ஞாயிறு, 29 மார்ச், 2009

பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்


விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விதிமுறைகள் ஏதும் இந்த புவனத்தில் இல்லை,மாற்றம் உண்டாக்கும் ஒவ்வொரு மாறுதலுமே இந்த பூமியை அடுத்த கட்டத்திற்கு மென்மையாக இட்டுச்செல்கின்றது.அது விஞ்ஞானமாகவோ,அன்றி மெஞ்ஞானமோ?எதுவாகிலும் பரிணாம வளர்ச்சி என்பது இப்படியான விமர்சனம் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு இவ்வகை விமர்சனம் ஓர் அடிப்படையை இட்டு வைக்கின்றது.

ஆயினும் தற்போதைய இக் காலகட்டத்தில் இந்த விமர்சனம் ஆக்க பூர்வமற்றதாகவே உள்ளது.சில சமயங்களில் இவ் விமர்சனம் இருப்பதையும் கெடுத்த கதையாக மாற்றும் அபாயமும் இதில் அமைந்திருப்பதை அவதானமாக பரிசீலிக்க வேண்டிய நுட்பம் அவசியமாகின்றது.சிலர் இதை மாற்றுக் கருத்து என்ற போர்வையில் ஊடறுத்து,ஏற்கக்கூடியதான கருத்தாக்க முனைவதை தற்போதைய கால கட்டம் உணர்த்தி நிற்கின்றது. இந்த கைங்காரியத்தை ஒட்டுக்குழுக்கள்தான் முன் நின்று தடத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.

தேன் தடவிய விசத்தை எம்மோடு ஒட்டி உறவாடி,பரிதாபம் எனகின்ற முகத்திரையையின் போர்வையில்,அனுதாபம் என்கின்ற பார்வையில் அணுகமுனைவதை பல சந்தர்ப்பங்கள் காட்டி நிற்கின்றன. உதாரணமாக,எமது ஒலி,ஒளி பரப்பு நிகழ்வுகளில்,மற்றும் ஊடகங்களில் எமது விடுதலைசார்ந்த போராட்டங்களின் யதார்த்த நிலைப்பாடுகளில்,ஆக்கிரமிப்பு ராணுவம் எமது மண்ணில் ஏற்படுத்தும் அவலங்களின் நிலைப்பாடுகளை,மனிதத்தன்மைக்குஅப்பாற்பட்ட அழிவுகளை, சர்வதேச உலகிற்கு,எமதான மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் இந்த மனிதாபிமான நிகழ்வுகளில்,தமது பொய்யான முகம் தரித்து,போலியான உரையாடல்களை முன் வைத்து,எமதான பார்வையில்,செயலில்,நீதியான உணர்வில் ஒரு தேக்கத்தை,முடக்கத்தை உண்டாக்க முனைகின்றனர்
.இந்த இழிவான செயலை இந்த வட்டுடை தரித்த,கோடரிக் கொம்புகள்தான்,தமதான முட்டாள் தனமான ஊடுருவல்கள் மூலம் தங்களை தாங்களே இனம் காட்டி,எமதான உணர்வுகளை முடமாக்குவதாக எண்ணி எங்கள் இனமான தன்மையை,அதனூடான பங்களிப்புக் களை ,கொச்சைப்படுத் முனைவதை எம்மில் சிலர் புரிந்து கொள்ள முனைய வேண்டும்,இது காலமறிந்து,இந்த ஞாலத்தில் எமதான விடுதலையின் வீச்சை முன் நகர்த்த இப்படியான தடைக்கற்களை இனம் பிரித்து அறிவதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்,அது மட்டுமில்லை இவர்களை அந்த தடத்திலேயே களைந்தெறிய ஆவன செய்ய வும் வேண்டும்.

இதன் மூலம் நாம் எங்களை மேலும்,இன்னமும் வீச்சாக்கி செயற்படுத்தலை,முனைப்பாக்க உளவுரணை இன்னமும் செறிவாக்கி, மென்மேலும் எமதான புலம் பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய,எமதுமக்களின்தேவையைகளத்தில்அதீதமாகபூரணமாக்கவேண்டிய,ஊர்வலங்கள்,கண்டனப் பேரணிகள்,கவனயீர்ப்புப் போராட்டங்கள்,இன்னமும் விடுதலையை வீச்சாக்கி காலப் பணியாற்றவோமாக. அத்துடன் வன்னியில் இத்தகைய இழப்புக்களிலும்,தமதான உளவுரணின் ரதத்திலே மட்டுமே தங்கி வாழும் எம் இன மக்களில் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய,வணங்கா மண் போன்ற சேவைகளை புலத்தில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எமது தாயகம் நோக்கி செலுத்தக்கூடிய மிகவும் தேவையான,சேவைகளை ஆற்ற எம்மை நாமே பூரணமாக உள் வாங்குவோம்.

களமும்,புலமும் இந்த கட்டுமானப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க வீச்சமுறும் எங்கள் விடுதலையின் நெருப்பு,இது போன்ற ஓர் காலம்,எமதான விடுதலையின் பேரொளியை சுமந்து வருங்காலம் கனிந்துள்ளது. இனியும் காலத்தை தாமதப்படுத்தாமல் களப் போராளிகளின் கரங்களையும்,எமது தேசியத் தலைமையையும் ஆழக் கரங்கொண்டு,அகமாக சிரமேற்றுவோம், புலத்தில் தமிழினத்தின் தேசியக்கொடியையும்,தமிழினத்தின் தேசியத் தலைவனின் ஓளிப் படங்களையும் தோளிலே தாங்கி எமதான தேசியக் கடமையை,எமதான திறன் கொள்,உளவுரணால் நிறைவாக்குவோம்.அது நிதி சார்ந்ததாகவும்,நீதி சார்ந்ததாகவும் மிளிரட்டும்.அதன் பேரிகையால்தான் எமது விடுதலை எமதாகும்.

இந்த கருவிகள் எம் வசமாக புல் உருவிகள் ஆங்கே களையப்பட்டு,நல் விதைகள் ஆங்கே உரிமம் கொள் நிலை பேணும்,எம்நிலை சாரும்.பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம் ஆகவே,மாற்றுக்கருத்து,வேற்றுப்பார்வை எனும் கோதாக்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒரே அணியில் எமது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் இனவாத சிங்கள இராணுவத்தையும்,பேரினவாத அரசியந்திரத்தையும்,அவர் தம் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தி சர்வதேசமும் எமதான விடுதலையை அங்கீகரிக்க வேண்டி,புலத்தில் ஒன்று சேர்ந்து வளமான செயல்பாடுகளை ஆற்றுவோம்.தற்போதைக்கு எந்தவிதமான அர்த்தமற்ற விமர்சனங்களையும்,மாற்றுக்கருத்தென்ற முட்டாள்தனமான வாதங்களையும் புறந்தள்ளி,நியாயமான எமதான விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து,எங்கள் விடுதலையின் வீரியத்தை,உறுதியாக்கி,ஆனதான பங்களிப்பை தளமாக்கி,களத்தை விரிவுறச் செய்து எமதான இலட்சியத்தை அடைவதற்காக முழுமையாக பங்காற்றுவோம்.வெறும் சொற்கட்டுக்களை புறந்தள்ளி,தேசக்கடமையை விரிவாக்கி,நிறைவாக்குவோம்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்