வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஆதங்கம் ஆக்கிரமித்த நெஞ்சின் சந்தம்


நியாயமான,யதார்த்தத்தை முன்னிறுத்தி திருசெ.யோகியின் நிலைப்பாடே இன்று களம்,புலம் வாழ் தமிழீழத்தை நேர்மையாக யாசிக்கும் தமிழுலக மக்களின் ஏகோபித்த நிலையாகும்.எந்த வல்லரசையும் அசைக்கும் செயற்திறன் மிக்க போராளிகளும்,இவர்களை ஈகத்தினூடாக இயக்கும் பெருந்தலைவன் இயங்குவான் என்பதை மீண்டும் இகத்திற்கு இயங்கு தளமாக தமிழீழம் இயங்குவதை நிலை நிறுத்தி எங்கள் தமிழீழ தாகத்தை நிறைவாகக் கொள்வோம்.சத்தியமாய் மலரும் தமிழீழம்.புலம் பெயர் சமூதாயம் தன் பாரியபெரும் பணியை புலத்தில் ஆரம்பித்து விட்டார்கள்.இதயசுத்தியுடன் இனிமையாய் காண்போம்,இழப்புக்கள் எமக்கு புதியனவல்ல,வல்லவர்கள் வீழும்போதும் வலிமையான விதையெறிந்தே போனார்கள்,வராலாறாய் தமிழீழம் கண்ட பாடம்.உறுதியுடனே புலம் பெயர் தமிழர்களும் எம் தார்மீகத்தலைவன் பின்னால்,வலிகளையே வலிமையாக்கி வரைந்தெடுப்போம் வதையில்லா தமிழீழத்தை.எத்தகு இடர்களையும்,எத்தர்களின்பித்தலாட்டங்களையும்,பிணந்தின்னிபேரினவாதிராஜபக்ஸாவின்அத்தனைஆக்கிரமிப்பு,அட்டகாசங்கட்கும்,நிலையான,இறுதியான,உறுதியான ஆப்பு எம்மவர்களால் இரட்டைமடங்காக கொடுக்கப்படும் ஓர்ம்ம் அதிவிரைவில், அரங்கேறும் திருநாள், வரும்நாள் எமதான அவலங்களும்,வார்த்தைகளிற்கப்பாற்பட்ட ஆதங்கங்களும்,ஓரளவேனும் எமை ஆசுவாசுப்படுத்தும்,இதுவரை இழந்த எமதான மக்களின்,மாவீர்ர்களின் ஆத்ம சாந்தி நிலைப்பெறும்,வெல்வோம்,பகையே உனதான ஈமங்கள் வன்னியில் அசுமப்படும்.எம் மக்கள் சிந்தியது வெறும் கண்ணீரும், குருதியும் மட்டுமில்லை,இவையனைத்தும் ஈழ வேள்விக்காக இழையப்பட்ட கேள்விகள் ஊடான யாகங்கள் பகையே! இதையெல்லாம் நீ முழுமையாக புரியுங்காலம் எமதான தமிழீழமண் தேசியக்கொடியுடன் ஆடசிபுரியத்தொடங்கி விடும்.இதுவரையான கனவுகள் இனித்தான் முழுமையான நனவுகள் சொல்லிற்கு முன் செயல்காண் தலைவனால் முன்மொழியப்படும் நாளின் நெருக்கத்தோடு வாஞ்சையுடன் வசந்தம் சந்தமாக எமதான தேசியகீதம் அதோ,அதோ எவ்வளவு இனிமையாக எம்மவர்களால் இசைக்கப்படும் அந்த வசந்த விழாவிற்காக பகை உனை எரிக்க,ஓடும் குதிரையின்,வீசும் புயலையும் வேடிக்கை பார்க்க விட்டபடி எம் தேசப்புயல்கள் களம் காண,வலுப்பெறும் ஆக்கிரமிப்பிற்கு ஆளான நெஞ்சின் சந்தம். இன்றைய செய்திகளும்,நாளை வலம் வர இருக்கும் வசந்தங்களும்,இப்படித்தான் காலச் செய்தியாக கட்டியம் கூறி நிற்கும்.
நன்றி
தும்பையூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்