புதன், 18 மார்ச், 2009

பொங்குமோ உளம் திரிந்து?


ஏங்கும் மனதாலும்
தாங்கும் செயலாலும்
தூங்கும் நிலை மறந்து
தூயதான விடியலிற்காய்
தூய்மைகள் அங்கே வியூகமாய்

பொங்கும் நாள் தேடி
பூம்புனல் தானாகி
எங்கும் மங்களமாய்
எங்கள் மண் எமதாக்க
துய்ப்பதற்காய் சுதந்திரத்தை
தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர்
களம் காண நோக்குகையில்,

புலம் பெயர்ந்து நிலம் நோக்கும்
பலம் வேர்க்க உளம் நோகும்
இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும்
இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே
ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க
மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக
இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே
இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.

தும்பையூரான்
இடுகையிட்டது
14.01.2009
தளம்,களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்