வியாழன், 9 ஜூலை, 2009

மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.


நாங்களும் நாட்டாமையாற்றும்
நயமான துரோகிகளே,
தீ அதனை தீய்க்க தீரர்கள் அங்கே தீவிரமாக,
நாங்கள் இங்கே நமைச்சல் நொடுக்கி,சொடுக்கி,
தாட்டதெல்லாம் எங்கள் தார்மீகங்களை.

நாட்டுக்கு நாம் ஆற்றிய அருஞ்செயல் யாது?
சுயபரிசோதனையில் சுயமாய் சிந்தி!
பாட்டுக்கு சில பாட்டுக்களையும்,மாதாந்த கொடுப்பனவுகள்
என்ற பெயரில் பல வயிற்றெரிச்சல்களையும்,
புறம் பாட புதுவகையான பறங்களையும்,
எங்கள் பாரர்களிற்கு நாம் போர்த்திய போரஞ்சலிகளையும்
தவிர,
தீவரமாய் என்ன திறனாற்றினோம்?

உள்ளது உவப்பில்லைதான்
ஒப்புக்கொள்! புல உறவே,
பூகம்பாமாய் அங்கு போரரங்கு பூப்பதை
ஏகம்பமாய் எம்மவர்கள் ஏற்ற
வீட்டுக்கு ஒரு வீரரை வியாபிக்க விரைந்தபோது,
ஆரவர்கள் ஆதங்கமாய் ஆதங்கித்தார்?

வன்னியில் வில்லங்கமாக ஆட்களை
அணுகுகின்றார்கள் என்று இங்கு வேதனை கூட்டம்
கூட்டிய கூதர்கள் இங்குதான் இகமெய்தார்கள்.
வெஞ்சின வார்த்தைகளால் எங்கள் வேங்கைகளை வெய்தார்கள்,
அஞ்சன முகமெரித்து ஏதோ மாதாமாதம் மடிப்பிச்சையாக
சில சில்லறைகள் சிந்தியவர்கள்,
தாம் ஏதோ தாங்கி ஈழத்தை தரணியில் தேக்கியதாக கூற்றிய
பொய்யா மொழிகள் எத்தனை,

விடுதலையின் வேதினியில் வேர்ந்தவர்களை
யார் காலில் வீழ்ந்தும் வெளியில் எடுக்கவேண்டும் என்று
இரவு,பகலென்றில்லாமல் எத்தனை பேர் இங்கு ஏகாந்தார்கள்,
போர் மையம் ஒன்று பெரும் பாதை பதிப்பதை,
வேர் கொண்டதை வேதித்த வேங்கைகள். வெப்பியாரம்
அகற்றவேண்டி, ஆற்றவேண்டி ஆட்களை ஆதங்கமாய் அணைத்து கேட்ட
போதெல்லாம் வேற்று முகம் காட்டியதன் வேதனையில்
இதுவும் ஒன்று.
புலவாழ்வின் போதை வாழ்வேற்றும் போதியர்கள் பலர்
ஈழ வாழ்வதை இதமாக்கும் எந்த நற் சொயலாற்றினார்கள்?
போர் ஓய்வு காலத்தில் போய் அங்கு தங்களின் அகதி வாழ்வின்
இன்னல்களை மறைத்து போலிவாழ்வு அங்கு போற்றியவர்கள் பலர்.

தன் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,தங்கை,
மைத்துனன்,மாமா,அத்தை இப்படியான சொந்தங்களிற்கு கூட
சோக முகம் காட்டி சொத்தழித்துசொந்தம் அழித்து
சொரூபம் காட்டிய பரதேச சோதியர்களை சோதியாய்
உந்தன் மனமும் மனப்பூர்வமாய் அறியும்.
இவர்கள் இங்கு ஏதும் ஆதங்கம் ஆய எதுவுமே ஆர்க்கவில்லை.

இன்றோ!
தன் வீடு பற்றும் போது பற்றி அவர்களின் பரம,பலமதை
தன் எண்ணத்திற்கே ஏலம் ஏய்த்தனர்.
போராற்றல்களை போற்றுவதற்கான கடைசி
அக,புற செலவுகளிற்கு கூட சல்லிக்காசு ஈனாத ஈனர்கள்,
எடுத்திற்கெல்லாம் எல்லாளன் படை பார்க்கும்,எல்லாம்
காக்கும் என்று ஏனோ,தானோ என்று மென்றிருந்த துரோகிகள்,

வன்னியில் வகையாக பகை பார்த்தெடுத்து
அன்னியனின் ஆற்றல்களை படைபரப்பி
உன்னி,உன்னியவன் உய்த்துணர நாம் செய்த பிழைகள் கணக்கில் அடங்காது.
நவீன உலக ஒழுங்கிற்கு ஏற்ற எந்த கருவிகளையும்
எங்கள் காத்திரர்களின் பாத்திரத்தில் பாகை கொள்ளவிடவில்லை,
அதற்கேற்ற பங்களிப்பு பாகையாகக் கூட பரவவில்லை.
பரத்தி,பார்த்து,பேணி,வேணி வளர்த்த
எங்கள் கரிகாலனின் காலத்தேவைகளை கணக்கில் எடுக்கவில்லை.
ஏற்றி வந்த ஏதனங்களை ஆரியன்
பார்ப்பனர்களின் பலத்தால் பதினான்கிற்கு மேற்பட்ட
கப்பல் அழித்து எங்கள் பாதுகாப்பான ஆயுதங்களை மட்டுமல்ல,
பாரிய போராளிகளையும் அழித்தானே,

