
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்,சிங்கள
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்
தன் மானம் சிறக்கும்,எம் மானம் பெருகும்
எங்கள் ஈழம் மலரும்,தமிழ் ஈழம் மலரும்.
சினத்தை வெல்லுங்கள் சிந்தை சிறக்கும்
சிறக்கும் சிந்தையால் சீர் வழி திறக்கும்
திறக்கும் வழியால் தீரம் வளரும்
வளரும் தீரத்தால் வீரம் பெருகும்,எங்கள்
மானம் மெருகும்,தமிழ் மானம் மிளிரும்
குணத்தை தீற்றுங்கள் பண்பாட்டின் வழியே,சீர் கெட்ட
நிலையை மாற்றுங்கள் போரின் வழியே
நிரலாய் செல்லுங்கள் தகையும் தாகமே,
நிறைவாய் வெல்லலாம் அண்ணன் அணியே,
எங்கள் அண்ணன் வழியே,எங்கள் அண்ணன் மொழியே
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்,எங்கள் மானம் சிறக்கும்
நீத்து, நிலை பேணுங்கள் நியாயம் நமதே,உற்று
உள உரண் பேணுங்கள், பாதை தெளிவே,எங்கள்
பாதை தெளிவே.
தெளிவுற ஆளுங்கள் எங்கள் தேர்வு ஒன்றே,
தீர்வு யாவும் மாற்றலாம் ஆக்கம் நமதே,தமிழ் ஈழம் நமதே.
தமிழீழ!
கொடியை ஏந்துங்கள் மக்கள் நிரையே
அடியை அகற்றும் புலிவீரம் தன்னிலே
வெல்வோம் வெல்வோம் என்று வேகம் கொள்ளவே
கொள்வோம்,கொள்வோம் எங்கள் ஈழமண்ணையே
தமிழ் ஈழ மண்ணையே,தமிழ் எங்கள் அன்னையே,
ஈழம் எங்கள் நிலையே,வென்று செல்வோம் நிறைவே.
தமிழ் ஈழம் நமதே.
தும்பையூரான்
23.03.2009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக