வியாழன், 23 ஜூலை, 2009

அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!


இகத்தில் ஈழத்தமிழரின் இன்னல்கள்-அவர்
உயிர்.உடலழிப்புக்கள் சொத்து ஈறாக,சொந்தம்வரை
சொல்லில் செதுக்க முடியாத சோகங்களின் துயரம்
இன்னமும் எத்தனை காலம் எங்கள் இனம் சாயும்?

புத்தனின் புனிதம் என்பான்-இவன்
சத்தென எமைக் கொல்வான்-எதிர்த்தால்
ஏன் என்ற கேட்காமல் எவ்வழியோ? அவ்வழியில்
எங்கள் ஆத்மம் அழிப்பான்,

இன்று!
ஸ்ரீலங்காவின்
கோர தமிழின இனவழிப்பின் கோத்திரம் கோர்த்த
அகோர நாள்.
நினைவெழுதும் 26வது ஆண்டு,
வெந்து உடல் கருக்கி,வாளால்
வரைமுறையின்றி வெட்டி
எங்கள் இன வேரழித்த நாள்,

கொதிக்கும் தார் ஊற்றி சிங்களன் தர்மம் கொதிக்க
விதித்த வேட்கைகளின்,
வேட்கைகளின்,
வேதனை சுமந்த கரிநாள்,இனவழிப்பில் தன்
ஈடில்லாத நாட்டம் நட்ட புத்த தர்மத்தின் புனித நாள்,

தமிழர்க்கோ!
தம் தாயக வேட்கையின் தார்மீகத்தை-அவர்
தரப்பில் தாக்கமாய் தகித்த தர்ம நாள்-எதையும்
இழந்த பின் அதன் தரம் தாரிக்கும் தமிழனின்
தாழாமையை அவன் சந்ததி அழித்து,
அவன் சகமான அத்தனை உற்றம்,
உறவு,சொத்து சத்தான அத்தனை
முத்துக்ளையும் முளை கிள்ளி,நெரித்து,எரித்து
அகதியாக அவன் தாயகம் அனுப்பிய,
உருவழித்த உளவுரன் உறுத்த ஊன நாள்.

இதுதான் உன் தாயகமென காடையன் சிங்களன்-எம்
செவியறைந்து தேசமெல்லாம் சங்கூதி
சா தரிக்க எம் ஆவியெல்லாம் ஆதாரமற்று,
ஆடி அவலம் ஆகார்சிக்க எம் அங்கம் பிளந்து-உன்
சொந்த தேகம் சமைக்க கட்டளை இட்ட காவிய நாள்.

ஆம்,
ஆயுத ஏந்தலை எம் ஆற்றலிற்கு முரசறைந்த முகூர்த்தநாள்,
எத்தனை சொந்தங்களை தோட்டத்துடன் இழந்தோம்,
அது 1983.
இன்று
அதன் வெள்ளி விழாவை வெகு விமரிசையாக
ஆரியன் அதமத்துடன்,
அக்கம் பக்க பார்ப்பனனின் பங்குடன்
எத்துணை வீச்சுடன்,

இன்னமும் இந்த நீண்ட இடை வெளியை நீட்சித்த
எங்கள் மறவர்களின் மறமே,
ஆண்டு 1983-ன் பின்
எந்த இனவழிப்பையும் ஸ்ரீலங்க பயங்கரவாதியிடமிருந்து
பாங்காக காத்தது.
அந்த இடைவெளியின் ஈடாட்டத்தை
ஈழமமைத்த அந்த ஈகர்களை-வேரோடொழிக்க
வேட்டையாடினான்,வேட்கை தீர வேட்டையாடினான்,

இனவழிப்பு அவன் இதயம் ஏந்தியதால்,
யார்?
எவர்?
வயது,பால் வேறுபாடின்றி வேகமாகவே
இனவழிப்பு வேட்டை-அதன் எல்லை வரையில்
அது
ஆசுவாசமான வேட்கை கலைந்த வேட்டொலிதான்,
வெற்றிகரமான களம்தான் வேய்ந்து முடித்தான்-அத்துடன்
ஓய்ந்தானா?
அங்குதான் எங்கள் தானத்தின் மானம் ஏய்ந்தான்.
இங்குதான் எங்கள் வைரம் வரைந்தான்.

எங்கு?
எவர்?
எப்படி?
நுழைந்தாலும் எங்கள் காயத்தின் காரம்
காலம் மொள்ளும் வரை காயாது,
ஓயாது,
ஓங்கும் ஓர்மம் ஒரு விடியலிலே விதையும்,
இழந்தது
முடிந்தது,
எரிந்தது,
படிமம் படித்து ஆங்காரமாய் எதிரொலிக்கும்
ஏங்கும் ஏதிலங்கள் அங்ஙனமே
ஆக்கம் தரிக்கும்,
வீழ்ந்தது
எழத்தான்,
ஆயின் எரிந்தது.
விரியத்தான் என்ற விசைகள் திசைகள் தாங்கும்.
வியப்பான விதையல்
நிச்சயம்
எம்
தேசர் தகிப்பார்.அந்த
தேனான தேசிய கீதம் தேகம் சிலிர்க்க-தமிழ்
தேசியர் எம் தேசமெழுதுவார்.
ஆடி மாத அவிப்புக்ளை அகம் ஆய்த்து.

எங்கள் தேசத்திலும்
ஒரு நாள் அந்த விடியலின்
வெள்ளி வீசத்தான் விதிக்கும்.
விரியும் வீரம் சொரியும், கரிக்கும்
சோகமெரித்து,ஆடி இனவழிப்பு
ஆரியனின் தேசமெரிக்கும் தேதி
தினமெடுத்து,எங்கள் தினவெடுத்து.
அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்