வியாழன், 4 ஜூன், 2009

செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்


திருவாய் மலர்வாய்,
அருவாய் உருவாய்,
மரியா நினைவே,மகிழ்வே உருவே,
தெரியா திறனே,தெளிவாய் உறவே,
குருவாய்,குணவான்,குறியான்,குறையான்,
நிறைவே,நிலையே,வருவாய்,வருவாய்,
வலியாய்,வளமாய்,வலிவே வருவாய்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்,
விழிப்பே,வீர விளைவே,வினையே,நீ விறலாய்,
விரிவாய்,விரிப்பாய்,விதைப்பால்,நெகிழ்ப்பாய்,
சிரிப்பே,சீலனே,சிரத்தால் சிகப்பாய்,சிறத்தால்
ஜெயிப்பாய்,ஆ,ஆ,ஆஆஆஆஆஆஆஆஆ
விதப்பால் மிதப்பாய்,விகத்தால் ஜெகத்தால்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

நிலத்தால் நிறைந்தாய்,நிதந்தான் நிறைந்தாய்,
பலத்தால்,ஆஆஆஆ,
புலத்தால்,ஆஆஆஆ,
வலத்தால்,ஆஆஆஆ,
வளைத்தாய்,ஆஆஆஆ

கலத்தால்,கதைத்தாய்,பகையை புதைத்தாய்,
விதைந்தாய்,விதத்தால்,கலந்தாய் கரத்தால்,
கனித்தாய்,இனித்தாய்,பனியாய் பரந்தாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கனவே,எங்கள் கனவை,
களத்தால் கனித்தாய்,ஆஆஆஆஆஆஆஆஆ
கரைத்தாய்,கலைத்தாய்,கனிவாய் கனிந்தாய்.

பகைப் புலத்தால்,கதை விரித்தாய்,
நுகை நுளைந்தாய் நூதல் விளிப்பாய்,
நகைப்பாய்,நாளை வருவாய்,ஒளியே,எங்கள் விழியே,
திசை திசைத்தாய்,இசை இழைப்பாய்,ஓசை ஒலிப்பாய்.
விசையும் திசையில் இசைவும் இயங்க,
கருவும் சுமந்த கலயம் கலைய,
மருவும் உணர்வில் மாசு கலைய,
வீசும் தென்றலாய்,வீணை விதப்பால்,
வருவாய்,வருவாய்,திருவாய் திறனாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

உறங்கும் மா வீரம் வரைய,
மனதில் மருவும் ஈழம் வரைய,
அறங்கள் காத்த அகங்கள் அணைக்க,
அவர்கள் நெஞ்சில் நெகிழ்வு நெகிழ,
மறவர் அவர்கள் மானம் சொரிய,
வருவாய்,வருவாய்,திருவாய் மலர்வாய்,
திறனே எங்கள் அறனே,
வீரனே,
ஈகனே,
தேசனே,
தேவனே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

செவ்வாய், 2 ஜூன், 2009

கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.


சங்கம் வளர்த்த தமிழினத்தின் சங்காரக்குடி இவன்,
அங்கம் பிளந்தங்கு ஈழ தமிழரின்,
தங்ககம் அகற்றியதான தகமையாய் இன்று,
எங்கும் ஏதிலியாய் தமிழன் மாள சங்கம் திறந்து,
சங்கூதித் தமிழர்க்கு சவக்காடு ஏற்றிய சந்தோசம்,
உன் தேகம்,ஆக்கிய அகம்,
தலைக்கேற கொண்டாடுகின்றான்,தான் பிறந்த சாரம் மறந்து.

கோலகலத் திரவியங்கள் கோலேந்திக் கொண்டதனால்,
ஆலகால விசங்கொண்ட மகிந்தாவின் மகோற்சவனாய்,
காலம் பல காலம் வாழ்கவென காங்கிரசும் கரங்சொறிய,
வீழா வல்லா வீசகங்கள் விதைத்து நீ வாழ்கவென,
மகிந்தாவும் மனம் கொண்டான்,ஆதலால் நீ
உதி(றை)த்(ந்)த நாளில் உற்சாக திருவிழா தமிழரை வதைத்த
வெ(ற்)றி விழா,உன் அகம் மகிழ ஆரியனின் ஆத்மார்த்த பரிசு.

கொலைக்களம் கண்ட எம் வன்னி சொந்தங்களும்,
போர்க்களம் சூழ்ந்த போர்முகம் நீக்கி,தீர்க்கவல்லா
தீவினையும் தீர்த்த எம் தீ முகக் கருண நிதியே,
உன் கருணைக்கு நீ கொண்ட கருண நிதி வாழியவே.
பதவியின் சுகங்களை பத்திரமாய் உன் புத்திரனிற்கு,
பாங்காய் நீ பேணிக் கொடுத்த பவிசை யாம் என்னென்போம்?

விலை பேசி நூதனமாய் நூர்த்துவிட்டாய் எம் பகையை,
வலை வீசி வீழ்த்தி விட்டாய் வஞ்சகமாய் எம் துணையை,
நிலை மாறிப்போனாலும் நீர்க்காது எங்கள் களம்,
உலை வைத்து எரித்தாலும் எரியாது எங்கள் போர்க்குணம்,
மலை போல எதிர் வந்தாலும் மசியாது கொண்ட கொள்கை,
சிலை வைத்து சீவியம் காண சீலம் கொள்ளோம்,
உளம் கொள்ளு.

வீரக்,
கலைக்கெல்லாம் காவியம் சூட்டும் கரிகாலன் பேர் உரைத்தோம்,
நிலைக்காக தானை நூர்க்கா நிர்ணயன் அவன் தாள்க்கொப்போ நீ,
சந்ததி வாழ எமை எரித்தாய் தகுமோ பார் உன் சந்நதி.
இலையான் போல் அலைவோனே இல்லையென்றே ஆவானா?
அலை எறிந்து ஆழி அகமதை சிதைத்தாலும்,
அலாக்காயதை ஆர்த்தெறிந்து ஆகியிருப்போம் அணைத்ததனை.
வீரத்தின் விழுமியத்தின் விற்பகனை,
எம் இத்தக வீரன்.

முலை வாயில் நீ மொவ்வ முரசம் அறைவோனே.
வலை வேயில் வகைந்திட வசமாமோ வேலுப்பிள்ளை.
குல வாழ்வை கோர்ப்போனே,
குணவானைக் கலைப்பாயா?,
நல வாழ்வை உன் நலங்கார்க்கு நகைத்திருந்தாய்,
தலப் பாகை நீ மொய்ய ஈழத்தமிழன்,
என்றும் தமிழ் அகத்தானில்லை.

விலைப்பலகை போட்டு வைத்து,
வீசகம் ஓர் தட்டு வைத்து,
விற்க நாம் பொருளில்லை.
சல,சலத்து நாம் குலைய நீ கொடுத்த,கொடையில்லை,
வெல,வெலத்துப் போக நீ நமைத்த நாரீசமில்லை,
குடு,குடுக்கும் வயதிலும் கூர்ப்பெய்ய நினைப்போனே,
வெடு,வெடுக்கும் உடம்பதனை,வேர்க்கும் வயததனை,
நிலைத்து,

நீ,
நிமிர்வெடுக்க நின்றதெல்லாம் அறுத்தாயே.
உறுப்பாயா?உணர்வதைக் கொன்ற வயதில்,
அரசியலைத் துறந்திருந்தால்!
அகிலமே வாழ்த்தெழுதும்,
அகவையை நீ இழந்தாயே.

திங்கள், 1 ஜூன், 2009

ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.


வீற்றிருக்கும் வீரியம் அகம் நோற்றிருக்கும்,
நேற்றிருந்த நிலை என்றும் தேற்றம் புலர்த்தும்,
கற்றிருந்த களம் தனை புனர்த்தும்,காலை
ஒற்றி நின்றே காலக் கானமிசைக்கும்.அங்கு
வற்றியதெல்லாம் வசம் வகைத்திருக்கும்.

தூற்றி நிற்கும் பகை பாட்டிசைக்கும்,அது
வேற்றிருக்கும்,வேதினி பூண்டிருக்கும்.
ஊற்றிருந்த உற்றம் உறைந்திருக்க,அவர்
பூண்டிருந்த பூப்புக்கள் எல்லாம் புதைந்திருக்க.
வேண்டிருந்த புலம் வேர்த்திருக்க,நாளை
மாண்டிருந்த வீரம் காண்டிருக்கும்,காலம்,
மீட்டிசைக்கும் மானம் மீட்டிருக்க,வாட்டி நின்ற
வாகை வசம் நுழைய யாம் சூட்டியிருப்போம்,
மிகையான விதனங்களை,நூதனங்களை.

சுழலும் காலம் சூனியம் விரட்டும்,
விழலும் ஞாலம் விரயம் சாற்றும்,
கழலும் எல்லாம் கர்வம் கலைக்கும்,
மழலை எல்லாம் மாவீரம் பாடும்,
கழலையான காயம் மாற்றும்,காலக்,
காற்றும் கலந்தே கனதி ஊட்டும்.

நல் நம்பிக்கை ஒன்றே நாளை ஒற்றும்.
வல் வீரம் ஒன்றே வாழ்வை வளைக்கும்,
சொல்லா வல்ல சோகம் சோதி இழக்க,
கல்லாளனும் தன் களமிழக்க,வில்லாள
பெருஞ்சோதி ஒன்று வேதினியில் காலப்
பிரசன்னம். பிரபாகரம் எனும் பேர் சூடி…

மாண்டதான வீரம் மறுபடியும்,
காலம் அகண்டதான தாளம் அதை அகற்றி
விதண்டாவாத,விற்பனங்கள்,வினையறுத்தான
சொற்பதங்கள்,
அத்தனையும் ஆங்கே அருக்கொள்ள,
வித்தகங்கள் விதைத்து ஆரோகணிப்பான்,எங்கள்
முத்தங்கள் எல்லாம் முகை சூட.
வீரியன் பெயரும் பிரபாகரன்,அந்த
ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.

ஞாயிறு, 31 மே, 2009

மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.


யார் இந்த மனிதம்?
ஏன் இந்த தவம்?எவர்க்காக இவர் யாக்கும் யாசகம்?
இவரிற்கும்,தமிழனிற்கும் பூத்திருக்கும்
உறவு யாது?

தன் உயிர் வருத்தி,
இவ் லண்டன் மாநகர் வீதியில்,
உணவு,உடல் இயங்கல் நோற்றும் நீர்,
அத்தனையும் துறந்து இவன் ஆற்றும் யாகம்.

