புதன், 25 மார்ச், 2009

சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்


நெஞ்சகத்து கூட்டினுள்ளே செல்லரிக்கும் நிகழ்வு (இழவு)தந்து
எந்தகத்து கூட்டுக்குள்ளே போனீர்?எங்கள்
தங்ககத்தை தாண்டி எங்கு போனீர்?

தஞ்சமென்று போவதெந்த வலையத்தில்?,நீவர்
நெஞ்செரிந்து போனதெந்த நிலையத்தில்?
சொந்தமிங்கு கரியுதே கனத்தையில்,,இந்த
வெம்மை என்று தீருமெந்த அமைதியில்?


நிர்கதியாய் நிற்பதுவா விதியாய்?இந்த
நினைவழியா நாட்கள் என்ன சதியா?
ஊர் அழித்து போனதென்ன மதியா?எங்கள்
சீர் மக்கள் ஆனாரோ சீந்தான கதியாய்?

பூக்களைப் போல அல்ல நிந்தன் வாசம்,எந்த
புரிந்துணர்வில் பிரிந்ததுங்கள் தேகம்?
பாக்களிலே படிந்திராத பாசம்,உம்மை
பரிந்துணர்ந்து கொண்டதெங்கள் தேசம்.

வேரறுந்து போவதென்ன மோசம்?இங்கு
பாரினிலே வந்ததெங்கள் சோகம்.
ஊரெழுதி நிதம் தோறும் வாடும்,உங்கள்
பேரெழுதி எங்கள் நெஞ்சம் வேகும்.

வேகும் நிலை மாறும்,எந்த
வேதனையும் இனிமேல் சாகும்,தங்க
வேதம் தாங்கி தரமாகும்,இந்த
நெய்தல் கொள நிலம் நிரலாகும்.


உங்கள் ஆகுதிகள் களமாக்கும்,
எங்கள் தங்ககங்கள் தரமாகும்,
நிந்தன் நினைவுகளால்,நிசமாகும்,
கனலும் தாகங்களால்,நிலையாக்கி உரமாக்கும்,
உங்கள் யாகத்திற்கு சமர்ப்பணமாகும்,

தமிழீழ மலர்வால்,உயர்வான தலைவனால்.
சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்,
தமிழீழ தேசியம்,அது
தமிழீழத் தேசியக்கொடியின் தகவான இசைவாகும்
….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்