வெள்ளி, 25 செப்டம்பர், 2009

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?


அயல் அறியாதா?—இந்த
வயல் செழியாதா?-எந்த
கயல் மறைக்க கயவர் ஈன
செயல் இறைக்க கீறுகின்றார்.

புயல் பூத்த எம் தேசம்-நிதம்
புண்ணியர் ஆடிய பூந்தேசம்-இன்றோ
சித்தமெல்லாம் சிதைந்ததாய்,
ரத்தம் ஈந்த எம் தாயக தேசம்,

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?
குழலாய் நித குரலாய் திரும்பும் திசையெல்லாம்,
வளமாய் எம் வானம் வனைந்த வரம்,
காலக் கிரணத்தில் ஞாலம் இறைந்ததால்-அதன்
ஞாயம் கரைந்து போமா?

மழையாய் வானம் மத,மதத்தாலும்,கோர
இடியாய் இந்த கோலம் கொடி வளைத்தாலும்,
சோர,இனமானம் கோரம் மெளவ்வ நாம்
கொய்யம் குலைந்து,
கொலுவாற்றும் முகம் கரைப்பதா?

புலமே,
என் உறவே,
ஈழ மலரே,
நம் இளைய தலைமுறையே,நாளைய
நம் வாசல் வரையும்,
நல் வித்துக்களே!ஈழ நல்முத்துக்களே
உம் முன்னால் விரிந்து பரந்து,
இன்று பார் கெளவ்வும்.
காலக் கடமை கரம் இணைத்து,
உன்னை கனத்த மனத்துடன்,
கடனாற்ற கட்டளை கூர்த்துள்ளதை,
காலக் கடனாய் கொள்.

விடாக்கண்டனாய் உலக வீதி வா,
விரிந்து விடை கேட்கும் வீதி,
உன் வலம் வேண்டும்.
வைரியின் வைகுலத்தை நீதி கேட்கும்
ஞாயம் ஞாய்க்க,

புல உறவே!
புன்னகை மறந்த தேசத்து பூவை உன்
கையில் எடு,
பார் முழுதும் அதன் பாதை கேள்,
நாளும் பொழுதும்
நம் உறவு கரையும் சோகம் கூறு,
ஆரியன் அழித்த அத்தனை சொத்தனைக்கும் நீதி கேள்,
வையப் பரபபெங்கும் வாதை கூறு,
எம் பாதை கேள்,

நீதி நிமிர்வெய்ய நியாயம் கேட்போம்.
நிச்சயம் எம் பாதை விரிப்போம்.
பாரிலே எம் தேசம் சமைப்போம்.எம்
பாதகம் கரைத்து ஈழ பாகம் மீட்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்