இத்தனைக்கும்,
வாழ்வாதரங்கள் அத்தனையும் தன்
வசம் வரப் பெற்ற இந்த வெள்ளை இன நண்பன்
நோத்திருக்கும் யாகம்,

யாருக்காக?
இத்தனை அவலம் எம் மண் சூழ்ந்திருக்க,
ஊதுகுழல் ஊனர்களே!
முகாந்திரம் நூற்றும் இந்த வெள்ளையனிற்குள்ள
உணர்வு உனக்குள் உரம் தாழ்ந்ததேனோ?

நீ
என்றுமே உளம் உறுத்தாய்,
இங்குதான் மானிடத்திற்கும்,மாந்தைக்கூட்டமான
உனக்கும் மையம் தரிக்கும் மாந்த நேயம்.
கொலு அகன்றிருக்கும் கோலம்.
இத்தகை மானுடங்கள் வையத்தில்
வாழ்வதனால்தான்.நீ அங்கு???

எங்கள் மண்ணின் வாசம் நோற்றானோ?யானறியேன்.
எங்கள் ஈழமண்ணின் நேசம் துய்த்தானோ யானறியேன்.
எங்கள் தமிழீழ தாகத்தின் வீச்சம் பரிந்திருந்தான் யாம் அறிவோம்.
ஆதலால்தான் இங்கு அறமோங்க அவதாரம் பூண்டுள்ளான்.
அந்த புனிதனிற்கு பூபாளமாய் பூத்திருக்கும்,
மனித நேயவல்லமை அவன் வாசம் சூட எம் அகமான
ஆயிலியங்கள்,

ஆயின்,
பரதேசியான தமிழீழத் துரோகிகளே.
எதுவுமே எங்களின மக்களிற்கு,ஒரு
வாய்ப்பிடி அரிசியேனும்,ஒரு வாய் தண்ணீர்கூட,
நோய்ப்பிடிக்குள் நுகம் தூக்க எந்த மருத்துவமும்
ஆற்றமுடியாத பெரும் போக துரோகிகளே,
உற்ற எங்கள் உறவுகளை இன்னமும் வீச்சாய்,
மரணபயம் ஊட்டி நீ பறிக்கும் பகல் கொள்ளை,
யாவும் யாம் அறிவோம்,ஆயின்
விரைவில் நீ அதன் வீச்சம் ஏற்பாய்.

அதற்குள்!
இன்னமுமா நீ தேர்தலில் வடக்கில்,
வாக்கு யாக்க போகின்றாய்?

போ,போ,
வடக்கு,ஏன் கிழக்கு கூட இன்னமும்,
மடக்கி இன்னும் இடக்கி வீழவில்லை என்பதை,
தெற்கில் தோளேந்தும் துன்மர்கள்,உன்
மார்க்கில் மடலேந்த வீழும் உன் வாழ்வு,
விரைவில்,களமாக்கும்.
அதுவரை போ,போ,
போக்கற்றவனே போர் இன்னமும்,
ஓயவில்லை என்பதை மட்டும்,
மறவாமல் போ.

எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.


கல்வியின் காத தூரம்தான் காடையன் சிங்களவனின்,
கர்மாந்திரம்,இந்த நிலை கலவவே நூலகத்தில் நுனிமோந்தது அக்னி,
எங்ஙனம் இந்த ஓர்மம் அங்ஙனம் அகம் பூண்டது,?
இங்ஙனம் ஓர் வினா இங்கு கால் பதிப்பது மிகவும் ஆழமாக அலசப்படுவது முகாந்திர கொள்கின்றது.

தமிழர்களின் முழுப்பலமே அவன் மேற்கோளாக்கும் கல்விதான்.
சிங்களவனின் தனி நுகர்வே அவன் கால் கோளும் கலவியில்தான்.
இங்குதான் தமிழன் முழுமை பெற்றான்,எனில் சிங்களவன் அங்குதான் தரமற்றான்,

முன்பொரு காலத்தில் இரு நாடு ஒரு தீவு,
இது வரலாறு மோந்தது நிற்கும் உண்மை,
அந்த தமிழரசர்கள் தரமாண்ட காலத்தில்,இனவிகிதாசாரம்,
வலிமையாய் ஏறக்குறைய சமமானதாகவே மையம் கொண்டது,
பின்பு போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,பிரித்தானியர்,
இப்படி வெள்ளையர்களின் வருகை அங்கு வலம் கொண்டு,அவலம் வீற்ற, ஆளுமையானது அதன் பின்னாலான பின்னல்,

இனப்பிரிப்பு,இனவழிப்பு,காக்கை வன்னியனின் பெருந்த கயமையான இன்று போலவே அன்றுமான அலங்கோலம்,ஊது குழலான,ஒட்டுக்குழலின் ஆர்த்தநாரீசம்.
சங்கிலி மன்னனின் அதி வீரம் தோல்வி களமாக,
அங்குமட்டும் என்ன நடந்தது? இன்றுபோல் எல்லாமே காக்கை வன்னிக்கூட்டத்தின் எட்டப்ப தகமைதான்,வேறென்ன.?இதனால் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது,தமிழன் தன் இருப்பை வலிமைப்படுத்த கண்ட போர்க்களங்கள் ஈழ வரலாற்றில் இன்று வரை தொடரும் துல்லியமான ஓர் தொடர் கதைதான்.

ஒவ்வொரு களமுனைகளிலும் தன் இனத்தாலே அவர் தம் வீரம், ஒட்டுக்குழுக்களால் ஒர் மையப்படுத்தலில் காட்டிக்கொடுக்கப்பட்டு,எத்தனை வீரமறவர்கள் அவர் தம் சந்ததியூடாகவே முற்று முழுதாக அழித்தொழிக்ப்பட்டார்கள்.ஈழத்தில் தமிழர் சமூகம் இனவிகிதாசாரத்தில் கனதி குறைக்கப்பட்ட களமும் இதுதான்,இன்று போல் இலட்சக்கணக்காக எங்கள் தங்கக உறவுகள் அழிக்கப்பட்ட வரலாறு சாற்றி துயர் தோய்ந்து நிற்கும் சாரம்.

இரு அரசுகளின் அடிமைத்தனத்தை அரங்கமாக்க ஆற்றுப்படுத்தப்பட்ட
அரசாங்கத்தின்நிர்மாணத்திற்காகஒரேஅவதானத்தின்கீழ்ஒருங்கமைக்கப்பட்ட ராஜதந்திர நகர்வில் எல்லாமே எல்லாள வசம் இழந்து,மனிதநாகரீகம் அங்கலாய்க்கப்பட்டு,மதமாற்றம்,மொழிஆளுமை,வெள்ளையர் சேவகம்,இப்படி எல்லாவிதத்திலும் தமிழன் தரமற்று வால்பிடித்து தன் சுயநலங்களிற்காக தமிழினத்தை விற்கத்தொடங்கிய போதிலும் அவனின் கல்வியே களம் அமைத்து நின்றது.

சிங்களவன் தன்வாழ்வில் சிரமமாக கைக்கொண்ட சிறந்தமார்க்கம் இனவிருத்தி,அதனால் ஆரியன் மேற்கொண்ட பாரிய குடியேற்றம்,ஒவ்வொரு முறையும் தமிழன் எண்ணிலடங்காமல் அழிக்கப்பட்ட போதெல்லாம் சிங்களம் தன் இனத்தை வீரியமாகவே இனப்பெருக்கி இடம் அடைத்தான்.எங்கள் தமிழ் நிலம் அபகரித்து இனவழிப்பில் தோய்ந்து நிற்கின்றான்.இது சிங்கள வம்சத்தில் கால,காலமாக ஆரிய குருதியில் குடி கொண்டுள்ளது.

தமிழர் அவர்தம் வாழ் நிலங்களை அபகரித்ததன் மூலமும்,எந்த சனநடமாட்டம் இல்லாத ஆனால் எதிர்கால போக்குவரத்துக்கள் நடைபெறப்போகும் பிரதானசாலைகளின் காட்டுப் பகுதிகளிலும் சிங்களவன் குடியேறி வாழ அதற்கு சிங்கள அரசும் உத்வேகம் அளித்து தார்மீக உதவிகளையும் செய்தது.உதாரணமாக பார்த்தீர்களேயானால் யாழ் கொழும்பு பிரதான வீதிகளின் காட்டுப் பகுதியை மையம் வைத்து பாரிய சிங்கள குடும்பங்கள் வாழந்ததனை அடிக்கடி இந்த வீதியால் பிரயாணம் செய்தவர்கள் அவதானித்திருந்தால் புரியும்,அதுசரி எங்கே வாகனத்தில் மூலை இருக்கையை கைப்பற்றியவுடன் கொண்டு வந்த சோமபானங்களை சொடுக்கிவிட்டு சுகமான துயில் கொண்டு, ஜீவித பிரயாணம் செய்தோர் எவருமே இதை எப்போதுமே கருத்தில் அதாவது கவனத்தில் கொண்டிருக்க சாத்தியம் அறவே இல்லை. அப்படி கண்ணுற்றோர் கருக்கொண்ட யதார்த்தம் யாதெனில் பாவம் சிங்களவன் என்பதே தவிர இதன் எதிர்காலத் தாக்கத்தை யாருமே கருக்கொள்ளவில்லை.

தமிழரோ தன் சுயநலத்திற்காகவும்,தன் பரம்பரையின் விரிவாக்கத்திற்காகவும் எந்த ஒரு தொலைநோக்கையும் தன் கல்விமூலம் நடைமுறைப்படுத்தாதன் பின் விளைவு இன்று நாம் அகதியான புலப்பெயர்வு,

நிற்க,
மேலும் சீரான குடும்பக் கட்டுப்பாடு,இதை வாசிக்கும் அல்லது கருத்தில் எடுக்கும் வாசகர்களே 1972லே அரசாங்கம் முன் வைத்த குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரத்திற்கு சோரம் போனவர்கள் அதிகமாக தமிழர்கள் என்பதை நிலையில்,நினைவில் கொள்க.

இப்படி விலைபோன தமிழர்களின் கல்வியில் கை வைக்க முடியாத இந்த இனவாதிகள் தமிழர்களின் கல்வியில் கை வைப்பதாக எண்ணியே எங்களின் கல்வியின் மூலதனமான,ஆதாரமான எண்ணிக்கையற்ற பல சுவடிகளையும்,ஆதர்சனங்களையும் தாங்கி நின்ற எங்களின் கற்பகதருவான யாழ் நூலகத்தை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கல்வியின் புறநிலைகளையும் சேர்த்து அழிக்கலாம் என பகல் கனவை கண்டனர். ஏனெனில் இவர்களின் மோட்டு சிங்கள மூளைக்குள் சிரம் கொண்டது இந்த அழிவுகளின் ஆர்ப்பே முகாந்திரம் முனைந்திருந்துது.இன அழிப்பில் சிங்களம் எமது எத்தனை கல்விமான்களை அழித்திருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரியது.

