ஞாயிறு, 26 ஜூலை, 2009

ஒளி வீசும் வழி திறக்க.


விருப்பெறிந்து,
சிரிப்பிழந்து
கருப்புத் தரிக்கும் காலங்கள்---
நெருப்பெறியுமா?இல்லை
நெகிழ்வில் நெளியுமா?

விதையிழக்கும் வீரியங்கள்
சதை பிளக்கும் சதிர்க் களங்கள்
கதை அளக்கும் கார் முகர்கள்
மன உள இழக்கும் ---எங்கள்
உரிமங்கள் ,உதிரர்கள் எல்லாமே!

விழலிற்கு இறைத்த நீர்போல்,
வினையிழந்து விறைப்பாரே,இந்த
நிலை இழக்க நிமிர் வெய்துவோமா?நிலத்தில்
நிலையெடுக்க நிதம் என்ன செய்வோம்?களம்
களையெடுக்க கலம் என்ன கொள்வோம்?

அனு தினமும் மனம் கொள்ளும் மாட்சி,--எந்த
மனு கொண்டு மக்கள் துயர் தீர்ப்போம்?
திறந்த வெளிச் சிறையில் அவர் தினம் மொள்ளும்
சோகம் எந்த சீரர்கள் சீவியம் பரிப்பார்?

குனிய, குனியக் குட்டுப்படும்
குதங்கள் தினமும் குதையும்.
மேனி அவிழ்க்கும் ஆடைகள் மேதாவித்தனமாய்
மேம்போக்காய் மேவும்,தனிய,தணிய
என் செயலாற்றும் எங்கள் ஏணம்?

அவிய, கரிய எரியும்
ஆவிகளெல்லாம் அதிர்க்கும்,
புவியில்,
பிறவிக் கடனாற்றா புத்திரர் பொலிவின்றி
அறமிழந்து ஆவி களையும் அறன்கள்

ஆற்றாமைகளே ஐதின்றி கலக்கும்.
செறிவு களையும்போது செருக்கு அழியும்.
அறிவு ஆற்றும்போது அருகல் ஆங்கு அழியும்,
முறிவு முற்றிப்போனால் முளையும்கூட முனகும்,பெருக
பொறிகள் பொதியலானால் முளையும் மூர்க்கம் முதிர்க்கும்.
எதுவோ?
எங்கள் ஆற்றாமையின் நோயகற்ற,
ஒற்றுமையற்ற இந்த இழிநிலை தமிழினத்தால்
எந்த வித்தகமும் வினைய ஆற்றாது,---தங்க
தலைவன் தகமை ஆற்ற,
தலை தூக்கும் தார்மீகம்,

என்றோ?
எங்கோ?
ஆயினும் அது
வன்னியின் எந்த மூலையிலோ!
பூமி கீறும் புத்த புத்திரர்களால் முளை,
மூச்செடுத்து முகம் மூர்க்கும் கால வெள்ளம்,
அது கால கட்டளை
களம் திறக்கும் காத்திரர்கள்
ஆளுமை வயல் வார்க்கும்.

கனதி சொரிய,
கரிகாலம் கனலெடுக்கும்—அதுவரை
வற்றலற்ற வகைகளை வார்த்தெடுத்து தமிழ
ஒற்றுமையின் ஓர்மம் ஒற்றுவோமா?
இல்லை குட்ட குட்ட குனிவோமா?

சுயநலங்களை சுட்டெரிக்கும்,
சூட்சுமம் எப்போ நமைக்கும்?
சுட்டு விரலால் சுட்டும்,
சுமை குறைக்க முதுகு சொறியும்,
கோதுமைகளை எந்த கோகுலத்தில்
கொலு வைத்து,எங்கள்
பொது நல போகங்களிற்கு,
நொதுமம்
நோக்கப் போகின்றோம்?
ஆக்கிய ராச்சியம் அகம் அமைக்கும்
ஆக்கம் எப்போ அரண் அமைக்கும்?


நோக்கம் ஒன்று நோ தவிர்த்தல் நன்று,
தாக்கம் தவிர்த்து தா தைரியம் தாக்கு,
ஊக்கம் என்றும் உளதானால் உனக்கும்
உண்டு ஆக்கம்,
யாக்கும் யாக்கம் நாம் நமக்காய் நார்த்தெடுத்து,
ஆர்த்தெடுத்து நறித்தலே நன்று,
ஒளி வீசும் வழி திறக்க.

ஒப்பற்ற தியாகம் தீ தீற்றும்
வெப்பகம் அங்கு வேதினில் வியர்த்தும்,
வைப்பகம் வகுக்கும்,
வார்ந்தெடுத்து
வயந்து நிற்கும் வயல் பரப்பு---நிச்சயமாய்
நிழல் நீட்டும் தாயக தரிப்பெடுத்து.
இது தர்மத்தின்
தார்மீகப் போர்,
விழலாகிப் போகாது,விதி கீறி வினையாற்றும்,
வித்தகம் எப்படியும் எங்கள் எழில் ஏற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்