வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

வாகையின் முடி சூடி வசந்தமினி வாழ்வென்றே


08.02.2009
அரற்றுகின்றோம் அரவணைப்பின்றி,ஆயினும் எழுகின்றோம்
தரணியில் ஏற்றுவோம் தமிழீழக்கொடியன்று ஆதலால்
எழுகின்றோம் இயலுமான நன்நம்பிக்கையின் குரலால் இருக்கின்றான்
தழுவும் தமிழை தாயாகிக் காப்பாற்றும் தன்னலமற்ற தலைவன்
ஆதலால் எழுகின்றோம் இன்னமும் வீச்சாய்.

விசனங்கள், விசும்பல்கள், வீரம் ஓய்ந்திடுமோ என்றான
ஆதங்கங்கள், அத்தனையையும் அகத்தில் விறைப்பாக்கி,
ஓங்கி ஓர்மமாய் ஒருகுடையின் கீழ் திரண்டோம் நிலை சாயோம்
விரிகின்றோம் வியாபித்திருக்கும் தரணியெல்லாம் வீரியமாக்கி எம்
தலைவனது வீரியத்தை தழும்பாத தாகத்தை முறுக்கேற்றி.

ஆசனங்கள் அவர் வேய்வார் ஆரியத்திற்காய் அவாள் காய்வார்
சேதனங்கள் வந்தாலும் வேதனங்களாக்கி எம் வீரம்
சேதாரமாக்காமல் சேரும் களமாக்கிடுவான் வேலுப்பிள்ளை மறவனவன்
ஆதாரமாக்கி இனி ஆக்கிவைக்கும் தமிழீழம்.
செத்து மடிந்தாலும் சொத்தையாகி போகாரவர்,சத்தியமாய் தமிழீழம்
ஆக்கி வைத்தே அவர் வாழ்வார் அதுதான் எம் பிரபாகரம்.

இழப்புக்களால் வளர்ந்ததுதான் எங்களான தலைவன் படை
இத்தனை தெரிந்திருக்கும் இவன் கேளான்
தொடரும் படை நடத்தி
அத்தனையும் இழப்பதற்காய் அண்டையிலே வந்துள்ளான்
போரதின் சூட்சுமத்தை போராளன் எல்லாளன்
தானறிவான்
போற்றி வைக்கும் நிலையெடுத்தான் ஏற்றி வைக்கும் ஈகத்தாலே
வந்தனிடும் வெற்றி வாகை வாஞ்சையானதால்
இன் ஈழம் இனி ஈழம்
கேட்டதுண்டா,சமீபத்திய சேதியெல்லாம்
வாகையின் முடி சூடி வசந்தமினி வாழ்வென்றே.

தும்பையூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்