1977ல் நடைமுறையாக்கப்பட்ட பல்கலைக்கழக தராதரம் உற்றுத்தரும் பாடம்,1981ல் நூல்நிலையம் எரிக்கப்பட்ட மூலகாரணம்,1983ல் கொழும்பில் ஏற்படுத்தப்பட்ட இனவழிப்பில் எத்தனை கல்விமான்கள் அழிக்கப்பட்டார்கள்,மேலும் எத்தனை அறிவு ஜீவிகள்,கல்விப் பெருந்தகைகள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்,அல்லது வெளியேறவேண்டிய புறநிலைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.1987,1989களில் யாழ் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மருத்துவர்களின் கொலைகள் கூறும் பாடம் என்ன,?இன்று இந்த பாரிய இனவழிப்பு வன்னியில் அரங்கேற்றப்பட்டபோது அங்கு கடமையாற்றிய மருத்துவர்களின் எதிர்காலம் கூறப்போகும் மூலம் என்ன?

இழப்புகளிற்கு உட்பட்டவர்களின் சொந்தங்களிற்குதான் புரியும் அவர்கள் எத்தனை கல்விமான்களை இந்த வன்னியில் இழந்திருக்கின்றார்கள் என்பது,இற்றைக்கு 61 ஆண்டுகளிற்கு முன் நடைபெற்ற கல்விமான்களின் அழிப்பு இதில் விபரம் கொள்ளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக மொத்தத்ததில் தமிழின இனவழிப்புடன் சேர்த்து எங்களின் கல்விமானகள் பலரையும் ஸ்ரீலங்காவின் காடைய இராணுவ வல்லூறுகள் வேரோடு மண்ணாய் துடைத்தழித்துள்ளானர். இந்த துட்டன் மகிந்தா இவனிற்கும்,இவனின் சகோதரனிற்கும் தமிழீழ தமிழர்களை பூண்டோடு அழித்ததற்காக இன்று ஏதோ கலாநிதிபட்டமளிப்பு விழாவாம்.விந்தையான உலகம் இது.

எத்தனை இடர்களிற்கு மத்தியிலும் தமிழினம் கல்வியில் என்றுமே காத்திரமாக முன்னேற்றத்தையே முகாந்திரம் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது,தேசியத் தலைவன்,எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழரின் கல்வி வளத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பது அவரின் ஆளுமைகள் சுட்டி நிற்கும் தொலைதூரப்பார்வை என்றால் அதுவும் மிகையாகாது.

ஆக, மொத்தத்தில்,இன்னமும் சொல்லப்போனால் சிங்களவனின் ஆட்சிக் கட்டிலில் அவனிற்கு ஆளுமையின் முகாந்திரத்தை அமைத்து கொடுத்தவனும் சோரம் போன சோமாரியான,கோடரிக்கொம்புகளான, சில தமிழ் அறிவு ஜீவிகள் என்பதும் வலிதரும் உண்மைதான்,

எனவேதான் இன்னமும் இந்த இனவாதிகள் தமிழரின் கல்வியில் காத்திரமான கண் வைத்து எங்களின் அறிவுசார் இயக்கங்களையும்,இனமான ஒற்றுமையையும் இன்றும் சதிமூலம் சரிக்க ஓர் தீர்மானமாகவே காரியமாற்றுகின்றான். இதை மிகவும் ஆழமாக கனம் செய்யவேண்டிய தேவையை இன்றும் இந்தயாழ் நூலக எரிப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. என்பதை நாங்கள் சிரமாக வெகு சிரத்தையாக முகம் கொண்டு இன்னமும் எங்களின் இளைய தலைமுறைகளின் கல்வியை தீவிரமாக மேற்கொள்ள புலம் பெயர் பெற்றோர்கள் இந்த பாரிய வினையை ஆற்றவேண்டும்.

எதிரியானவன் இந்த கொடும் போர்முனையில் இருந்து மீண்டு வந்த எந்த தமிழ் சிறுவர்களின் எதிர்காலத்தில் எந்த சிரத்தையையும் கொள்ளமாட்டான்,என்றோ ஒருநாள் அது சாத்தியமானால் வெளிவரும் எங்களின் இந்த சிறார்களின் கல்வியையும்,அவர்தம் எதிர்காலத்தையும் புலம் பெயர் உறவுகளாகிய நாம் பெரும் சிரத்தையுடன் அவர்களின் எதிர்காலத்தை எங்களின் பிள்ளைகளாகவே அகமாக ஏற்று இந்த தேசத்தேவையை ஆளுமை கொள்ளவேண்டும். எனவே இந்த பாரிய பொறுப்பை நாம் மிகவும் காத்திரமாக முன்னெடுக்க முகாந்திரம் அமைக்க புத்தி ஜீவிகளின் பாரிய உதவிகளை நாம் பூரணமாகவே எதிர்பார்த்துள்ளோம்.

இதுவே தமிழுணர்வுள்ளவர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பாகும்.
ஆற்றுவார்களா?இந்த பாரிய பணிமுன்னெடுப்பை எம் தேசிய புத்தி ஜீவிகள்.அழிக்கப்பட்ட,எரிக்கப்பட்ட எங்கள் யாழ் நூலக நினைவு நாளான இன்று இது பற்றி ஓர் திடமான ஒளியூடாக,இந்த நேரிய பணியை முன்னோக்கி புலம் பெயர் சமூகம் ஆழமான செயலாற்ற வேண்டிய காலக் கடமையை கரம் கொடுப்போம்.

சனி, 30 மே, 2009

வயல் விரிய வகிடெடுப்போம்.


வஞ்சக நெஞ்சம் கொண்டான் சிங்களம்,
வாரி சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்,
காஞ்சிதையாய் நாங்கள் கருக,நெஞ்சில்,
பூரிப்பில் வெற்றிப் பூவாய் அவன் மெருக.
வாரிச் சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்.

தஞ்சமாக தங்கள் வலைவிரித்தான்,அங்கு
தாயும்,சேயுங்களை களைந்தான்.
தர்மத்திற்குகூட தண்ணீர் தர மறுத்தான்.
தக்க மருந்துங்கூடவே தடவ தவிர்த்தான்.
எந்தன் எந்தையரைக் கூட கரித்தான்,பாரில்
ஆரியக் கூட்டத்தால் களம் கலந்தான்.

ஐ.நா,மன்றில் நாம் அந்நியமானோம்.
ஐக்கிய ஆரங்கள் தவிர்க்க அரளியானோம்,
ஏங்கி தவிக்குதைய்யா எங்கள் உதிரம்,பாரில்
பாவியாகுதைய்யா! எங்கள் அதிரம்.தமிழ்
ஊனமாகுமா உன் சதிரம்,கூனி குறுகிப் போகுமா?,
எம் குவியம்.

எத்தனை தடைகளால் இவன் வைதாலும்,அங்கு
மெத்தனமே கடை விரித்தாலும்,அவை
அத்தனையும் விடை கடைந்து,புவி
சித்தம் கலைந்து சீறி எழுமே,பார்
வித்தகங்கள் வினைய வீரியம் பெறுமே.

இத்தனை விதைகள் அங்கு விதைத்தோம் எம்
சித்தமெல்லாம் சீந்த விதைந்தோம்.நீள,
நித்திலத்தில் நிலம் நிறைத்து,நீட்சி நிரவ,
நித்தம் தலம் நிறுவி, எங்கள், கைத்தலம் கையேற்று
வித்தக தெய்வங்களை களம் இழைப்போம்,

கல்லறை வீரம் மீதோர் ஆணை வைத்து,
வல்ல பகையின் வாகை தளம் எரித்து,
சொல்ல வல்லானின் சோகம் களைந்து,
வெல்ல வல்ல வழியாற்றி தேசம் அமைப்போம்,
ஈழ தேசமலர்வில் கனம் இணைப்போம்.

நெஞ்சில் வல்ல உறுதி வகை பொருத்தி,
வஞ்சம் தீர்த்த பகை வகை நொருக்கி,
துஞ்ச மறுக்கும் துயர் களைவோம்,
வெஞ்சமரில் வீரம் திளைத்த,தீர
ஈழ தாகம் அதை தினைவெடுப்போம்.

உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.


சிலாகிக்க சிதையும் சிந்தையின்,
சிரைவில் எதையும் வியாபிக்க,
கரையும் கனவாய் காலம் விதைத்த,
சுரப்பை யாம் எவ்விதம் நிரவுவோம்?

நிலாப் பொழிந்த முற்றமும்,
உலாவந்த உதயசூரியமும்,
புலமொழுகி நின்ற புயமும்,
வலம் வந்த வயல் பரப்பும்,
இன்று!
எந்தன் வானம் வெறிக்க வைரசாய்,
வனைந்து உளம் நொருக்கி,மன வலிமை-
உடைக்கின்ற இந்த உதிரத்தை,நாளும்-
நாளத்துடன் நலிந்தெடுக்கும் வினையை,

எங்ஙனம் யான் இறுகப்பற்றி இறுமாப்பெய்வேன்?
ஐயகோ!
என்றழுது இந்த வையப்பரப்பில் எதை யாம்-
வினைவோம்?
சிதிலாமாகமல் எம் சிந்தையை சீராக்குவோம்?
உதிலமான எம் உறவின் கைலாகு கையேந்தி-
பதிலொன்று பலமாய் எம் பரப்பெங்கும் பாவ,இந்த
நித்திலப் பரப்பில் எம் நீதி வேண்டி-
நிரையாக போர்தொடுப்போம்.

இன்று கானல் நீராய் போனதாக காலம்-
ஏந்தும் கதிரை,
எம் கரமாக்க ஆழமாக காலப் பணியை,
வீரியத்தை அகலமாய் அணிந்தெடுத்து,
பாரிய பொறுப்பேந்தி பரவலாய் பரிந்தெடுப்போம்.
ஊறிய வன்னிக் குருதி வெட்கையின்,
வைப்பகத்தை வெப்பகமாய் வலி மூசி.

