சனி, 11 ஜூலை, 2009

துயர தூமங்களை துகில் உரிப்போம்.


நெருப்பாற்றில் நீந்தத்தான் பெருவிருப்பேற்றும்.
தெருப்பாற்றில் தேற தேற்றம் ஏதும் தேறா?
உறுப்பாற்றல் உருவேற்ற உவப்பு உருக்கொள்ளும்
மறுப்பாற்றல் மதிப்பளித்தால் மருக்கொள்ளும் மதியீனம்.

கறுப்பாற்றில் கதம் கலந்தோம் காலம் இது பொய்யோ?
அறுப்பாற்றில் அவன் அதைத்தான் ஆறுமினி நெஞ்சோ?
சேற்றாற்றில் சேர்ந்தாலும் சேதமதை செமிக்கும் சேந்தங்களே தேவை,
வற்றாறு இதுவென்று வதை கலத்தல் தகுமோ?

புள்ளி ஒன்றில் குவியம் கூடும்,
அள்ளி அதுவே ஆரை ஆற்றும்.
பள்ளி அதனில் கற்றதுண்டு இது
பாரதனில் பரந்ததுண்டு என்ற பாதை பற்றென பற்று.

அகத்தாலும்,இகத்தாலும் ஆற்ற ஏற்றும்
விகத்தை இனி வீதியேற,
உகந்ததான உறுப்பெழுதும் உற்ற ஊக்கம் அகமெழுதும்,
கசந்ததான காலம் கருக காத்திரமாய் கனதியேற்றும்
விற்பனத்தை வித்தியாசமாக விதந்துரைக்கும்.
சற்புலமே இனி சாவகாசமாய் சன்னல் திறக்கும்.

இழப்புக்கள், இனி வசந்தம் வரிக்கா,
தளம்பல்கள் என்றும் தளத்தை தரிக்கா,
விளம்பல்கள் வியக்கும் வீரியம் சுரக்கா,
குளம்பல்கள் குதிய கூர்க்கம் கூர்க்கா.

இலைகள் அங்கு உதிரும் போது,
இசைவடையும் வேர் இளவேனில் விரிக்கும்,
இயல்பிது.
வெட்ட,வெட்ட வேகம் உதிக்கும் களம் இது.
மீட்க,மிதக்க மீண்டு உதயம் ஊற்றும் உதயம் அது.
தலைகள் சாய்க்க தாகம் அது தாக்கமான
தகங்கள் தகைக்க தான்தோன்றும் தர்மம் அது.

துயர தூமங்களை துகில் உரிப்போம்,
உயர விரிய ஊக்கங்களை உரம் ஊற்றுவோம்,
கயரும் கர்மங்களை கானலாக்க கரம் காப்போம்,
கரித்ததை காலம் கரம் பற்றும்,
விரிந்த விரயமெல்லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்