புதன், 15 ஜூலை, 2009

செங்கதிர் ஏந்தி நிற்கும் எங்கள் சேந்தல்கள்.


நினைவே சுமையாகும்-
இந்த நீட்சி உளவாகும்-
கனவாய் அது போகும் காட்சி
தினம் நோக்கும்.
கானல் கதைந்திருக்கும்
காலம் அதை சுகிக்கும்
கோலம் மாறுமா?
எங்கள் கோலம் மாறுமா?

வானம் வெறித்திருக்க எங்கள்
வாசல் கருத்திருக்க,முள்ளி வாய்க்கால்
முகை விடுமா?அந்த வெள்ளி முளைக்குமா?
உள்ளம் சொல்லி செதுக்குமா?
உள வன்மம் உறக்குமா?

கானம் கலம் காய்க்கும்-எங்கள்
தானம் அதை காக்கும்,ஊனம் உலைத்திருக்க
ஈனம் இழையுமா?
தமிழ் ஈழம் மலருமா?-தாள
கனவாய் உதிருமா?
நனவாய் நகலுமா?

வேணம் எமை வேர்த்தும்-அந்த
வேதம் தினம் சீற்றும்-தமிழ்க்
காலம் மலருமா?நம் காதில் ஒலிக்குமா?
கரை கண்டே கலக்குமா?

ஏதோ விழைந்தாலும் எங்கள் ஏகம் எரிந்தாலும்
ஊரே அழிந்தாலும்,எம் உறவே உலர்ந்தாலும்,
பாரே பழித்தாலும் எம் பாக்கள் ஓயாது,அந்த
பருவம் பதியாமல்,
எம் உரிமம் உகராமல்,
எங்கள் உரிமம் விதியாமல்.

கல்லறை கனம் கனத்தும்-அது
கர்வமாய் கரம் இறுக்கும்,சொல்லொளி செதுக்காத
செங்கதிர் ஏந்தி நிற்கும்,
எங்கள் சேந்தல்கள்
சங்கெடுக்கும்,அதில் சாசனம் நிறைவேறும்.எங்கள்
சாகசம் தனை ஈர்க்கும்.
எங்கள் சாசனம் சகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்