இழத்தலும்,விழைத்தலும்,
வையப்பரப்பில் வாசம் சூடும் சூத்திரம்.
விழலாய் இறைந்ததாய் நீருக்கொன்றும் வரலாறு இல்லை.
வீசுவது தென்றலானாலும்,புயலானாலும்,
பூமி அதிர்வென்றாலும்,
மூசிய சுனாமியானாலும்,அழிவு இயல்பானதே அன்றி,
அகிலம் ஆரையிழந்து போவதில்லை,இழந்ததை
மீட்கும் சக்தி,
எந்த வல்லனுக்கும் வாழ்வில் இல்லை,
இவையெல்லாம் வராமல் தடுக்கும் தாக்கம் எவர்க்கும் இல்லை,

ஆனால்,
உற்ற தற்காப்பை மட்டும் தரம் கவள தரிசிக்கலாம்.
இந்த தரமாற்ற தமிழனுக்கோ தக்க தரையில்லை,
அழிவுண்டோம்,
ஆயினும் அனுபவத்தின் முகவரியில்,
உற்ற வகை மிகக் கொள்வோம்,தவிர்த்தால்,
தளிர்க்காது தரணியில் தமிழனின் தகம்.

ஆன அழிவில் மீண்டதான வரலாறே,
இந்த இகத்தில் இயக்கம் இசையும்.
இயல்பு.
வசப்படும் வெற்றியை வளங்கொள்ள,
அற்றதை எல்லாம் மனமிருத்தி,
உற்றதை உள் வாங்கி,பெற்றதை மீண்டும்,
பிறப்பாக்க உதிக்கும் பிரபாகரங்களை,

விறைப்பாக ஒர் வல்லமையை வியல்பங்காண,
விதையும் மலர்வாக கருக்கொள்வோம்.
கற்றதை எல்லாம் கரம் கொண்டு.
உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.

வெள்ளி, 29 மே, 2009

பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.


தூரிகை,
ஓவியங்களின் ஆளுகையை கையகப்படுத்தும்,
குவிவு மையம்,
கசிவுகளையும்,களையும்,கண்ணிமைக்கும் கணத்தில்,
கனிவொற்றியதையும்,மின்னலடித்து,
மிகையேற்றியதையும்,
தைக்கும்,

காதலின் வாசலில்,கலம் கொள்ளும் மோகத்தையும்,
சீதளக் காற்றவளை சிலாகித்துக் கொண்டதையும்,
குவளையத்தின் வாசலில் குருந்து குடியிருந்ததையும்,
குபேரமாய் குறியிட்ட என்
தூரிகைத் தோழா!

குமரியின் வாசலில் குடிபுகுந்த கூதலையும்,
கூடிநின்று குதூகலித்த கூட்டத்தையும்,அகல மறுத்து
அகமேற்ற ஆதீன, சுவாசங்களையும்,ஆதிமுதல் அந்தம்வரை
முகமேற்ற முகந்தங்களையும்,
முடிவுறதா பந்தங்களையும்,
இன்ன பிற வாழ்வியலின் தர்ம,அதர்மங்களையும்,ஆதர்சங்கள்
அகம் பின்ன நினைவுப் பிறாண்டல்களையும்,
நினைவின் உச்சி மோந்து
வியாபம் விகாசிக்க வித்திட்ட என் நண்பா!

அன்று,
உன் தூரிகையை தீ பட்டு தீந்தெழுதிய,
உன் மென் கரங்களால் மல்லுக்கட்ட மனிதம் சூடிய மகோன்னதனே,
ஆதார்சங்க அகங்களை அடிமுடி தேடி,சமூக அவதானங்களை,
ஐயமின்றி அரங்கேற்றியவனே,
ஏனிந்த ஏகாந்தம்?
மௌனிக்க நீ ஏன்
மகரந்தம் இழந்த மர(ன)மானாய்?
ஓ!
காலக் காற்றரைக்க கசிந்த உன் உள்ளத்தின்
உருமங்களை உள்வாங்கு,உவகையை நீ மட்டும்,
உருத்தியிருக்கவில்லை.
இந்த ஊனம் உனக்கு மட்டும் உரித்தானதில்லை,
மூசும் காற்று
உன் முகத்தில் மட்டும் முகவரியை நூர்க்கவில்லை.
எரிந்த எங்கள் வேரின் நுகை உன்னை மட்டுமே,
நரித்தெடுத்ததில்லை,
உன் ஓவிய பரிபாசையில் முடிந்தவரை முகங்கொண்டு,
சோகத்தின் வாசலிலும் சாகசம் வீற்றிருப்பதாய்,பின்புல
வர்ணம் தீட்டி வலியை விரட்டி வலிமையின் ஒலியை,
ஓங்காரம் கொண்டு ஔடதம் தடவியவனே,
உன்
அகத்தை அங்கே மீண்டும் அகப்படுத்து,உன்
வீட்டு மூலையில்
முகமிழந்து உன் ஆளுமையின் வலு தேடும் உன்,
தூரிகையை முத்தமிடு,
என்,உன் வீட்டு வாசலில்
வந்தழித்த பகையின் வடுவை வைரியம் உரைத்து உராசு,

ஈழத்தமிழர் இன்று ஊனம் தரித்து நின்று,
தாயும்,சேயும்,தன் சொந்தம் அற்று,ஆடும் அவலத்தை
தேசம் நோக்கி ஓவி,
எந்தையரின் விந்தை நிலம் கந்தகத்தால் கார்ந்தெடுக்கப்பட்டபோது,
விந்தேற்றி எம் வீரியங்களை பகை விந்தகமாக்கியபோது,
கந்தறித்து எங்கள் குடி அந்தம் முதல் சொந்தம் வரை,

பந்தம் அறுந்து, பாழும் பகை சிதைத்தபோது,அவர் விரிந்து எரித்ததை,
ஏகத்தின் முகத்திலறைந்து முகவரியிடு.
எறிகணையின் ஏவலால்,தறிகெட்டு போன தமிழ் மணம் தீட்டு,
கதிகலங்கி காயமேற்கு முன்னே காலன் வசமான எங்கள்,
பந்தங்களின் பாதையை விரிவாக்கி வித்தகம் ஏற்று,உயிர் தமிழிற்கு
உடல் மண்ணிற்கென வீரம் விதைத்த எங்கள் மானம் காத்த,
அந்த மாவீரங்களை மகத்துவம் சூழ,மருளாமல் மகிமையிடு.
பொறி கலங்கி,உடல் கருக உறுதி பூண்டு உரிமைப்போரிட்டு
உவகையாய் உயிர் நீத்த புனிதர்களை பூங்காவியம் வரை,

எங்கள் கருவி காத்த காவியர்களை காத்திரமாய் கனமேற்று,
வீர நிலம் சொரிய விகுதியாகி தமிழ் மானம் பேணிய
மானர்களை விதித்தொரு வீரியம் வரை.
உந்தன் மனிதர்களை மகுடம் சூட்டி ஓரு மகத்துவம் காவும் காவியம் தீட்டு,
உதிர்ந்தது,
தீர்ந்தது,
மரித்தது,மானம் காத்தது,எல்லாமாக எரிந்தது,
எச்சம் கரைத்த வன்னி மண்ணின் வைராக்கியம் சிலாக்கியம் சிந்த ஒரு
பெருங்காவியம் வரை.,

அது மட்டும் போதுமா?
இல்லை ஈனர்களின் ஊனவலையில்,
உற்றதெல்லாம் அற்று,
இன்று வதைகளம் காணும் எங்களின் குஞ்சுகள்,
குழந்தைகள்,குமரிகள்,குமரர்கள்,ஈறாக வயோதிபம் வகைந்தவர்கள்,
முதிர்ந்த மூதாட்டிகள்,இத்தறை அவலம் சூழ இன்று முள் கம்பி
வேலிக்குள் காரிக்கும் இவர்களின் வதையை வனைந்தொரு வாரியம் இழை,
இன்னமும் உன் தூரிகை தீட்ட வேண்டிய வேணியம் உண்டு,

இத்தனை அவலம்,வரைய துடைதட்டி தோள் கொடுத்த,
கொலைஞர்களின் கொடுங்கரங்களை,கொடுமதியர்கள்,
உசாவி,துழாவி,உயர் மனம் நீட்டித்தாக உன் உறவுகளுடன்,
வாஞ்சையாய்,வகிடெடுத்து,வலைவிரித்து,எம் முகம் எரித்த,
துரோகத்தின் ரோகங்களை,அது விழைத்த ரணங்களை,
ரோகம்,கோபம்,அதனூடான வெப்பியாரம் தரிக்கும் வெம்மைகளை

உன் ஊடகமான தூரிகையால்,
உன் மத்தமாய் ஓங்கார ரகம் வெப்ப உக்ரோசமாய் உரைய வரை.
பேரின அரக்கர்களின் அன்னியர்கள்,அவர் தம் வேசத்தனத்தை,
சிரித்து,சிரித்தே,வரிந்து,வரித்து
வன்னியின் வாகையை,
நெஞ்செரித்ததை,நெடுங்கனல் நெடுவ,
ஆரிய நெஞ்சகர்களின் வக்கரிப்பை,
விதிபரப்பிய விகாரத்தை,

சுடும் நெஞ்சின் சூட்சுமத்தை நேரியலாக்கி,
நெடுவீதிகளின் முகவரியில்,பிரபஞ்சத்தின்,
பிரதிநிதிகளின் பிரக்ஞை கறந்து நீற,
பீடுடன் பிரவாகித்து பிரம்மமாய் பிரவாகி,

காங்கிரசின் வன்முக நெஞ்சகம்,
இன்றும்,இனியும்,எனியும்
வரலாறாய் வரைத்திருக்கும்,கறை நெஞ்சத்தை,
மொண்டைச்சியின்,
முகாந்திரத்தை,
இனி வரும் எங்கள் சந்ததிகளின் சபைக்கு,
உந்தனின்,உலக தமிழரின் ஊனமுகத்தை,சகல தாற்பாரியமும்,
சாற்றும் சாகசம் துலங்க துல்லியமாய்,
உன் தூரிகை தூபங்கள் துணைத்து துலாம்பாரம்
துதித்து தூரி,
என் ஓவிய,தூரிகை துணையே.

ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு,புரியுமா?
என் புனிதனே,
தமிழின வாழ்வில்,ஈழ விடுதலை வெங்களத்தை,
நாம் சாம்பலாக சகவாசித்தாலும்,
மறையாத இந்த வன்மம்,
நெஞ்சில் பூத்த நெடு நெருப்பாய்,
வையகத்தில் என்றும் வடுவாய்,
இந்த உயிரகள் உறையும் வரை,
வகிடெடுத்து பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.

புதன், 27 மே, 2009

வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?


எல்லாள ஆளுமையில் ஏறி நின்ற எம் வலிமைகள்.
சொல்லாளா செம்மல் எங்கள் சோதிப்பெரு விளக்குகள்.
அல்லாடி இந்த ஆதிக்கத்தில் அறமிழந்து போயினவோ?
வில்லாடி,வாளேந்தி,வாகையின் முடியில் வேதினி ஆண்ட குடி.
எல்லாமே இங்கு வேற்று பாதையற்ற காதையாயினவோ?

