சனி, 11 ஜூலை, 2009

ஞாலமே! நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.

நிந்தனையின் முகவரிகள்.
நிந்தலையில் நினைவுரைகள்.
வந்தலைக்கும் வரபுரைகள்.
எந்தனைக்கும் எழுவுரைகள்?

பந்தனைத்தும் பதைபதைக்கும்.
உந்தலைகள் உவகை கரைக்கும்.
சிந்தனைத்தும் சிதவுரைக்கும்.
கந்தனைத்தும் கரவுரைக்கும்.

சொந்தமனைத்தும் சோகமுகைக்கும்.
சொறிக்கூட்டம் சொத்து சேர்க்கும்.
வற்றியதெங்கள் வரமென்றே.
முற்றிய முகங்கள் முழம் அளக்கும்.
தொற்றியே சிங்களன் சிரம் சிந்தும்.

கிழக்கதில் உதயம் கிறுக்கணைத்து கீர்க்க,
வடக்கதில் வசந்தமென்று வஞ்சனைகள் வார்க்க,
முடக்கமது கொண்டதுவா எங்கள் முற்றத்து முகைகள்?
கிடக்கும் கீலங்களிற்கு கிழக்கென்ன?வடக்கென்ன?
கீழ்த்தனம் கிரகிக்கும் கீழ்த்தனமாய் கிரகம் கிறக்கும்

உற்ற எங்கள் சுற்றங்கள் சேரார்,
உறுப்பறுந்த அவர் உள்ளங்கள் உசாவார்
மறுப்பேதும் பேசாமல் மகிந்தவின் காலில்
கறுத்தாலும் தங்கள் காந்தங்களை காப்பார்.
பொறுப்பற்ற இந்த போக்கிரிகள் எங்கள் முற்றத்தில் இனியும்
முறையற்று முகவிடல் முறையோ?

பெற்றதாயும்,.இறந்த எங்கள் பொன்நாடும்
நலிந்ததாயினும் நனிசிறந்தனவே.
கற்ற காதங்களை கைக்கொள்வோம்,
விறைப்பான எங்கள் முகம் கரைப்போம்.
காலக் கரைசலில் எங்கள் கலம் கோப்போம்.
ஞாலச் சிறக்கவே மீண்டும் ஞாயம் ஞாற்போம்.

இறந்த காலங்களே எதிர்கால எதிர்வுகளை
சிறந்ததாக்க சிறப்பான சிற்பமாகும்,
உறந்ததாயினும் உறுதியின் வேர் சேர்ப்போம்
கறந்தாக காலர் கருக்கும் கலம் காப்போம்,
வறண்டிடாத ஈழ வளம் நீட்டி,உறங்கிடாத
எங்கள் உரம் உற்சவிப்போம்.

இதயத்தின் அக,புற சூழலை,
இருப்பொத்த இயக்கத்தின் ஊற்றலை,
இலங்கும் இயங்கு தளம் நோக்கி,
துலங்கும் துயரம் துகில் கலைத்து,
விலங்கினும் கொடிய விறுமர்களை,
கலங்கிடும் காதக காலத்தினால்,
உலங்கிடாத உதய ஊற்றதினால்,
பெற்றெடுப்போம் பேறு அதனையே பேறாக.
பெறுதி பேற்றும் ஈழப் பேரதனை.

போரில்லா வாழ்க்கை போர்,
ஊரில்லா உறவு போர்
காரில்லா காலம் போர்
கரிகாலன் கவிக்கா காவியம் போர்.

வேரில்லா விழுது போர்
பாரில்லா பகையே போர்,
வாரில்லா வதையே போர்
வஞ்சியில்லா வாழ்வே போர்

முகவுரையில்லா முழக்கம் போர்,
அகவுரமாற்றா ஆளுமை போர்,
தகவுமை தகையா தாக்கம் போர்,
உவமை உறக்காத உரையதுவும் போரே.

பஞ்சங்கள் பரத்தும் பகையே போர்,
மஞ்சங்கள் மரத்தும் மரபும் போர்.
துஞ்சங்கள் துவக்கில் துவக்கமே போர்,
விஞ்சாமல் விதைக்காமல் வினையாற்றலும் போரே.
அஞ்சாமல் ஈழ போராட்டத்தை ஆற்றுதலே போர்
ஆகமம் ஆக்காமல் அகவெடுக்கும் அரும் பணியும் போரே.

ஆயுதமா?
அன்றி ஜனநாயகமா?
ஐயமின்றி ஆயுதமே,அஃதின்றி அரண் அகக்காது,
ஆய்ந்த்து அறிவுசால் திறனாற்றும் திரவியம்.
அனுபவத்தின் அகவைகள் தீற்றிய சுவடது.
ஆயுளிற்கென்ன
ஆகின் அடுத்த சென்மத்திற்கும் மறவா வடுவது.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
உண்மைதான் மகிந்தா மையிற்கும் இலங்கை வேந்தனே.
விதி இன்று விதந்து விகற்றும் விபீடனம் இதுதான்.
இலங்கும் இந்த அறவிடமுடியா கடனதனை கழிப்போமா,
களம் களிப்போமா?
திண்மத்துடன்,திடத்துடன் தீ தெறிப்பெடுத்து,
தீய்த்தல் தீரமாகும் திறவுகோல்.

நெருப்பாற்றில் நீந்திய நெஞ்சங்களை நெகிடெடு.
விருப்பாற்றில் விதைத்து விதைப்பிடு,
உருப்பாற்றும் உதமத்தில் உலவிடு.
வரப்பாற்றும் வாகையாய் வரவிடு.

சோகம் சொல்லி பாகம் மீட்க முடியாது,
பாகம் மீட்பின் பாவம் பரித்தல் பாகாது
ஆவியானவர் மீதொரு அகந்தையாய் அதமிடு
பாவியான எங்கள் பந்தங்களை அகமிடு,
மேவி,உரண் ஊடி,சீவி அரக்கர் சிரம் சீங்க
தாவி ஒரு புலியின் தாளடியில் தரணமைத்திடு.அவர்
சாவி கொண்டு தரணியில் தமிழ் பாடு.
காவியானதெல்லாம் காவியம் பாடும் களம் காத்திடும்.

மாற்றம் தரிக்கா மாற்றத்தின் மாண்பிது.
அற்றதாகினும் அரவணைக்க அகம் திறக்கும்.
ஆற்றல் அங்கு ஆய்வூட்டும்,அனுதினமும் ஆர்ப்பான
வீற்றல் விதைக்கும் வீரியம் சுருங்கியதே தவிர
முற்றாக ஒன்றும் அற்றுப் போகவில்லை அகம் கொள்.

வேளை ஒன்றை வேதம் அது வேயும்,
நாளை கூட அது நதியாய் நகரும்,
பாளை பூத்த பாரம்பரியமது பாரில்
ஊளை உற்று உறுப்பற்றுப் போகா உறுதியின் உறைவிடங்கள்.
நாதங்கள் நாற்றிசையும் நற்சேதியாய் நரம்பேற்றும்.
நூதலங்கள் நூற்றிய நுதமது,சோதி எங்காவது தன்னை
சோகம் சூட்டி சொரிந்ததுண்டா?
ஞாலமே!
நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்