வந்தார்?
எந்த
கோலம் கொண்டு எங்கள் கோகுலம் ஏகினர்?
என்னதான் இவர் எத்தனை வேடம் போட்டாலும்
இவர் வந்ததால் எந்த ஏணமும் இழையாது,
இது
முந்தையர் ஆண்டது போல் நாம்
மீண்டும் எம் மண்ணை
ஆளாமல் எந்த விந்தையும் விழையாது,
சிந்தை இவர் நிச்சயமாய் இந்த
வீச்சள்ள எண்ணார்,

மகிந்தாவின் குதம் தடவி மக்கள்
சுகித்த பெரு வாழ்வெய்தார் என்றே
நாளை அழகான விதை தூவுவார்,

காங்கிரசின் கைப்புண்கள்தான் இன்று எம்
வீரர் கால் பட்ட வீரியமான விளை நிலத்தில்!
எந்த காரியமும் இவன் காத்திரமாய் ஏந்தாமல்
பந்தம் அவர் வாழ்வில் பவ்வியம் காத்திடவே,
வெந்த எம் புண்களில் வேலேந்தி கீறும்
சந்தனத்தையே இவன் சாதகமாக சாத்துவார்,

இருந்து பார் இனமே,
இராணுவத்தின் முற்றுகைக்குள் எங்கள் மக்கள்
எந்த மூலிகையை இவர் முன் ஏற்றுவார்,
இந்த அரசியல் நாகரீகம் தெரியாதவரா?
நாம் என்ன இன்னமும் பாமர மக்களா?
சுயாதீனமாக எந்த சுந்தரத்தை சுகிக்க அவன்
இங்கு வந்தான்?

டீ,ஆர் பாலு!
கோடரிக்காம்பின் கொற்றம் இவன்,
இந்திய அரசியலின் விந்தையை அறிவர்,
ஈழ மக்கள் மட்டுமா,இகத்தில்
இளையவரும்,எம் மக்களும்,
இது புரியாத பரி பாசையா?
கருணா நிதிக்க ஒரு வெற்றுத்தாள் கொடு,
இனி புதிதாக ஒரு பா`` பாட,

சேவகரே!
கருண கரத்தின் பாதகரே,
அந்த சேந்தலிற்கு ஒரு
மடல் கொண்டு வாரும் தன்
உடன் பிறப்பிற்கு ஒரு ``மா`` காவியம் சொருக
இவரால் ஈழத் தமிழினம் புளகாங்கிதம் பூண்டதாக
ஒரு உண்மையான சேதியை உறவுகளுடன்
பகிர்ந்து கொள்ள.

மகிந்தாவின் மகிமையை இவர் தேசம்
மொள்ள உடன் ஒரு வெள்ளைத்தாள்
சூரிய உதயத்திற்கு முன் இவன் முன் தாள்
தாள் பணி.
தாடையைத் தடவி நீ என்ன எழுத
திண்ணமாக எண்ணம் கொள்வாய்,
நாளைய முரசொலி வாசி
அப்புறம் சுவாசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்