அல்லாற்றல் குடி ஒங்க அற்ற வழி வேறின்றி,
நல்லாற்ற வழி தான் கூற்றி தோற்றம் கண்ட தமிழ்க்குடி.,
வல்ல வழி இதுதானென்று வகை,வகையாய் கட்டமைத்து
வெல்ல வழி மாற்றான் கொள்ளா, கொலுவமைத்து கோலோச்சி,
நல்லாட்சி நாம் அமைக்க நாடும் வழி தெளித்து நின்று.
செழித்த எங்கள் செழிப்பெல்லாம் வழித்தடைத்து போயினவோ?

நிர்தாட்சண்யம் சூட்டி தமிழினம் சூனியமாய் சுழன்றதுவோ?
பாரினிலே ஈழத் தமிழினம் பதகழிக்க இனமழித்த,
பார்ப்பனர்கள்,பாவியர்கள் சாவிரிக்க அகமொழித்து,
வீற்றிருக்க,பகை நேர்த்திருக்க,தோற்றிருக்கும்,
தமிழ் தோன்றாமலே போயிடுமோ?
ஊர்திரும்ப ஊழியாள,உரிமையெல்லாம்,விதிர்,விதிர்க்க
வேரறுத்த வெற்றியாளன் வெம்ப எமை விட்டானோ?

கார் கொண்ட முகில் இனி திரள் கலைந்து போகுமா?
கார்த்த ஈழத் தமிழனவன் கதியைகாலம் மாற்றுமோ?
வேர்த்த எங்கள் வீரம் இனி புதிதாய் புனர்ந்து பூக்குமோ?
ஆர்த்தெடுத்து விதிதனை ஆதித்தெடுத்து ஆர்க்குமோ?
நீர்க்க இது நிலையில்லை என்றே தீர்க்க மறமாற்றுமோ?
தீய்ந்தது எம் திடமென்றே திரி அணைந்து போகுமோ?

நித்தமெல்லாம் இதே நினைவு,நீங்கியதுவோ எம் கனவு.வீட்டு
முத்தெமெல்லாம் என் முகம் கேட்கும்.
வித்தகம் வேறு என்வென்று தனை வினையறுத்த என்.
நிலம் கேட்கும்.
உத்தமரின் உத்தம தியாகமெல்லாம் உத்தெரித்து என் உளம்
கேட்கும்.
தமிழ் சித்தரின் இந்த தீட்சிதத்தை உச்சரிக்கும் அதன்
சூத்திரத்தை,
எத்திரை ஆக்கி அவர் ஆத்மம் சித்தரிப்போம்.அவர்
முத்திரை பதிக்க,
எந்த வித்தகத்தை இனி வசீகரிப்போம்?

திங்கள், 25 மே, 2009

வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.


இன்றைய ஸ்ரீலங்காவில் எம் உறவின் வன்னி நிலையை உற்று நோக்க,
அகம் எரியும்,உணர்வெலாம் மங்கி,தினம் சொரியம் ஆதங்கம் சார!
அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆணிவேருடன் அகற்றப்பட்டதாக ஸ்ரீலங்கா பெரும் பிராச்சாரம் முன்னெடுத்துள்ளது,அதன் பிரகாரம் இந்த நிலை உண்மையாகவே இருக்கட்டும்,அங்கே பயங்கரவாத முகம் முற்று முழுதாக அழித்துடைக்கப்பட்டதானதாக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு இன்றுடன் வாரம் ஒன்றை நிறைவு காண்கின்றது,
ஆயின்,
தற்போது அங்கே என்ன நடக்கின்றது? என்பதை உறுத்து நோக்க பின்வரும் நிலையை தரமாற்றுகின்றது.
இதை வரிசைப்படுத்தி பார்ப்போமானால்,
1.உக்கிர வன்னித்தாக்குதலில் அங்கு மனிதாபிமான பணிஆற்றிய வைத்தியர்கள் இன்று ஸ்ரீலங்காவின் வதை முகாமில்.
2.வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்,கனகரத்தினம் இன்று 4வது மாடியில்,இவர் அகோரமான போர்க்களத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்தம் துயரங்களை தானும் சேர்ந்து சுமந்தார்.
3,வன்னியில் இராணுவ வலையத்திற்குள் மாற்று வழியின்றி,மனிதாபிமான மார்க்கமின்றி, தஞ்சமடைந்த பொது மக்களின் நிலை.
4.அவர்களில் பலர் வயது,பால் வேறுபாடாக பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்படுகின்றனர்.
5.,இளம் பெண்கள்,இதில் வயது வேறுபாடின்றி அவர் எத்தனை வயதென்றாலும் இராணுவத்தின் மிருக வெறிக்கு உட்படுத்தப்பட்டு,இளவயதினர் புலி உறுப்பினரென முத்திரை குத்தப்பட்டு,
கொலை செய்யப்படுகின்றனர்,அல்லது மேலதிகமாக தங்களின் இச்சைகளிற்கு, வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இளவயது,அதாவது,வாலிபர்கள் புலி உறுப்பினர் என்றே தயவு தாட்சண்யமற்று முத்திரை குத்தப்பட்டு காணாமல்,கொலைசெயெயப்பட்டு,
முகாமின் பின் புறம் வீசப்படுவதாக செய்திகள் ஆதாரம் காட்டி குறித்துக்கொள்கின்றது,
6.இதுவரை இராணுவத்தில் படுகாயப்பட்ட வயது,பால்,வித்தியாசமின்றி தமிழர்களின் தொகை இலட்சத்திற்கு மேற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.இதில் யாருக்கும் தேவையான அடிப்படை ஆதார சிகிச்சைகூட அவர்கட்கு அளிக்கப்படவில்லை.
7,வயது மூத்த அதாவது 60வயதிற்கு மேற்பட்டமுதியவர்களின் நிலை?சமீபத்தில் உணவு சிறிதுமின்றி இவர்கள் இறந்ததாகவும்,இவர்களின் எந்த உறவினர்களையும்,அல்லது அவர்களின் துணையின்றியே எரித்த அல்லது,புதைத்ததாகவும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.
8,சிறு குழந்தைகளிற்கான பால் உணவுகூட கொடுக்காத மிகவும் மிலேச்சத்தனமான,மிருகத்தனமான,அட்டூழியம் அங்கே காணப்படுகின்றது.
9.தரப்படும் சிறு அளவு உணவிற்காக வரிசையில் நின்று இதுவும் கிடையாமல் சிறுவர்கள் ஆமிமாமா பசியென்று இரக்கும் ஈனத்தனங்களும் அங்கே தலைவிரித்தாடுகின்றது. வார்த்தைகளிற்கப்பாற்பட்ட மனிதவதை இந்த இராணவ வலையத்தினுள் நாளும்,பொழுதும் நடைபெறுகின்றது.
10.உடுத்த உடை தவிர மாற்று உடைக்கு மார்க்கமின்றி எத்தனை உறவுகள் அங்கே,பித்துப்பிடித்து,மனநோயால்,தன்சொந்தம்இழந்து,துணைஇழந்து,பிள்ளைகள்,பெற்றோரையும்,தாய் தன் குழந்தைகளையும்,கணவன் தன் மனைவியையும்,சகோதரர்கள்,சகோதரங்களையும் முற்றாக இழந்ததும் கூட தெரியாமல்,எதிர்கால வாழ்வு அறவே இழந்து.
11.எத்தனை மக்கள் தங்கள் அங்கமிழந்து,அவயங்களெல்லாம் தீப்புண்ணாகி நொந்து பெரும் துயரில்,ஆற்ற முடியாத வடுக்களை அங்கம் முதல் அகம்வரை வலியேந்தி,சிலர் என்ன நடக்கின்றது?தாம் யார்? என்ற அடையாளம் அறவே அகன்று,எதிர்காலச் சூனியங்களை எப்படி எதிர் கொள்வதென்ற உவப்பின்றி!,
12.நீண்ட,நெடுதான கம்பி வேலிகள் மத்தியில் சிறைக்கூடத்தில்,அதாவது திறந்த வெளிச் சிறையில் அங்கு வாழ்வது அதுவும் ஒரு வாழ்வா?
13,வெளியில் இருக்கும் சில உறவுகள் உதவமுனைந்தாலும் அதையும் இந்தவன்புணர்வாளர்கள்,இரக்கம்எதுவும்அற்றஅந்தஈனப்பேய்கள்,சிங்களத்தின்தெருப்பொறுக்கிகள்எம்மக்களைஅனுதினமும்,ஆக்கினைக்கு உட்படுத்தி,உளவுரணகற்றி,நடமாடும் வெறும் மனிதப் பிண்டங்களாக்கி,!மகிந்தாவின் பேய் இராணுவ வல்லூறுகள் செய்யும் கொடுமைகளை என்னெவென்பது?,
14.இத்தனை மாபெரும் இனவழிப்பை இரவோடிரவாக,இன்னமும் வன்னியில் நாளாந்தம் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை எந்த ஒரு நாடும்,ஆகக்குறைந்த ஒரு மனிதாபிமானக் குரலை எங்கள் மக்களிற்காக,
வலுவான அத்தாட்சியுடன் உலக மன்றில் முன் வைக்க முன் வரவில்லை என்பதினூடாக நாம் எமக்கான,உறுதியான ஒரு தனி நாட்டை எப்படியேனும் இந்த வையகத்தில் வசம் கொள்ளவேண்டிய தாற்பாரியத்தை,இப்படியான,வன் நிலைகள் கட்டியம் கூறி நிற்கின்றன.
15.இன்றும்,நேற்றும் ஏன் ஒவ்வொரு நாளும் ஸ்ரீலங்கா இராணுவத்தால்
இளையவர்கள் வகுந்தெடுக்கப்பட்டு தினமும் வன்னியில் இருந்து கொழும்பிற்கு விசாரணை என்ற பெயரில் தங்களது பாணியில் வல்லளைத்து செல்கின்றனர்,இவர்களில் யாரும் வன்னிக்கு திரும்பி வரமாட்டார்கள் என்பது வலிதரக்கூடிய,ஆனால் யதார்த்தம் இதுதான்.
16.வலிமை அங்கு களமகற்றப்பட்ட போதே தெரிந்த மாபெரும் உண்மை.இனி கொழும்பில் என்ன ஸ்ரீலங்கா பூராகவும் தமிழர் தாக்கப்படுவது மட்டுமின்றி இளைஞிகள் வல்லுறவிற்கும்,ஆண்கள் பெரும் அவமதிப்பிற்கும்,ஏன்?உள,உடல் காயங்களிற்கு களமமைத்து இனி அடிக்கடி காணாமல் போதலும் அடுக்கடுக்காய் நடந்தேறும், வலிய உண்மையை நாம் வாய் மூடி,மெளனித்து ஏற்கவேண்டிய,அல்லது ஏதும் செய்யமுடியாத வன் நிலைக்கு உள்ளாக்கட்டுள்ளோம்,இந்த முகம் ஏற்கெனவே அங்கே முகாம் அமைக்க தொடங்கி விட்டது.இனி அது பெருமுகம் கொள்ளும் யதார்த்தம் விரைவில் அரங்கேறும்.
17.கிழக்கில் உதயம் ஊடிவிட்டது,இனி வடக்கில் மகிந்தா வசந்தம் பூச வகிடெடுத்துள்ளான்.ஊது குழல்கள் யாவும் உசார் நிலைக்கு உகந்த தளம் விரித்துள்ளனர்,ஆயிலியமான ஆனந்த சங்கரியோ? தமிழர் கூட்டமைப்பை கூண்டோடு கூடேக கொக்கரிக்க தொடங்கி விட்டான்.
18.வடக்கில் விரைவில் தேர்தலாம் இன்றிரவு வர்த்தகமானி மூலம் ஜனநாயகமாக அரச அறிவிப்பாம்.
19.ஒட்டுக் குழுக்கள் சிறுவர்களை கடத்தும் ஈனம் ஒருபுறம்,
20.இந்த லட்சணத்தில் கோத்தபாயா?வன்னியில் எந்த பொதுமகனும் உயிரிழப்பின்றி தங்கள் ஊத்தை இராணுவம் களம் கடைந்ததாம்.விடுதலைப் புலிகளை பூண்டோடு ஆழித்து விட்டானாம்.ஆயின் ஏன் ஆங்காங்கு தடைகளும்,தடுப்புக்ளும்?
21.பொது,தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,சர்வதேச ஊடகங்களையும் ஏன் அங்கு ஏக மறுப்பு?ஏன் இவர்களின் பிரையாசையான பிரசன்னத்திற்கு தடை?கேட்டால் கண்ணி வெடியாம்,ஆம் இவர்கள் கண்ணிவெடி அகற்றுவதில் வல்லாளர்கள்?ஒரு போர் விமானத்தை ஒழுங்காக இயக்கத்தெரியாமல்,உக்கிரெயினிலும்,வெளி நாட்டிலும் தரகருடன் தகமேற்றிய வல்லமை தெரியாத எங்களிற்கு!
22.அதி முக்கியமாக அங்கு அடிப்படை தேவையான சுகாதார சீர்கேடு,
தம் காலைக் கடனைக்கூட கழிக்க முடியாத அதி கேவலமான,நிலை.மருந்து,அங்கு எள்ளவிற்கும் கொடுக்கப்படவில்லையென நியம் சாற்றுகிறார் வன்னியில் வாழும் என் உறவு.
ஆம்,
இது மகிந்தாவின் மாத்ரு பூமி?

