சனி, 28 பிப்ரவரி, 2009

சிந்தையில் உருவாகும் பரிணாம வளர்ச்சி


<p> சிந்தையில் உருவாகும் பரிணாம வளர்ச்சி

தொன்மையான எண்ணம், என்றாலும் மறுபக்கம் சிந்தனை, என்றாலும் தேக்கமில்லாத நோக்கம் ஒன்றுதான். எனினும் மாறுபட்ட முயற்சி அல்லது சிந்தையில் உருவாகும் பரிணாவளர்ச்சி என்பது, ஏற்ற கால வளர்ச்சியின் அல்லது உருவாக்கத்தின் புறச்சூழலின், அதாவது உலக ஓழுங்கிற்கமைய
தேர்வுகளின் வாதைகளையும்,பாதைகளையும் மாற்றி அமைத்து நோக்கினை நோக்கி சீராக நடை போட வேண்டிய காலக் கடமை ஆற்றவேண்டிய ஆளுமைகளை, செயற்திறன் சார் வினையுடன், ஆழக் கைகோர்த்து வீரியநடை போட துறைசார் நிபுணர்களையும்,இளஞ்சந்ததி
யினையிரையும், ஆர்வலர்களையும், அணி சேர்க்கவேண்டிய அவசர தேவை, நிர்ப்பந்தம் ஒன்று இங்கே நியம் தரிசிக்கின்றது. இது தேச விடுதலை நோக்கிய பயணம்,உதிரிகளை பற்றிய சிந்தனைகள் அறவே அற்றுப்போகவேண்டியதுதான், நிந்தனைகளைப்பற்றிய சிந்தனைகளை புறந்தள்ளி,காலச்சழற்சியின் பரிமாண,பரிந்துரைகளை முன்நோக்கி நகர்த்தல் இங்கே முகிழ்ந்தெழவேண்டியதோர் தேவை உள்ளதைகவனத்தில் கொள்ளவேண்டிய காலக்,காவியக் கடனாகும்,அசையா மலையும் ஆழக்கடலும்,ஆதிமனிதனின் ஆழுமைக்கு உட்படுத்தப்பட்ட காலம் உண்டு,
ஆசைகள் இங்கே அவலத்தை அரங்கேற்றியமையால் இன்று மீண்டும் ஓர் போர்க்கரங்கள் எங்கள் திசை நோக்கி அசைக்கப்பட்ட அவலம் தொடர் கதையானது,ஆயினும் தீர்க்கமான போராளியின் போர்த்திசை கொண்ட எங்கள் இளைய தேசக் குஞ்சுகள் அடைகாத்து விடை காட்டி மாவீர்ராகி,வளம் சேர்த்த எங்கள் வையகம் விடிகின்றவேளையிது, தூங்குப
வரை விட்டு தாங்குபவரின் பாரச்சுமையை நாமும் மனமாக பகிர்ந்து கொள்வோம்,அதையும் ஆவலாக,ஆசையாக,மேலோங்கிய ஆதங்கங்கள் மடி சுரக்க,விடி வெள்ளி சுமந்து வந்தவரின் தேகம்இளைப்பாற,இங்கிதமாய் நம் மடி சுமந்து,அவர்களை ஆசுவாசப்படுத்துவோம்,இந்த நினைவு வெறும் நினைவில்லை,காலம் இயைந்து நம் காவியத்தலைவன் கனன்று விதைத்த
அதன் அறுவடை,அநுபவிப்பதற்க்கு மட்டும் நாம் ஆசைப்படவில்லை,அதன் ஆதார்சங்களையும்,அடி வேர்களையும்,நாமும் ஓர் வகையில் தாங்கிய சிறியதாயினும் ஓர்விழுதானவர்கள் என்றவகையிலும்,எம்அடிவேர்,தாயகம்,
அதன் ஒவ்வொரு அங்குலமான நிலத்திலும், எமது ஏக்கங்களின் தாக்கம் அடி ஒற்றி,ஆர்ப்பரித்து,நினைவிலும், கனவிலும் ஆழ நீரோடி நீக்கமற நிலைத்து நிற்கின்ற, அந்த நினைவழியா,அகமகற்றா தாகத்தின் தாக்கமல்லவா இது? குருதியோடும் நரம்பில் நாளும்,நாடும் உணர்வின்
ஆழம்,இந்த நிலையில் என்போல் ஆர்ப்பரிக்கும் எத்தனையோ ஆத்மார்த்த விடுதலை விரும்பிகளின் ஆதங்கத்தின் சார்பாக, என் ஆன்ம திருப்தியின் நிலையாக,மீண்டும் தொடருவேன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்