திங்கள், 13 ஜூலை, 2009

உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது


வெப்பகங்களை உறிஞ்சும்
பூமித்தாய் இங்கு தன் வேதம் தவிர்க்கின்றாள்,
காற்று கூட கதிகலங்கி காயமாக்குகின்றது.
வீசம் தவிர்க்கும் மரம்,செடி,கொடியென
இயற்கையின் அத்தனையையும்
செயலிழக்க சேடம் இழக்கின்றது.

கொடியன கூடிக் குதூகலிக்க,
கலிகாலமென காலம் காட்டூவோரே,இதன்
சாரம் இதுதானென வேற்றுமுகம்
காட்டும் கயம் அறிவோம்,
பரம சிவன் பாம்பென உன் பாதம்
யாவும் அறிவோம்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை போல எம்
ஆசை கரைய எந்தப் பூ சர்க்கரை,
இழப்பூ வா,
இனப்பூ வா
இல்லை தமிழர் தாமென தரம் பாறி
ஈனர் கால் நக்கும் ஒட்டுப் பூ வா.

இருப்பதை இழந்து இல்லாததிற்கு ஏங்கும்
கானல்களின் கதைப்பூ வா?
கிழக்கில் உதயமென உறுப்பேற்றி,உறப்பறித்து,
அன்று,
உலக வலத்தில் கடன் வாங்கி காதகர்கள்
இன்று
வடக்கில் ஏதோ வசந்தமென சந்தம்
முடக்கி மீட்க தேர்தலாம்.
தமிழர் தினம் சொத்திழந்து,
சுகமிழந்து,உற்ற இனசனம் எல்லாம் இழந்து
ஒரு வாய் கஞ்சிக்கு காயும் இந்த களத்தில்
தேர்தல் ஒரு கேடா?
யார் வாழ இங்கு தேர்தல்
நீர் வற்றிய செடிக்கு வசந்த விழா வா?
பேர் தேடும் இனத்திற்கு பொன் விழா வா?
பார் இதை பாராது.
எனும் பனித்திரைக்கு பவள விழா வா?
வைரங்கள் இங்கு வதைத்ததால் வைர விழா,
ஆம்,
பேரினவாதியின் பொற் கோர இனவழிப்பிற்கு
இங்கு வைர விழா.
வா,
வையகமே வன்னியின் முள்ளியவளையில்
முகைகளுடன் எங்கள் மூர்க்கம் முடித்ததிற்கான
உன் கொள்ளுப் பேரனுடன்
கொட்டும் முரசொலிக்க கொள்ளு நீ பவள விழா.

ஆயினும்!
இந்த அகத் தாரையில் நீவிர் ஆற்றிய
அத்தனை வடுக்களையும் களையாமல் நாம்
சொத்தாக சேர்த்திருப்போம்,அதுதான் எங்கள்
வாகைக்கான இடுகற்கள்,
இந்த கற்களின் மேலொரு காத்திரம் கருத்துவோம்.
செத்தாலும் செருக்காற்றா சேடம் இது.
உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது
ஆதலால் அடுத்த தலைமுறைக்கும் அகலாத
ஆர்ப்பது.

அகலெடுக்கும் ஆற்றல் நிச்சயம் சயனம் சரிக்கும்,
நகலெடுத்த நச்செல்லாம் நியம் நீர்க்கும்,
புகலிடத்து புவனமெல்லாம் பூடகம் பூரிக்கும்.பூவகற்றிய
புலமெல்லாம் புரட்சியின் புலம் புகும்.
தாக்க
தக்கதெல்லாம் தரமமைக்கும்,வேர்க்கா எங்கள் வேதம்
ஓங்க ஒலிக்கும் ஒத்தகைத்த ஓர்மம் ஓரிக்கும்.

ஆய்க்கினையின் அகலங்கள் இன்று ஆங்காரிக்கும்.
நிதம் நீர்ப்பெழுதி அவர்கள் தம் ஆத்மம் எரிக்கும்.அனுதினமும்
முட்கம்பியின் வேலிக்குள் முகம் அழுகும் இனம்
முதுசம் இழக்கும்,ஆட் கொள்ளா அரங்கதனில் அவர்கள்
அத்தனையும் அவலம் ஆட்கொள்ளும்.

கேட்க நாதியற்ற ஈன இனமென ஆரியர் அரண் அமைக்கும்,
விதம்,விதமாய் அவர் விற்பனங்கள் விதமேறும்,மீற
உதமம் உருப்பி உள்ளதெல்லாம் உறுத்தெறிந்து சாக்காட்டும்
சாகசமாய் புலியென முத்திரையை முதுசமாய் மூட்டும்.

வையகம்.
என்றுமே எங்கள் வளம் காக்கா,
கையகம் காக்க கார்ப்புலத்தை கரைத்தெறிக்க,
தையகம் நாங்களே தைக்கவேண்டும்,எனவே
பொய்யகம் பூளும் பொக்ககங்களை பொசுக்கி,போர்
பொய்யா போர்க்களத்தை பொருத போர்முகம்,
பொருத்துவோம்.
இனமே,
என் சனமே
யதார்த்தத்தை நீ யாசிக்க மறந்தால்,எஞ்ச
ஏதும் மிஞ்சா இழி நிலைதான் இந்த இகம் தாங்கும்.
வாரா,வாரம் ஆரியன் இனமழிக்கும் தொகை????
ஆம்,
இன்னல் இகைக்கும் முட்கம்பி சிறையினில் இருந்து
சிரம் தறியும் எங்கள் சிற்பங்கள்,
நாள் தோறும் காணாமல் போகும் மர்மத்தொடர் அது.
மனமறிந்து சொல் உன் மனதிற்குள் எரியும்
அந்த அக்னியின் ஆயிலியத்தை ஆற்ற என்ன
செய்வதாய் ஏகந்தரிக்கின்றாய்?

ஆண்டவனை மண்டியிடும் அற்பத்தனத்தை அறுத்தெறி,
ஆற்றலாக்க ஆதங்கமாய் அணையிடு,ஆகுதியான சித்தர்களை
அகம் கொள்ளு அணையாத அந்த சுரம் சுகிக்க சித்தம் கீறு,
ஆரிய வதம் வதைக்க வற்றாமல் எங்கள் வரம் சேர்ப்போம்.

கீற்றாக கீதம் கிழையும் கொற்றம் கோர்ப்போம்.
முள்ளி வாய்க்கால் வாயில் வெள்ளி முளைக்கும்,
முதுசம் முகைத்து அது பள்ளி பகற்கும்-பார்
கிலேச மாற்றா கிருத்தகம் விருத்தகம் விஞ்ச.
ஆற்று உன் ஆவேசத்தை ஆயிலியமாய்,அரணமைக்கும்
அவோரகணத்தை ஆரோகணமாக்கு வெற்றிச் சங்கது ஊதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்