ஐ.நாவின் பான் கீன் மூன் உண்மையில் பாரமான நெஞ்சத்துடன்தான் ஐ.நா வாசல் திரும்பினார்,ஆயின் என்னதான் பெரிதாக செய்துவிடப் போகின்றார்?வல்ல ஒரு நிதிப் பங்களிப்பிற்கு முகாந்திரம் கோரியுள்ளார்,உண்மையில் இந்த வல்ல பதவியில் உள்ளவர் ஆகக் கூடியது 15நிமிடங்கள்தான் அங்கு நின்றார்.தான் எவ்வளவோ நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டதாகவும்,இதுபோல் ஒரு வலி தந்த நிகழ்வை தன் வாழ் நாளில் பார்க்கவில்லை என கோடிட்டு காட்டியுள்ளார்,மேலதிகமாக இன்னமும் அங்கு நின்றிருந்தால்,எம்மவர்களுடன் மனம் விட்டு உரையாடக்கூடிய சாத்தியத்தை இந்த தாடகர்கள் சாதூரியமகவே தடுத்து விட்டார்கள்,தமிழர் கூட்டமைப்பிற்கும் இந்த நிலைதான்.

ஆக,
இப்படியான நிலையில் எங்கள் உறவுகளின் தாற்பாரியத்தை சில மணித்துளிகளில் உளம் கொளமுடியாமல் உளம் நொந்து போனதாக,செய்தியாளர்கள் குறிப்புணர்த்தினார்கள்.
ஆயின்,இதுவே அங்கு வாழ்வாக கரிக்கும் எங்கள் இனத்துயரை சற்றேனும்
கற்பனையில் என்றாலும் வியல்பம் கொள்ளுங்கள் அவர்களின் வேதனையின் தாற்பாரியம் புரியும்.இது வெறும் புரிந்துணர்விற்கு உட்பட்ட விடயமும் இல்லை,
இங்கு புலம் பெயர் உறவுகளின் ஒவ்வொருவரின் வாசலிலும் வன்னியின் சாவிரித்து,சோகம் கடை விரித்துள்ளது,எனவே இது பற்றி மேலும் விசாலிப்பது பொருத்மற்றதாகப்படுமா?

இல்லை.

என்ன நடக்கின்றது?
உலகே,என் உறவே சிந்தித்துப்பாருங்கள்.
உண்ண வழியின்றி,உடுக்க உடையின்றி, ஆயாசமகற்ற ஒரு துண்டு நிலமின்றி,உயிரிற்கு உத்தரவாதமின்றி,சொந்த நிலமின்றி,சுமை பகிர துணையின்றி,அடுத்த விநாடியில் என்ன நடக்கும்?,ஏது நடக்கும்? என்ற உகந்த விதமான உத்தரவாதமும் இன்றி,இப்படியே பல இன்றிகளுடன் எங்கள் உறவுகள் முகமிழந்து,சோகவலயத்தினுள்,சோர்ந்திருக்க,எதிர்கால வாழ்விற்கு எவரின் தைரியமான, உத்தரவாதமோ,அன்றி உறுதுணையோ இன்றி,போகும்,தினம்நகரும்மனிதநேயமற்ற,அரக்கர்கூட்டஸ்ரீலங்காவில்,தினம் நரக வாழ்வில்,அதன் சேற்றில் நாறும் எம்மவர்களிற்கு நாம் என்ன கைமாறு ஆற்றப்போகின்றோம்?
இத்தனை வடுக்களை சுமந்த உறவுகளின் எதிர்கால வாழ்விற்கு ஏற்ற எந்த பாத்திரத்தை நாம் ஏற்கப்போகின்றோம்?,அன்றி உங்கள் தொலைத்தொடரில் வரும் கற்பனை பாத்திரத்திற்காய் பாழும் கண்ணீர் விடும் எம் தேசத்துறவுகளே என்ன வழி சமைக்கப்போகின்றீர்கள்?

இதுவும் என்ன பத்தோடு ஒன்றாய்,,,,,? பதிலின்றி உங்கள் முகம் ஒழித்து,உங்கள் அறம் அகற்றி வேற்று அரிதாரம் பூசி வேலியகற்றி வேசையாடப்போகின்றீர்களா?

அன்றி மிகையற்ற துணை வேண,ஒற்றமையாக இயங்கப்போகின்றீர்களா?
உங்களின் தங்கமான,ஆதங்கமான,ஆரோக்கியமான,கரங்களை எங்களின் தங்ககங்கள் நோக்கி மிதவான தயவுடன்,நேர்த்தியாக நுகம் கொள்வோம்.

சுட்ட மண்ணும்,பச்சை மண்ணும் ஒட்டாது என்பர்,எங்கள் இதயத்தை,உறவை,உற்றாரை,உறவினரை,சொந்தம்,பந்தம்,ஊர்,எங்கள் தெரு,
நாம் இருந்த குடியிருப்பு,இத்தனை உற்றதையும் அற்றதாக்கி எம் அகமெரித்வனுடன் இனியும் சேர்ந்து வாழ்தல் தகுமோ? எங்களை ஊனர்களாக்கி,ஈனர்களாக்கி,இரத்தல் என்னும் இழிநிலை ஊட்டியவனுடன்,எந்த உவப்பு இனி உரமேற்றும்?ஆயின் எங்கள் சொந்த நிலம் மீட்க,எங்கள் துயரகற்ற,நாமே இனி வலிமையுடன் எங்கள் போராட்டத்தை மனுக்கொள்வோம் வலிதாக,எங்கள புலம் பெயர் உறவுகளின் தார்மீக,தாகமான,தரமான மேம்படுத்தலுடன்,வீதியெங்கம் நீதி கேட்போம்,இதுவரை எங்களின் உறவுகள் அடைந்த,சொல்லெணாத்துயரின் ஊனங்களை,வேதனைகளை,ஆழமான,ஆயரக்கணக்கில்,தமிழினம் அழித்த ஆரியர்களின் வல்வளைப்பில் வதைமுகம் கொண்ட,மாபெரும் மனித அவலம் விதைத்த பாதகன் ,ஆரியக்கூத்தன் மகிந்தாவின்,கோத்தபாயாவின்,சரத் பொன்சேகாவின் வல்வளைப்பின் அநியாயமாக,கொல்லப்பட்ட எங்களின் ஆத்ம பரிபாலனத்திற்கு பாதை கோரி,எங்களின் நீதி கோரி.

வீரியமாய் ஆத்ம போர்முகம் கொள்வோம்.நீதி தேவதையின் வீதி தேடி..
வீணர்களின் அநியாய கோர போர் முகத்தில் எங்கள் இனத்தின் வாழ்வு தங்கும் விடிவு கோரி.வாழாதிருக்கும் வன் முகம் மறைத்து மெனமையான,மெருதுவான,அன்பான எங்களின் ஆத்ம உறவிற்காய்,எங்களின் அரிய பங்களிப்பை ஆதர்சனத்துடன்,வினயம் கொள்வோம்,

பேணும் ஒற்றுமைகள் இனி எங்களின் விதி வரையட்டும்.
வேணும் வேற்றுமைகளை வதமெரிப்போம்,
வீணில் நேரமதை விதைக்காமல்,
பாரினில் எங்கள் பாதை விரிய,
எங்கள் வேர் பற்றி ஓர் விதி சமைப்போம்.
அது தமிழீழ மலர்வாய் முகம் விரிய,
எங்கள் ஆத்மர்களின் முகம் சூடி.

சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.