அப்போதென்றாலும் புரிந்திருக்க வேண்டும்,இங்கு
வேணுதல் பட்டும் பாத்திரம் நிறைக்காது,
விழ,விழவீரர்கள் விழைந்தமாதிரி,
அழிக்க,அழிக்க ஆயுதம் நிறையவில்லை,
ஆக.
ஆயதமும் ஆராது,போராளிகளும் போதாது,
நவீன ஆயுதமும் இல்லை,நாடமைக்க கருவிகளின் வீச்சும் வினையவில்லை,
ஆனால்
ஊகங்களும்,
ஊடகங்களும் ஊதாரித்தனமாக,
மிதமிஞ்சிய கற்பனாவாதங்களினால்
நம்பற்கரிய நம்பிக்கையை நஞ்சாக எங்கள் நாமம் தேய்த்தார்கள்.

தொலைக்காட்சிகள் தோற்றிய தோதில்லாத தோற்றங்கள்,
பார்ப்பன பாரதத்தின்,சீனனின்,பாகித்தானின்,
பார் புல மேற்கத்திய நாடுகளின்
வீச்சுப் புலங்களின் விதத்திற்கேற்ப வித்தியாசமான
வினையாற்றும் கருவிகளை நாம் கொள்வனவாக்க
கொடையாற்றவில்லை,
கொண்ட நிதியின் விண்டங்களால் விதியாற்றவில்லை,

என்ன செய்தோம்?
எல்லாவற்றிற்கும் அண்ணன் ஆர்ப்பான்,புலிகள் புலிக்கும்,
எப்படி?
இப்படி?,அப்படி!
ஒரு ஆற்றலற்ற வேற்று முகம் காட்ட முடிந்தது?
கள யதார்த்தம் யார் கண்ணிலெடுத்தார்?
நிதி மூலம் என்ன வெறும் பணியாற்றினார்?
விஞ்ஞானத்தின் வேகம் எங்கள் வசமாக்கியிருந்தால்,
எங்கள் விண்ணூர்திகளிற்கான
கருவிகளை களமாக்கியிருந்தால்?

எத்தனை வீதமானவர்கள் இந்த அரும்பணியை ஆற்றினார்கள்?
நூற்றில் நூற்றது வெறும் முப்பது வீத மக்களைத்தவிர.
மற்றாரெல்லாம் மாற்று முகம் தோற்றிய வேசர்கள்,வேடர்கள்,
எழுந்தமானமாக எழுதிய நிதியின் திகதிக்கு திதி தீற்றியோர்
எத்தனை பேர்?
ஆழத்தனமாக ஆற்றலற்ற ஆளுமைகள் ஆற்றியோர் எத்தனை?
பற்றவர்களை பதராக்க மற்றவர்கள் மாய்த்த மாயங்கள் எத்தனை?
உற்றவர்களின் உயர்வான ஒப்பற்ற சேவைகளை சேதாரப்படுத்தியோர்கள்
எத்தனை?
குற்றம் கூற்றியே குரல் கழித்தோர் எத்தனை?
மற்றவர்களின் மனம் மாற்றியோர் எத்தனை?
இத்தனை அத்தனை பேருமே அன்று ஏன்
இன்றும் தங்கள் வாசல் பற்றி எரியுதாம்,எங்கள்
தானவர்கள் தாக்கம் என்னவென்று!
வேதம் கரைக்கும் குரவர்களே!
வந்தபின் காக்கும் மீனின் தளமில்லை இது,இதை
ஏற்கெனவே ஏற்றியிருக்கவேணும் உங்கள் தரத்தை.

ஆக,
போராட்டத்திற்கு ஆட்களையும் விடார்,
போராட்ட கருவி கொள்ள காசும் கொடார்,
தேரோட்டமாக்க ஊர்வலமும் வரார்,தேசமெங்கும்
பாரோட்ட பவ்வியமாய் பலமும் தரார்.
ஏரோட்டத்திற்கு ஏதனமாய் என்னத்தை ஏற்றிவைத்தார்?
இன்று வைகின்றார்.

இவர்கள் தமிழரா?
மனிதரா?சகமான உறவினரா?
இன்றும் வேறு முகம் மூட்டி முதுகு சொறியும் இவர்களிற்கு
கொன்று குவிக்கும் மகிந்தாவிற்கு,அந்த கோத்தபாயாவிற்கு,
கொற்றத்து குடை பிடிக்கும் கோதாரி கோடரிக் காம்பாகவும் இன்றி,
மதில் மேற் பூனையான பூசாரி இவர்கள்.

