வியாழன், 2 ஜூலை, 2009

நீர்த்திடாமல் எம் நீத்தலை நிறுத்தி.


செந்தழிழ்ச் செல்வர்கள்,
செவ்வானம் செவித்தனர்,
சேவித்து,சேவித்து சேந்தனாய் கண்டனர்
சோழனின் சொத்தென சோபையில் சொக்கினர்.

பைந்தமிழ் பசுமையாய் பாகாய் பகிர்ந்தனர்.
வையத்தில் தமிழதன் வாழ்வினைக் வார்த்தனர்.
கையதன் காத்திரமாய் காலத்தில் கணித்தனர்.
மெய்யென மேதினியில் மேவிட மேவினர்.

உத்தம வீரர்கள் உறுதியாய் உரைத்தனர்
வித்தென வீழினும் விதமதை விதைத்தனர்.
மத்தென மடையும் மகரரை மதைத்தனர்,
மாவீரம் மகியவே மகிழ்வென மதித்தனர்.

புத்தனின் புத்தியை புவியினில் புதைத்தனர்,
செத்தவர் ஆக்கியே செவியினில் செரித்தனர்,
புத்தவர் பூட்டிய புலமதை புதைத்தனர்,
அத்தவர் ஆக்கிய அகிலத்தை அரங்கினர்.

பைந்தமிழ் பைந்தர்கள் பாவியவன் பாழ் சிறையில்,
முந்தியவர் முதிர்ந்த மூலம் மூக்கர்களின் முகவுரையில்,
ஏந்தியவர் எரித்து துவைத்த தீபங்களை தினம் திரைக்கும்,
வாந்தியவர் வரிந்து வைத்து வகை,வகையாய் வரம் அறுக்கும்,
பாந்தியத்தை பரமெங்கும் பாகமாய் பரவெடுத்து,
அந்தியர்கள் ஆக்கி வைத்த வெப்பகத்தை வேதினியில்,
வெகுண்டுரைப்போம்.

வேதனையுடன், சீழ் மணக்கும் ஊனமதை,
வாதனைகளின் வைரசுகளை, உபாசனையாக உரைக்காமல்,
ஆசனமாய் அதைக்காமல்,
பூசனங்களை புகையாமல்,புவிப்பரப்பில் புடமேற்றி
ஆதனங்களிற்கு ஓர் ஆக்கமான மறுதாக்கம்,
ஆற்றவேண்டி அகிலமதனில்,
ஆக்க பூர்வ வேள்வி வேற்போம்,

உயிர்த்தெழுந்து உரம் ஊற்றி,
பயிர் வதைந்த பாதம் நோக்கி,
பாரில் எங்கள் பாகம் தேற்போம்,
பார்த்திருந்த பாவம் பகற்போம்,

புலந்திருந்த புலர்வெடுப்போம்,
புவியில் பூக்க புலம் கேட்போம்,
மலர்ந்திருந்த மகம் மீட்க,
உலர்ந்திடாத எங்கள்
கரம் நீட்போம் காலக் கொள்வனவாய் எம்,
கலன் கலப்போம் காத்திரமாய் அதை கதிரெடுப்போம்.

வித்தகம் விதைந்ததாய் வீரியம் விரிக்கும்,
பொத்தாம் பொதுவான போக்கிரத்தை போக்கவே,
சித்தகம் சிறக்கவே சிரையாத சிரம் சிறப்போம்,
அத்தகம் அரங்கேற ஆவனவை அறமெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்