ஒப்புவமை இல்லான் தாள் பணியான்,இவன்
ஒய்யாரமெலாம் ஒரு போதில் தாம் தணிப்போம்.
தெய்யார,தெய்யனவெல்லாம் தொழுதங்கே களம் அழுகும்.
கையார யார் வருவார்?கைப்புண்ணழுக மருந்திடுவார்?

தப்புத்தாளங்கள்,தகமற்ற தரம் தனையும்,
சப்புக்கும்,
சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்,
உப்புக்கும்,,
உணவிற்கும் உசாவங்கே களமமைக்கும்,
தப்புக்கும்,
தானாக தரமற்ற உரமமமைக்கும்,
ஒப்புக்கும்,
உணர்விழந்த ஒட்டுக்குழு ஓதல் ஏற்கும்.

தன்நிலை புனரமைக்க தமிழர் நிதம் தகம் தேடும்.
வன்நிலை புவி அகக்க வையமெலாம் குரல் சுரக்கும்,
எந்நிலை கைவரினும், ஏகாந்தம் மையல் கொளோம்,
அந்நிலை தகர்த்தெறிய ஆக்ரோசமாய் முகங்கொள்வோம்.
தமிழர் நிலை சிரசேற்றி போர்முரசம் புவி இசைப்போம்.
அழுகும் தலை நிலைக்கொள்ளோம்,
ஆர்த்தெடுத்து இருப்பெடுப்போம்.

இன்னாதகமை எம் அகம் சுடும்,
இருப்பெலாம் தடவி சன்னதம் இடும்.
நெருப்பெரிந்த ஈழ வடுத்தடவி,செருக்கள,
நினைவே நிதமும் வன்மம் சூடும்..

பன்னாடைகளின் பாதமெலாம்,
பட்டாடை சூடி நிதம் மகிழ,
பொன்னாடை போர்த்தி புனையர்,
பட்டாசு சுட,
என்னா இயலுமென என் சொந்தம்,
சோகம் சூட,
பாராமுகம் சூடி நாம் பார்த்திருத்தல் தகுமோ?

பாரில்!,
புலம் பெயர் தமிழர் தலம் தளைந்து,
நிலம் உயர நிதம் நெடு பலம் நீட்டித்து,
வலம் வயப்பேற வரம் மீட்டி,நீட்டும் கரம்பற்றி,
நீட்சி குறைத்து உறவின் ஆட்சி அலகமைப்போம்.
இதை ஐயமின்றியே அனுதினமாக்க போர்க்கொடி
தூக்கி எம் தூமங்கள் தூய தூயபடி துய்ப்போம்.

இதை சர்வத்தின் தோள் சுமத்தி,
சர்வதேச ஊடகங்கள் சார்பெடுக்க,
பார் அகம் சுரக்க அலை,அலையாய் ஆர்ப்பரிப்போம்,
ஆழுமையாக்க ஓர் அங்கீகாரம் வினைத்திருப்போம்.

ஞாயிறு, 24 மே, 2009

ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.

எங்கள் விரோதிகள்,
இப்போதும் எங்களின் இருப்பு வாசலில்,
நெருப்பென்று தெரிந்திருந்தும்,
நேயமான வயல் விரித்து,
லாவகமாக, இப்போதுமே?
புரியவில்லை!இன்னமும் புரியவே இல்லை.

என்று,
எப்போது? எப்படி?
இவர்களின் வஞ்சமனம்,
பொழுது புலரும் முன்
உதிரும் வாசம் போல,
எப்படி இவர்களால்,
அத்துணை அரிதாரம் பூசமுடிகின்றது?

அத்தனையையும்,
அந்தர் பல்டி ஆர்த்தடித்து,
உலக மகா பொய்களை,
நம்பிக்கை துரோகங்களின்,நரித்த,
வஞ்சனை உரோமத்தை,
எப்படி இவர்களால் இத்துணை முகவரி கலந்து,
களம் புங்க முரசமடிக்க,
கனகச்சிதமாக கரமாற்ற முடிந்தது?

கங்குலமகற்ற கற்ற வித்தையின்,
ஓங்காளம்,அகன்றெடுத்து,
தன் குலம் அங்கே நீள மயம் அகன்று,
நித்திய வாழ்வழிந்து.மருண்ட விழிகளுடன்,
நெருடும் நினைவழியா நாட்களுடனும்,
நகர,நரக, வேதனையில் மீட்சிப்பின்றி,

அகரம் அறுக்கும் அரகர்களிடை இடுங்கி,
பகர முடியாப் பாரங்களுடன்,திமிறும்
உளவெரிப்பு வெட்கைகளின்,வேட்கைகளை அகமகற்ற,
தளமின்றி,உற்ற உளமின்றி, உளவேட்கை, இறக்கிவைக்க,
ஆதங்க முகம் வேண்டி,வெறித்து வெட்ட வெளி நீர்க்க,
வாதை முகம் கோதுகையில்,

இவன்,நேற்று,
இந்த உகற்பிற்கு உள்ளாக்கப்பட்டவன்,
எங்கள் உபாதைகளின் வலியறிந்தும்,பட்டகாலில் ரணம் செருக்கி,
கலவி மறந்து நின்றானா,?கயமையை கலந்து ஏற்றானா?

எங்கும்,எப்போதும்,ஞாலத்தில்,
ஞானத்தில்,ஞான்றும் ஞாயம்.
வலிமை அகலும் போது,
புலியின் காதிலும் புற்றெறும்பு,
நலம் கேட்கும்?பரமசிவன் பாம்பு போல்,
காலம் இது கலிகாலமென,
காழ்ப்புணர்வேறி நிற்கிலோம்.

கரிகாலம் உதயமாக!
காலமேறி நாம் புலர்வோம்.அதுவரையும்,
ஓய்வேற்றி ஓம்பிலோம்,
ஒப்பற்ற பணியை
ஓர்மமாய் ஒப்பேற்றுவோம்,

தளம் மீட்கும் களம் காண,
காத்திரர்களின்,
தீட்சைகள் திசையேக,
உத்யானம் உரமேற்றும்
யாத்திரை உதிக்க நாம் நீட்சியடைவோம்.
உரப்போம்,உயிர்ப்பூக்கள் பூக்கவைப்போம்
உயிர்ப்பான உலகம் காண்போம்,

எல்லாமே,எங்கள் வசமற்று போகினதோ?
வல்லாள இனம் ஆங்கு வசப்புற்று ஓயுமோ?
கல்மேலொரு நாருரித்து,களம் காண்போம்,
அல்லாத நிலை தகர்ப்போம்,
எல்லாள கனதியின் ஏந்தல்களின் சந்நிதியில்,
ஒப்புவமையற்ற ஓங்காரங்கள் மீதொரு,
சத்தியம் உரைப்போம்.சாத்தியம் வகுப்போம்.

தனக்குவமையில்லாத எங்கள்
தங்ககங்களை தகம் கொள்வோம்.
இனவெரிப்பில் இழந்த எம்
சொந்தங்களின் சோகம் அகமேற்றி.
வனப்புகந்த வல்லாரின் வாசல்கள் யாவும்,
புவனத்தில் புதிதாக புலர.
இந்த பொய்ப் புனையர்களின்,
கட்டுமான அரிதாரம் கரிந்தேக!
வகிர்ந்தெடுக்கும்,எம் வல்லமையின் வல்லமை.

ஆம்,
வைரசைவிட வலிமையானது இந்த
வதந்தி,
வந்திருக்கும் செய்திகளின் சாரம்
சோரமேற்ற சொருகப்பட்டுள்ளதா?
ஆயின்,
எப்படி தமிழோசையில்,
இந்த பத்மாநாதனின் செவ்வி,
ஏந்தின்,
ஆயிலியம் பூணில்,
எந்த பத்மவியூகத்திற்கு இந்த?
வித்தகம்?

வெறும் வதந்தி இல்லை என்பது பத்மநாதனால்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
வீர புருசனாக எங்கள் மேதகுவும்,
அதன் மடியில் மற்ற மாவீரங்களும்,
மறுக்களத்தில்,சிங்கள பொருது களத்தில்
போர் மடியில் எங்களின் வீர விழுதெறிந்து,
சகலதும் அறுந்து ஆரியனால்?

எனினும்,
என்னைப்போலவே என்னுள்ளமும் ஏற்க மறுக்கின்றது.
காலக் கருக்கலில்,
எல்லாமே கனதியின கரம் இறுக்கும்.
வல்ல பகை எங்களின் வாகை தகர்த்தான,
கதை காதையாகும்.
காலம் கனிவு ஒற்றும்,

இல்லையெனில் எப்படி,
இன்று கூட,யாழ்செல்லும் படையணிப் பலம்.
தளபதி வெற்றிக்குமரனும்,வெளி விவகாரப் புலனாய்வுத்துறைத்
தலைவர் அறிவழகனும்,
ஆழமான காத்திரமான சேதி தந்தார்கள்,
கூடவே ஒற்றரின் வீற்றிருப்பில் நக்கீரன்,
பல மடங்கு ஆதாரமென,,,,,,

ஆழுமைத் தலைவனின் அக,புற நலம்சாற்றி,
ஆழுமையான அரசியல் மீண்டும்,
அண்ணலாய் அரங்கேறும் அரிய பாதை.
சுரங்கொள்வோம்,
எந்த விதையும் எறிந்தவுடன்,
ஈர நிலம் பற்றாது,ஊர்
பார்க்க எதுவும் உரம் உறக்காது.

வீர விழி வியப்பேற்றி,
ஊரறிய வலம் வரும்,
ஈர விழி யெறிந்து, தேறும் சாரம் சான்று,
நீர் தெளித்து வயல் பரப்போம்,நீங்காதான்
நெகிழ்வுரைப்போம்,நெடுதுயர்வோம்.

வெள்ளி, 22 மே, 2009

சபாஸ் சரியான தேர்வு.

சபாஸ்,
சரியான தேர்வு,
ராஜீவ் காந்தி விருது,
மகிந்தாவின் மகோன்னத மனித உரிமை மதிப்பிற்கு?
பாரதத்தின் பரம்பரை பூர்வீகம்,
பச்சை துரோகத்தின் வாரிய விதைப்புரைப்பு.

பாரின் பதிவுகளில் பாரிய மனிதன்,இவன்
பேர் சுமந்து ஒரு விருது அ(ழி)ளிப்பு,கூட ஓர் விருந்தழிப்பு,
அற்புதம்,
மனிதம் அங்கே மணி மகுடம் சூட்டி,
வலுவீற்றிருக்க.

