வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

இனி செவிக்கெட்டும் செய்திகளெல்லாம் வெற்றிச் சங்கொலிதான்



வளம் கொழிக்கும் வன்னியில் இருந்து வீர
வளம் வீழ்ந்து போனதாக செய்திகள் வருமென்று
காத்திருந்த வானரங்கள் இன்று முகம்
கறுத்து இடர் தோய்த்து இடி வீழ்ந்ததால்
வரப்பறுந்து போயிங்கு வாடிப்போயினராம்

எத்தனை நாளிங்கு குப்பை கொட்டுவதாய்
எண்ணியே ஈனத் தனம் ஏய்த்திருப்பார் அது அத்துணை
அற்றுப்போய் அரற்றுகின்ற நாளதற்கு இன்று
ஒத்திகை பார்ப்பதற்காய் புலிகள் வீசு குண்டு
விமானத்தை ஓர்ம்மாய் வீழ்த்திவைத்து இவர்
அத்தனை பேர்க்கும் மறு ஓய்வில்லை என்பதாய்
சூசகமாக விதி தூதொன்றால் அதிர வைத்தான்

முடிவல்ல இது ஆரம்பத்தின் ரம்பம் என
ஆக்கி வைத்த அக்னி பிரவாகத்தின்
முதல் அம்பு இது, இன்னமும் நாகாஸ்திரம் எப்போ என
நாதியற்று ஆக்கிரமிப்பு இராணுவம் ஆகுதியாகி
உடலது அனலாக இணைப்பறுந்து போயி
கடலது உதவி எதிர்பார்த்து நிற்குமோ?

எந்த நிலை ஏற்றாலும் கடன் நிலுவைதனை மீட்டெடுத்து,
அந்த நிலையாக்கி உந்தன் ஆக்கிரமிப்பை அறுத்தெறிந்து,
சொந்த நிலை மாற்றி எம் சோகம் உமதாக்கி,
சந்தங்கள் பாட எமை சாசுவதமாக்கி வைப்பான்.
பந்தங்கள் யாதுமற்று பாழாய்ப்போகும் உன் சந்ததிகள்,இதை
நிந்தனது சொந்தமாக்கி, எமதான வீர்ர் நிந்தனிற்கு பரி(சா)க்கி


எந்த வரி கொண்டு எமை ஏளனமாக்கி மேய்வதற்காய்
சொந்த முகவரி தொலைத்தெடுக்க தொலைதூரம் போய் மாய்மார்
இந்த நிலை தலையெடுக்கும் காலம் ஊட்டி நிலைகொள்ளும்
அந்தக்காலம் அந்திம காலம் ஆக்கிரமிப்பாளனை நாடியே
எந்த நொடியும் நோக்கி உனதாண்டூ ஊழிக் காற்றாய்.

இனி வரும் செய்திகள் காதில் ஒப்பாரி வைப்பதாய்
ஓங்காரமாகி எமதான செவியண்டை அண்டாது.
தனி யொரு ஈழம் மலர் செண்டெடுத்து தண்டெடுத்து,
ஊதி வரும் சேதி கேட்க உற்றார்,உறவினரே,எமதான
தமிழீழ நல் உறவுகளே
வரும் செய்திளெல்லாம் வெற்றிச் சங்கொலிதான்.
நயம் கொள்க வீர காவியம் அதனைச் செப்ப
லயம் கொள்க சிலாபித்திருக்க,சிரம் கொள்க
சீரியலான,சிறப்பான கலம் கொள்க காலப் பரசவத்தால்
தலைவன் கொண்ட,அவன்சேனை கொண்ட அற வெற்றி வேய.

நிமிர்ந்தெழு வீரச் சங்கொலித்த பிரபாகரம் கொள்
உணர்ந்தெழுக அவன் படையாற்றிய பிரளயம் வெல்ல
உதித்தெழுத உன் ஊடான நல் பங்களிப்பை உவந்தளித்து
உரிமம் கொள் உதயமாகுது உயர்வான,உயிரான,நமதான தமிழீழம்


நயமாகும்,நன்றியுடன்
தும்பையூரான்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்