செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இல்லை என்ற சொல்லே என்றும் இல்லையாக வேண்டும்..




இல்லை என்ற சொல்லே என்றும் இல்லையாக வேண்டும்........பாரதியார்


நிர்வாக குழுமத்திற்கு மற்றும் அங்கத்தவர்கள்.பெற்றோர்கள் மிக்க கவனத்திற்கு!

கீழே வரும் இல்லை எனும் பதத்திற்கு உங்களின் தார்மீக பதில் வேண்டி தொடர விழைகிறேன்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது எனில் .மாற்றம் எனும் திறன் கோரி!

1.நிர்வாக கூட்டத்திற்கு நிர்வாக உறுப்பினர்கள் நேரத்திற்கு சமூகமளிக்கிறார்களா?

2.அங்கத்தவர்கள்?

3.நடைபெறும் கூட்டம் முழுமையாகும் வரை இவர்கள் யாபேரும் சபையில் உள்ளார்களா?

4.முன்பள்ளியில் நடக்கும் நிகழ்விற்கு முதலில் பெற்றோர்கள் யாபேரும் நேரத்திற்கு சமூகமளிக்கிறார்களா?

5.ஆயின் அவர்களால் தங்களின் உற்றார்களை அதாவது உறவினர்களை உள்வாங்க முனைகிறார்களா?

6.எந்த நிகழ்வை எப்போதாவது நேரத்திற்கு ஆரம்பித்தீர்கள் மற்றும் முடித்தீர்கள் எனும் வரலாறு உங்களின் பாதையில் என்றாவது மலர்ந்ததுண்டா?

7.இன்னமும் வினாக்கள் உண்டு..


 நிற்க ஆக இதற்கொல்லாம் பதில் இல்லை என்பதை தவிர நீங்கள் மாற்று வழி ஏதாவது காண முனைகிறீர்களா?அதற்கும் இல்லை என்பதே பதிலாக...
எமது பார்வையில் இதற்கொலாம் ஒரே பதில் நேரத்திற்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் சற்று நெகிழ்வு தன்மையை அகற்றி காத்திரமாக செயல்பட முனையணும்.ஆரம்பம் சற்றே கடினம்தான் இது ஒரு பொது வெளி ஆயிரம் பிரச்சனைகள் வரும் வரணும் கலங்கணும் வாதங்கள் வரணும் பின் தெளியணும்.அப்போதே இந்த நேரங்களை கைக்கொளும் ஆற்றல் பிறக்கும்,

இதை செய்ய முனையாத தலைமையாலும் செயலாளராலும் எவ்வித பிரயோசனமும் சனத்திற்கும் வெகு ஜனத்திற்கும் இல்லை,

சரியான ஒரு தெளிவான கலந்துரையாடல் மூலமே இதை பின்பற்றலாமே தவிர நீங்கள் குறியிடும் சம்பிரதாயங்களோ அன்றி ஒழுங்கு முறைகளையோ இதன் மூலமே அரங்காக்கிக் கொளலாம் என்பதை கருத்தில் கொள்க.
இதற்கெல்லாம் ஒரு புரிந்துணர்வுகள் விட்டுக் கொடுத்தல் அறிவுப் பூர்வமான விளக்கங்கள் தேவை என்பதே யதார்த்தமாகும்.
இனியும் தொடர்பெழுதிக் கொள்ளல் விவேகமானதல்ல எனும் நிலையில் நான்..
நன்றி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்