என்றுமே காத்திரமான மனமற்ற
இந்த மாந்தர்களிற்கு ஏன் தமிழும்,தமிழீமும்,
இன்றொருத்தன் கேட்டான் தமிழீழம் நான் என்ன கேட்டேனா?
என்னவோ,
இவனிற்கும் இவன் சந்ததிக்குமாகவா தமிழீழம்.
பொதுவுடமை பொதியான்,இவன் போல் எத்தனை
போக்கிரகள் போதிக்க நான் புத்தனும் இல்லை,
யேசுவும் இல்லை,அல்லாவும் இல்லை

மனிதம் மாதிக்கும் மானிடன்.
புனிதம் ஆதங்கிக்கும் ஆத்மன்,
வினையோகங்கள் விகற்கும் வீரியன்,
மனித யோகங்களிற்காய் மரிக்கும் மாதவர்களின்
மையத்தை மைப்பவன்,ஆதலால்
ஈழத்தை ஈர்க்கும் ஈகத்தவனின் இயல்பில் இயைந்தவன்.
அதனால் இழைந்தவன்.

என்னத்தை கிழித்தோம் ஈழ விடுதலைக்காய்.
ஊனக் கண்ணீர் உதிர்த்ததைத்தவிர,நாம் வீணர்களே
விதி யுரைத்து வீதியிறங்கா கயவர்களே,கால மொள்ளலில் துரோகிகளே!

காலக் கதிரோனிற்கு காதகமாய் நாம்
மீளாத் துரோகம் துய்த்தோம்,
துய்ப்போமா?அன்றி விற்போமா?
என்றுதான் ஏகம் அகற்றி வீசமான வினையாற்றுவோம்?

ஈழம் என்பது கடைச் சரக்கல்ல,
கடைந்தெடுக்க வேண்டிய காலச் சுரங்கம்,
இங்கு வெறும் பார்வையாளர்கள் வேணவே வேண்டாம்,
பாறாங் கல்லுடைக்கும் பக்குவம் உள்ளோர்,பாகமாய் பற்றவேண்டும்.
ஊற்று அருவி போல் உதவ நிதி வேண்டும்,வேற்று முகம் காட்டா
வெறும் வேணவாவை வைது,
ஈற்றும் இலட்சியம் இலங்கும் வரை இயங்கும் பிடிமானம் வேண்டும்.
வற்றாத வகை வாக ஊற்றாக உறுதியுள்ளோர் வேண்டும்,
குற்றம் குறை கூறா குவியர்கள் வேண்டும்.

தலைமையின் தகத்தை தாங்கும் வற்றா மன உறுதியுடையோரே வேண்டும்,இதை அனைத்தும் ஊடேற்ற உற்ற உறவுகளின் தக்க
தரவுள்ளோர் தரமாக வேண்டும்.
ஒற்றுமையின் ஓர்மம் ஒப்பேற்றும் ஓர்மமுடையோர் வேண்டும்,
இத்தனை தகமைகளும் ஏலவே இருந்ததுதான்,
அயினும்! உற்ற வேளையில் அற்றுப் போகும் அக்கப்போர் ஆற்றும்
முட்டாள் தனம் முற்றுப் பெறுதலும் வேண்டும்.

இதற்கான வேளையில் இன்று
பத்மநாதன் பகுக்கும் பத்மாசனத்தை,
வியாசத்தை விசாலமாக வியற்போம்,
அப்பியாசமாக இது அரங்கேறும் ஆற்றல்களை அது
ஆத்மீகமாய் ஆதங்கிக்க,
அனுசரணைகள் சுரணைகள் தவிர்த்து சுனையாக சுரக்க வேண்டும்.

பற்றுடையோரின் பகுப்புக்களை பாங்காக பரிசீலித்து
உற்ற உவப்பான,உயர்வான உள்வாங்கலை உளம் உய்த்து
மற்றெல்லோரையும் மாதவமாய் மனிதாபித்து,
மகுடம் மேற்றும் மா வித்யாசனம்
உத்விக்க உகமாக உரமிடுவோம்,
அஃதின்றேல் நாம் இன்னமும் திருந்தா துரோகிகளே.
பஃறு ஆற்று படுக்கைகளை வெறும் பாத்திரத்தில்
பங்கெடுக்கும் பாவியரே,
திரும்பும் திசை மாறலாம் விரும்பும் விசைமாறாது,
பகலவன் பகன்றது இன்று பாத்திரமாகுது,
கரு அவ்வளவுதான்,காத்திர,நேத்தரம்தான் நெடியது.
உரு அது கொள்ள உற்ற வழியிது.

போராட்ட வடிவம் உலக ஒழுங்கமைப்பில்
மாற்றம் தேற்றவேண்டிய மாற்றுக் களமிது,
இலட்சியம் இகம் மாறினாலும் தடம் தடையாதது.
மலர்ச்சி வேண்டின் மாற்றுப் புரட்சியும் வேண்டும்.

இனி இடர் களைய வேண்டுவனவையெல்லாம்,
தனி தனம் தழைய தாண்டுவனவெல்லாம்,
புனிதம் பூரிக்க புலர்வின்றி மலர வைப்போம்.
மனம் தோறும் தினம் இதையே தீற்றுவோம்,
மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்