
நீ என்பதும்,
நான் என்பதும்,
உறவு என்பதும்,
உற்றார் என்பதுவும்,-,சூழ
உள்ள சுற்றம் என்பதுவும், மற்றெல்லாம்
உயிர் இனம் என்பதுவும் எவ்வளவு உண்மையோ!.
அந்தளவும் உள்ள சுதந்திரம்,
சுகம், துக்கம் கவலை ஆதரவு,
ஆலிங்கனம்,அரவணைப்பு,தானே தீர்மானிக்கும்,
தகவுகள்,மற்றும் மரபுகள் எல்லாம்,
அங்ஙனம் அகமேந்தும் ஆர்ப்புக்கள் எல்லாம்!
ஏன்?
என்னினம் இழந்தது,
தமிழனாய் பிறந்ததா?
இல்லை நிச்சயமாய் இல்லை,நாம்
அடிமையாக அன்று ஆழுமைக்கு சிக்கியதன் சாரமே தவிர
வேறில்லை,
அடிமையாக,
வாழ்ந்து,வாழ்ந்து சுதந்திரத்தின் சூட்சுமம்_
சுகிக்க சுரணையற்று போனதே அன்று_
வேறில்லை ஏதுக்கள்,
சரித்திரம் இதைத்தான்,
தாக்கமாய் எம் சிரசறைந்து எம்மைப் பார்த்து
ஏளனமாய் உரசுகின்றது,
ஏ!
தமிழ,
சுயமான சிந்தனையை உன்_
அகம் பற்றினால்,
சரித்திரம் சாற்றும் சங்கதி புரிந்து கொள்வாய்,
சுயத்துக்காக எம் முன்னோர்கள்,
எமை ஆழப் புதைத்து,அடிமை விலங்கு பூட்டி
அவாள் மகிழ்ந்த அந்த ஆயிலியத்தை,
அதன் சுரத்தை
அடியொற்றி இன்று ஆரியன் எமதான எல்லாவற்றையும்
வேரோடு பிடுங்கி வெற்றலாக்க.
நாமோ!
இன்றும்
நாச்சியாரின் நாமம் நனைந்து,
எம் ஆரோக்கியமான அதிகாரத்தை,
அடுப்படி விறகாய்,
நிதம் எரித்து எம்மை நாமே?
ஆடிய பாதமும்,பாடிய பாட்டும்
அதன் ஆள வேரதை சட்டென அறுக்காது.
சொறியலில் உள்ள சுகம் போல
அது சொறிவதிலேயே செறிவாய்
ஆதலால் தான் இந்த வாய் எமக்கு!
அடக்கப்படுவதையும்,
அழிக்கப்படுவதையும்,
இன்னமும் கண்டும் காணாததுமாய்,
கோடரிக் காம்பாய் இன்னமும் எம்மில் பலர்,
இந்த இழி நிலை ஏந்தும்,
துரோகிகளை தூரெடுத்து துரத்த இன்னமும்,
வக்கில்லா எம் இனமே!
என்ன செய்வதாய்,
உன்மத்தம் உனக்குள் அகமேந்தும்?
ஆக!
தமிழனாய் இத் தரணியில் தர்மம் அகன்று,
பிறவி எடுத்ததாய் தாழ்வு தரம் கொள்ளும்,
தகம் அறு.
உனக்குள் உறங்கும் ஆளுமையை அரங்கேற்று,
ஒட்டுப் புழுக்களை நன்றாக இனம் காண்,
இன்றை இவ் இழி நிலைக்கு ஒட்டுப் புழுக்களும்
காரணம் என்ற கசப்பை உள் மனக் கொள்,
எமதான,
அன்றைய அரசு கவிழ்ந்தற்கும்,
இன்றைய எம் கொலுக்களெல்லாம்,
பிசிறேந்தி பொதிழிழந்து பொற்பாதம் அகன்றதற்கும்.
நாம் பிறழ்வதற்கும்!
நாளும் பொழுதும் நரம்பேந்தி எம் நாணயங்கள்
நரபலி ஆவதற்கும்,
எனினும்,
விழ,விழ
எழும் வீரியம் எமக்குள் மீண்டும்
விழிதெறியத்தான் போகின்றது,
அதற்கான ஆளுமையான புற ஏது நிலைகள்
இதைத்தான் நாளும்,பொழுதும்
எம் நரம்பேந்துகின்றது.
நாள் கொஞ்சம் ஆகலாம்,
என்றபோதும் இந் நிலைதான்,
கருக் கொள்,
காலம் எமக்கு கனலெடுத்து,
கற்றுக்கொள்ள கை காட்டி_
களம் காட்டும் சேதி இது,
போதும் இனி
போதி மரத்து வேர்கள் அங்கு
மண் பார்த்து,
மடம் கோர்த்து
ஆளுமை கொளமுன்
ஆர்த்தெடுக்கும் அனல் கொள்
இல்லையேல்
கட்டி இருந்த கோவணமும்,
இந்த காடையர்களால்
வெட்டி எறியப்படும்
வேளையே இங்கு நுகம் கொள்ளும்,
விழித்தெழு
விலை போகா மீண்டும் தலைக் கொள்ள
நிலையான எம் நித்திலம் மீட்க,
குலையாத கொற்றம் கொலுவேச்சும்,
நாள் குறிக்க,
மலையாக மனுக்கொள்வோம்.
வலையாத வழு நீக்கி,
விழுதான வீர விற்பனங்கள் வீதியேந்தி,
மருக்களம் மாற்றி எங்கள்
செருக்களம் செதுக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக