வெள்ளி, 17 ஜூலை, 2009

எவ்வொளியை உருக்க? எவ்வொளியை பெருக்க?


நித்தம் குதூகலிக்கும்
முத்தம் முதுமை ஒழிக்கும்
சித்தம் சிறுமை தறிக்கும்,
வித்தகம் வீற்றும் மழலைகளின் மழை.

யுத்தம் யுகித்திருந்தாலும்,
எத்தனே வதியிருந்தாலும்,
பத்தனே பதித்திருந்தாலும்,
முக்தனே முகிழ்ந்திருந்தாலும்,

ஒரு
மழலையின் மொழியில்
அத்தனையும் மறந்திருப்பான்,
அத்தனை ஆசுவாசமான சுவாசமது,
சித்தம் அனைத்தையும்
சத்தென சுகிக்கும் சூரியம் அது.

யார்,எவர்,எங்கே
எவருடைய குழந்தையானாலும்,
எந்த கோத்திரமும் கொலுவமைக்காமல்,
சாதி,மதம்,இனம் எதுவும் ஏகம் ஏற்காமல்
கொலு ஏந்தும்
வலு
இந்த
மழலைகளின் மையல்கள்,

சிரிப்போ,
அழுகையோ,
எதுவானாலும் வலுவான இந்த வசந்தங்களையும்,
கொலையன்,
புலையன்,பூமி சுவாசித்தலின் சுவாசமகற்றி
புலைத்த அந்த கோரியனை,
வையகத்தின் எந்த வைப்பகத்தில் வதையிடலாம்?

ஒன்றா?இரண்டா?இந்த இரண்டகனின்
வஞ்சனையில் இருளேந்திய எம் பிஞ்சுகள்.
பிசாசுகளிடம் கூட இரந்தல் அகமாற்றும்.

ஆயின்
இந்த
பிரமேத்திகளிடம் பிசாசுகளே பிச்சை கேட்கும்
பிரம்மங்கள்
இப்போ
மகிந்தாவின்
மையப் பூமியான மயானத்தில்

யார் தாண்டப் போகின்றார்கள்?
யம காண்டம்?
எவர் இனி இங்கு ஏற்றல்களை ஏற்றமுடியும்?
பார்
எந்த பாத்திரத்தை பகித்தாலும்
வகி பாகம் பாலம் பகிர,
யாத்திரம் எந்த யந்து யதிக்கும்.

ஏக்கத்தின் வீச்சில்
வினையாற்றா எங்கள் விதைகள்.
ஆம்,
தேசக் குழந்தைகள்,
ஈழ பரிபாலனர்கள்
இவர்களின் பாதை
வீச்சற்றுப் போகுமா?
வீரியம் தளை விடுமா?
ஆரியம் அழித்தொழிக்க
அடிச்சுவடே அரணற்றுப்போகுமா?

வாழ்வென்ற வதை குழத்தில்
குழலற்றுப் போகும் எங்கள்
இளைய,இனிய
தலைமுறைகளிற்கு நாம்
காற்றும் கடமை தான் என்ன?
காலத்தை கைகாட்டி கைகழுவும்
யாலமே இனியும் யதியென்றால்,
எம்
முற்றத்து
மல்லிகை முதல்
மையம் மகித்த
அத்தனை
அவையங்களையும்
வசதி கருதி மறந்துவிடுவோமாக.

அஃதின்றேல்
அர்த்தமான
புனருத்தானருங்களிற்கு
புவியில் ஓர்
புதுத் தரமாற்றுவோம்,
யுகம்,யுகமாய்
யுத்தம் யுதிக்கும்
எங்கள் யுத்தர்களை
உதயமாக்க உற்ற வழி உகுப்போம்,
மற்ற மையல்களை மருளாக்கி.

உங்கள் ஊகங்களையும்,
புலம்பல்களையும்,வக்கணைகளையும்
கணையகற்றி காலக் கடமைக்கு
கட்டியம் கட்டுவோம்,
காலத்தேவனின் காத்திரமான கட்டறைகளை
காத்திரமாய் கனதியேற்ற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்