வெள்ளி, 10 ஜூலை, 2009

அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.


திரும்பும் திசையெல்லாம்,
திருவினையாற்றா எங்கள் திண்மர்களே தினைப்பு,
விரும்பும் வினையாற்றா விதியதுவா விதிர்ப்பு?
துரும்பும் துன்பின்றி தூய துய்க்காது துணையிருப்பு.
அங்கது போல் வாழ்வதில் ஆனதென்ன அகப்பு,
தங்காத சுதந்திரமின்றி தாங்குவது என்ன இருப்பு.
அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.

கரும்பது விழையவென்றாலும்,கல,கலப்பாய்
நெல்லங்கே விழைப்பதென்றாலும்,ஏன்
பூந்தோட்டமே அங்கு புலரவென்றாலும்,
கால் பந்தாட்டம் அங்கு கலவ என்றாலும்,
துடுப்பாட்டமே அங்கு துலங்க வென்றாலும்,
வயல் வேண்டும் மைக்க தானம் வேண்டும்.
ஆக
ஏதோ ஒரு என்றில்லாமல்
எளிமையான,வலிமையான வலம் வேண்டும்,
நிலம் வேண்டும்,
ஆயின்,
களை அங்கு களையப்படல் வேண்டும்,
காத்திரமான கலம் வேண்டும்,

விடை,தலை வேண்டுமெனில்,
விடுதலையே வேண்டுமெனில்,
சுதந்திர தாகம் சுவையூட்ட வேண்டுமெனில்,
சூத்திரம் தரிக்கும் சூசகம் வேண்டும்,

தரிசான நிலமதில் தாக்கமான தகம் தரிக்க
பரிசாக பலமதில் பாங்கான பாகம் பரவ,
விரிவான விளைச்சலிற்கு விவேகமான வேகம் வேண்டும்,
உரிதான உளைச்சல்களை உள்ளக்கிடக்கை உரவகற்றி,
கரிதான களைகளை கலக்கமின்றி கடைக்கவேண்டும்,
இல்லையேல் ஆணிவேரோடு அகற்றவும் வேண்டும்,

இத்தனை வேண்டுங்களும் இந்த
இடையனிற்கு இருக்கும் போது,
ஈழமதை இருப்பமைக்க இன்னமும் எத்தனை
வேண்டல்கள் வேண்டும்.
இன்னமும் புரியாத பூனர்களை புரைத்தல்,
இருப்புக்ளின் இடைத்தங்கல்களை மரித்தல்,
தன்மையான தகமைகளை தழுவுதல்,
வன்மையான இடங்களில் மென்மை களைத்தல்,
பன்மையான படலைகளை பசுமையாய் பரத்தல்.

திண்ணமான திடங்களை திசையிழுத்தல்,பகையின்
உண்மையான ஊகங்களை உடைத்தல்,
பெண்மைகளின் பேராற்றல்களை பெருக்கல்,
கண்ணிமையாய் எங்கள் கர்த்தர்களை காத்தல்,
தூய்மையாய் திடமாக மாவீர்ர்களை மதித்தல்,

இத்தனைகளையும் இரும்புத்திரையாக்கல்,
எத்தனை இடர் வரினும் இதர பலத்தால் அழித்தல்,
அத்துணை ஆற்றல்களையும் அரங்கேற்றல்,
உற்றதுணை என்றபோதும் உசாத்துணைகளின்,,
உயரம் காட்டலை தவிர்த்தல்

துரோகிகள் எவராகினும் இரக்கம் தவிர்,
இரக்கமே ஒரு விடுதலை நெருப்பின்
உயர்ந்த பலவீனம்,
ஆக அதை தவிர்த்தல் எத்துணை தரமாகிலும்,
ஈக,ஈர மனங்களை மதித்தல்,மறு முகம் காட்டின் மாற்று
நிலை தவிர்த்து மரணமிடல்.

இனியும் ஒரு துரோகி துளையிட விடேல்,
விட்டால் இனி வீரியமற்ற விழுமியங்களே விதையாகும்,
எல்லாம் நரையாகும்,புரையாகும் புலமாகும்,புவி மீது
தமிழினி தரம் தறையும்,தகமற்ற தமிழாகும்,
உமிழ் நீராய் இகம் உமிழும்,உயர்வெல்லாம்
அமிழ்தாகி, அமுசடக்கி, அலைக்கழிந்து,
அகிலத்தில் அரவணைக்க ஆருமற்று
நாளடைவில் நலிவடைந்து, நாதியிழந்து
நாத்தமாற்றும் நகையே! நாளைய சந்ததி,
நகையாகும்,இதை மாற்ற
இதயம் இழைத்து ஈழ நகையணிய
நாணேற்ற நாள் குறிப்போம்,
நாயகனின் நாம மிழைப்போம்.
விசையாவும் திசையாகு.
திசையாவும் விசையாகு,
திரும்பும் திசையெல்லாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்