செவ்வாய், 19 ஜூன், 2012

வினைத் திறன் வேண்டி
வினையாற்ற
விளைவோ விடியலகற்ற
உளையும் மனம்
செல்லரிக்கும் நியங்களால்
இதயம் கழுவ
இறைந்து உறைந்தே போகின்றது மனம்.

இயலாமை என ஏதும் உண்டா?
தினம்
வினவுகின்றது சுயம்-என்
இனம்,அதன் முற்றம்
காலாவதியான கலத்தை
இரைமீட்டு!--

இவர்களிடை
சில மோதல்களை தவிர்க்க
ஏது செய்யலாம்?
விடை உண்டு.
அதற்கான தடைகளை
எப்படி அகற்றுவது?

நாமோ இங்கு
ஆற்ற வேண்டிய செயலோ அங்கு
இங்கிருந்து பார்த்தால்
கடல் வானத்தை தழுவுவது போல் தோற்றம்.
நான் போகினும் நாள் போகினும்---ம்
மடல்களினால் ஆகலாம்.
ஆனது பல நியங்கள்.
ஆயினும்!
திடமான செய்கையெனில்
தோட்டத்தில்தானே தேடணும்.
எம் தேட்டங்கள் உணர்ந்தால்??___
தேடலே தேவையில்லை.

தேட்டம் உணர்ந்ததாக நானும்
உணர்கின்றேன்.
பாட்டமாய் அது பதட்டம் நீங்கும்.
காட்டமாய் வாதித்தார்கள்.
இல்லை ஆழமாய்
சுவாசித்தே வாசித்தார்கள்
ஆதலால்

ம்!
பார்ப்போம்.
கலங்கி தெளிந்தாயிற்று.
கலமும் உடனாயிற்று.
இனி
களத்தில்தான் தடம் வேயணும்.
வேய்வார்கள் எம் வேதியரெனும்
நன் நம்பிக்கையில்
திடமாகவே நான்.

திருப்பம் வரும்
அது
விருப்பேற்றி வரும்.
எரிவதை எடுக்க
கொதிப்பு தானாகவே மதிப்படக்கும்.
இப்போ
அனலை மட்டும்-
அதன் கனலை மட்டும்
அகற்றவா?
ஆற்றவா?
இல்லை
அடுப்பையே தகற்கவா?

சற்று பொறுத்தே பொதி உடைக்கலாம்.
சுமக்கலாம்
ஆசுவாசித்தே ஓயும் மனத்தை என்ன செய்ய?
உறக்கத்திலும்
உசாவான வேலைத் திடலிலும்
நினைவுகளும்
நியங்களும் தீண்டும்
இந்த வடத்தை???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்