வெள்ளி, 27 மார்ச், 2009

களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்



செருக்களமாடுவதுவும்,
செந் தமிழ்ஈழம் மீட்க,
மருக்களமின்றி மடிவதுவும்,
மா வீர்ர் நிலையென்றால்,


தருக்களமாடி வரும்,
தமிழீழ விடுதலைப் புலிகட்கு,
உற்ற நிதி அளிப்பதுவும்,
உரத்த பங்கு ஆற்றுவதுவும்,
புலம் பெயர் தமிழீழ மக்களது
ஊக்க உணர்வன்றோ!,உந்து சக்தி நாமன்றோ!,

காத்து,
துயர் தீர்த்து,
நீர்க்க பகை விரட்டி,
பூக்க உளம்தழுவ, நாம்,,,அவர்
கரம் பற்றும் கருவிக்காய்,களமாடும்
உள(ண)ர்விற்காய்,தமிழர்
புனர் வாழ்விற்காய்,கிட்டு மருத்துவ நிதிக்காய்,
நடமாடும் திலீபன் மருத்துவ காப்பகத்திற்காய்,
செஞ் சோலையின் உயிர் நிலைக்காய்,

உரமேற்ற வழி சமைப்பதுவும்,
உயர்ந்த நிலையாக்குவதுவும்,
உயிராக்கி பணி ஏந்துவதுவும்,
உரிமையான, எமதான களப்பணியன்றோ?

உயர்வான இந் நிலையை,
உதவும் இந்த கருமத்தை,உடன் கடனாற்றாமல்,
உதாசீனம் செய்து விட்டால்,என்றோ
ஓர் நாள் நாம் ஏகமாக புலம்ப நாள் ஒன்று கூடிடும்.
ஆதலால்
தொலை நோக்கு நிலையெடுப்போம்,
தொலையாத பணி முடிப்போம்.


முழங்கிடும் சங்க நாதம்,
முடிவின்றி போரொலியாய்,
விளங்கிடவா வழி செய்வோம்?,அன்றி
துலங்கிடும் தமிழீழம்,தூய்மையாய் தளைந்திட
இனியொரு விதி செய்வோம்,
எம் இனமான பணி முடிப்போம்


(09.01.2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்