செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,

மனமெரியும் நினைவுகள்தான்-எனினும்
மரணம் எழுதும் பாவியரை பார்த்திருத்தல் தகுமோ?
இனமெரியும் வேளையிது இங்கு நாம் இயங்கல்
தவிர்த்தல் தகுமோ?

எரிந்த கலம் மொண்டு-எங்கள்
விரிதல்களை வியாபிக்க
சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,
செருக்க வேண்டிய சேதிகள் பல உண்டு.

உரிந்துதான் உச்சம் கெட்டோம்.ஆயினும்
வரிந்து எங்கள் வயல் மொள்ள
கரிந்ததான கயங்களை காலக் கிரமம் மேவி
பரிந்தெடுத்து விரியல் தைப்போம்.

ஆயிலியங்கள் என்றுமே அகம் அதைக்காது.
போலியானதான பொக்கங்கள் அதை தரம் கொள்ளலாது.
வேலிகள் எங்கள் வெங்களங்கள் வெகுத்தெடுக்க-புல
தாலிகளும் தங்கள் தரம் தைக்க வேண்டும்.

வலி தந்த வரிகளை வயம் வகுத்து,
கலி கட்டின காயங்களை கலம் கலைத்து,
புல புத்திரர்கள் தங்கள் புயம் பூக்க வேண்டும்-ஆங்கு
வலம் வகுக்க வெங்களம் வேர்த்திருக்க புயல்
இங்கிருந்தே மையம் கொள்ள வேண்டும்.

புனலாக,அனலாக எங்கள் அலகெரிக்கும் ஆங்காரத்தை
கனலாக,களமாக்க அங்கத தளமெரிக்க,
வனமானதான எங்கள் வளம் மீட்க, நல் வாகை சூட
கனமான எங்கள் காத்திரர் மீண்டு
நனவாக்க நல்ல நயம் நீட்ட,

கனவாகா களம் அது கண் சிமிட்ட,
வானக வையர்கள்,மாவீரர்கள் வாழ்த்துரைக்க,
சேனை கொள் தமிழ் வீரர் தோள் கொள்ள,புல
கானகங்கள் அங்கே கரம் சுரக்கும்,அன்று

விதி சுமந்த வீணர்களின்
விழி பிதுங்க பழி கலைத்து,பண் இசைக்கும்
வழி விரிக்க விழித்திருப்போம்,
எங்கள் அகம் சுரப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்