புதன், 23 செப்டம்பர், 2009

மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?


கலங்கும் காலங்கள்,
உலங்கும் உறவுகள்,
துலங்கும் துயரங்கள்,
மலங்கும் மானிடங்கள்,
விலங்கு ``மா`` மானிதர்கள்.
விபரமற்றதா உலகம்?
விந்தையானதே எங்கள் தளங்கள்.
கலங்கள்.

கலங்கிய காலங்கள்,
காத்திரர் கலைத்தார்.
விலங்கிலும் கீழாய்
உலங்கியவர் உறைந்தார்—இன்றோ!
மலங்கல் எல்லாம்
மறைந்தே போயினதோ?இல்லை
மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?

விலங்கிலும் கீழாய் என் இனம்—இதை
விளங்கியும் மதியார்—இது என்ன மானிடம்?---பாரில்
பலமில்லை என்றால் எந்த பாதையும் விரியார்-எதை
பரிபாலிக்க இந்த பாரது பகிரும்?

விடியலற்று போனதா?விவேகமற்று வினையாற்ற,
முடியிழந்து போவதா? மூத்த தமிழ்க்கொடி---எந்த
குடியிழந்து போகிலும் கொண்ட கொள்கையதை மாற்றவா-
இத்தனை மாதவங்களை இழந்தது?
இல்லை என்போர்
இணைந்தே எழுக!

இலங்கும் ஈனத்தை அழிப்போம் இணைக,
பொல்லாப் பகையதை போர்க்கொடி ஏந்தியே
இல்லாதொழிப்போம் இறுமாந்து எழுக!
வல்லாளன் வகுத்த வாரியமே வலம் கொள்ள,
சொல்லா துயரம் துலைத்து எழுக,

இணைந்திங்கு ஈர்த்தல் ஈழம் இலங்கும்,
பிணைந்திங்கு தூங்கல் துயரத்தையே வகுக்கும்,
பிணந்தின்னி பேய்களே பேரவலம் சூட்டும்-இதை
உணர்ந்திங்கு உழைத்தல் உபத்திரவம் கலைக்கும்-
களமங்கு திறக்க காத்திரரே எழுக,
கனலான கங்குகளே காத்திரமாய் எழுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்