அனிச்சம் பூ ஆகியதாம் முன்னர்
முடிசூடி,கொற்றம் சூழ,
கொடி திக்கெட்டும் திடகாத்திரமாய் பறக்க,
முச்சங்கத்துடன் முத்தெடுத்து,
கோல முகங்கொள கொலு வீற்ற,
கோமேதக தமிழர் இனம்.
முந்தையர்,
எங்கள் எந்தையர் ஆண்ட தமிழ்க்குடி,
அகண்டம் அகண்டு ஆண்ட,
அச்சமற்ற பாரம்பரை தமிழ்க்குடி.

இந்த தமிழ் இனம் இன்று,
வன்முறையாளரென்றும்,
பயங்கரவாதிகளென்றும்,
வன் பெயர் வலிந்து சூட்டி,
ஸ்ரீலங்காவைச் சிதைமுகமாக்கியதாம்,
ஆரோ? கணிக்கும், காரணம்,

அங்கு தமிழர்க்கு,தேனும்,பாலும் ஆறாய்ச் சுரக்க,
சிங்களம்,
அவர்க்கு,எந்த
தீங்கும் கூட கனவில் நினைக்காத,
கலக்காத அங்கத நாட்டு ஆரியம்,
அகமாய் தமிழருடன்,சிங்களமும் சிறப்பாய்,
சீராட்டி,சிகை முகைந்து.
ஆங்கு நிலை எங்குமற்ற அறம்
ஆற்றி தளைத்திருந்ததாம்,

தமிழன்,
தரமற்று,தரணியெங்கும் தாவி,
பயங்கரவாத தளமெடுத்து,
சிங்கள தீவில்,
சிதில முகமமைத்து,சிங்கள முகம் கரைத்து,
அமைதியின் அகம் அகற்றியதாம்,
தமிழ்ப்புலிப் பயங்கரவாதம்,

அதை,
மகிந்தா மதியூக முகங்கொண்டு,
எங்கள் இனவிடுதலையின் முகாந்திர முகமெல்லாம்,
முற்றாக முகமழித்து முன்மாதிரியாக இகத்தில்,
தேற்றம் பெற்ற தோற்றமாக வன்முறை தகர்த்த,
ஏற்றம் உற்ற இராணுவமாக,
தன்னை உலகில் உதாரண புருசர்களாக,
அரிதாரம் பூசியதாம்.
அற்றதையெல்லாம் அழித்ததால்,

அகம் செழிக்க, ஆரிய,பயங்கரவாதியின்,
அரியணைக்கு இந்தியாவின் தேசியப் புதல்வன்,மாஜி
பயங்கரவாதி ராஜீவின் ராசியான விருதாம்,
சபாஸ் சரியான தேர்வு.
வாழ்க வையகத்தில்
நேசமிகு ஜனநாயகம்

வியாழன், 21 மே, 2009

விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்


வாழ்வழித்தான் வகையற்ற
வதை கொடுத்தான்,
பாழெடுத்தே எல்லாப் பரப்பிலும்
வரப்பு விரித்த வஞ்சகமே,
தரிசாக்கி,அதையே தம் பரிசாக்கி,
விரிவாக்கிய எம் தேச
எரிப்பின் தேகம் விரித்தவனே.
உருவாக்கிய, உள்வாங்கிய,
உருவகம் தானென்ன?

ஆதாரம் சாற்றி நிற்கும் தமிழின
அழிப்பன்றி வேறென்ன?
ஏனென்று கேட்பாரற்று,நாதியற்ற ஈழத்தமிழினம்,
பாதி வழி காவி வைத்த காவியமெலாம்,
ஊதி,
உதிர்ந்து,
மீதியற்று,
மிகையழிந்து போயினவோ?
சாதி,
சங்கம் எல்லாம் சிங்களமென சிகம் ஒதுக்கி,
சாவாற்றி சகலதையும் சங்கமிழக்க
சாறி நின்றோம்.
எனினும் தேறி நிற்போம்.

ஏனென்று கேளாத முகம் தொடுத்தான்,
எல்லாமே குரலழித்து குதம் நுகைத்தான்,
வல்லாள வாகையொன்று வகையற்று போனதாய்,
தள்ளாத தன் தரம் சுரந்தான்,இதை தாங்கியே,
எங்கள் இனமழித்த சுரம் மறைத்தான்,சர்வம்
ஏந்தியே இதை மார்தட்டி மகிழ,
சிங்களன் தினமுரைத்தான்.

நாமோ!
வழியற்று,போகும் பாதையற்று,
சமாந்திர கோடு விரித்து,
திசையும் திசையற்று,
பாழெடுத்து பயம் விழைந்து,
சாகும் நிலை தவிர்க்க சாதிக்க போவதென்ன?
விடையறுக்கும் வினா தெடுத்து,
விதமுரைக்க விதிர்க்கின்றோம்.

வீரியம் ஆங்கு விதை தளர்ந்து நின்றதாக,அதன்
வேரறுத்து,பரவிய விழுதறுத்து,
அதன் நிலமெலாம் வீசினான்.
உரமெல்லாம் உறுத்தழித்தாக உறுமியே தளிர்க்க,
விசம் தரித்து வில்லாள விசமிகள் களம் அறுத்து நின்றான்.
காரிய கருப்பு விதைந்து,
வியாபிக்க எங்கள் வளமெல்லாம்????

எண்ணவே மனம் வேகும்,
திண்ணமாய் தினம் இறுக்கும்,
உண்ணவே மனம் மறுக்கும்,உளமறுந்து,
சாய கனவாக களம் விரிக்கும்.
கன்னமிட்ட கயவர்களின் கயமையே சன்னமிடும்,
வேளை,காலம்,நேரமற்று,
அனு தினம் இதுவே சுரக்கும்.

நெஞ்சறுத்து,இதயம் கறுத்து,செல்லும்,
வழிதேடும் என் தேசத்துறவிற்காய்,
என்ன பணியை என்னால்? ஆற்றலாம் என்ற
அடையற்ற அகம் வினாவி வினவ நான்,
நான்மட்டுமல்ல நாம்??

குதிர்க்கும்,மனசரைக்கும்,மதி விழிக்க,
மார்க்கம் தேடும்.
பாதை இதுதான் என்ற பாத்திரத்தை,
பகலவன் கூட நாமும் பாத்தியதை விரித்தோம்.
ஏந்தி நின்ற அந்த தேசத்திலே ஏகாந்தமற்று,
நீந்தி நின்ற என் தேசத்துறவுகளின்.நேச நெஞ்சமே
எம் நெஞ்செல்லாம் நெறியூட்டும்.

மீதி வழிசமைக்க மீட்பாளர்களின் பாதை இன்னமும்,
காதைவழியென்ற காலம் கனிந்த அந்த நாட்கள்???
எம் கன்னமறையும்,
இவ்வளவு காத்திரத்தையும் களமிறக்கிய எங்கள்
கல்லறை தேவர்களின் கரம் எங்கள் திசைஏகி,
உணர்வாலே எங்கள் உளம் சீண்டும்,

விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்,ஆயின்
அஞ்சி நிற்கும் எங்கள் வினை ஏற்ற,
துஞ்சி நிற்காத துறம் கேட்கும்,மிஞ்சி என்ன
உள்ளது எம் ஊர் மீட்க?
துஞ்சாமல் நாம் துர்க்கிப்பை துற மறைத்து,
அஞ்சாமை அரண் ஆற்ற நாம்,
கிஞ்சித்தும் கிறங்காமல் கீர்த்தெடுத்து,
வெஞ்சமரை வேணவேண்டும்.

வஞ்சித்த வாகை எம் வசமாக்க,
செஞ்சித்த சேரனின் தீரமேற்ற,
சஞ்சீவிதங்களை எம் மையம் தேற்றுவோம்,அன்றி
கஞ்சித்துப்போகும் களமே காண்போம்.
எஞ்சியதை ஏர்த்தெடுத்து
சீராக்கி எங்கள் யாகம் மொய்வோம்.

தர்க்கிக்கும் நேரமில்லை தயங்குவதற்கும் சாரமில்லை.
வேர்க்கங்கு வேகமேக்கி நேர்த்த படை வாகையிறக்கி
ஊர் திரும்ப உரமேற்போம்,உளவுரணால்,எங்கள் மண்
தரமேற்போம் தக்க,

உற்றபணி உய்த்தங்கே உயர,தேசப்புலர்விற்காய்
தேர்ந்த அணியை தேசப் பிரசவத்திற்காய்,
ஆழக் கருக்கொள்வோம்.
ஆர்த்த பகை அருக்கொள்ள.

தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்


இந்த ஒரு போலிப் பீராங்கி பிரச்சாரத்தில்,
அந்த மண்ணில் எம் வேதனைகள்,
கேட்க யாருமற்று சாம்பலாக உதிர்ந்தனவே,
உற்ற ஒரு யந்திரத்தை தந்திரமாய் உரயோகித்து,
அட்டகாசமாகவே தன் ஆரியத்தை ஆற்றி தழைத்தான்.

கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடும்
களமல்ல இது,
ஒளிக்கின்றேன் கண்டுபிடியெனும் கேத்திர கணித
தேற்றமும் இல்லை,
தோத்திரம் ஓதி சூத்திரம் சூட்டும்
பாத்திரமும் இல்லை,மாறாக எங்கள்
தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்,

தலைவனை ஓர்மமாக தாங்குபவரின் தானத்தில்
இருப்பெடுத்து வினைவது,
எங்கள் ஆதவனை கொஞ்சம் ஆசுவாச,சுவாசத்திற்கு
தங்கவிடு.
காலத் தேவைகள் ஆயிரம் இதை அவதானமாக,
நிதானித்து தளமிறங்கு,
கோலத் தவமிருந்து கொள்வான் அதை தாங்கி
காலக் கடனிற்கு கைகொடுப்போம்,

தற்போது தளம் காட்டும் புறச் சூழலை,
மறப்பேற்றாது மதியூகத்தோடு மனுக்கொள்,
சிந்தையில் மாற்றமின்றி சிரக்களமிடு,
மாந்தையாய் மக்களங்கே மன நோயாய் மாய்கின்றார்.
மொந்தையில் கள்ளாய் சில மொக்கர்கள் மோகிக்கின்றார்,

தற்போது ஸ்ரீலங்காவில் நுகம் கொள்ளும்
யாதர்த்தத்தை கவனி,நாம் நிதம் கையாளவேண்டிய
கள விந்தை புரியும்,இது புலவாழ்வின் புதல்வர்கள்
முகம் கொள்வதிலே மூர்க்கமாய் தகம் கொள்வதிலே,
தங்கும் இதன் அங்கம் விரியும்.அஃதின்றி
சங்குதான் எம் சகலர்க்கும்,காலக்
கடமை இதன் சாரம் கைநெறி தளர.

களநிலை இப்போ கைமாறி,
தளம் தகற்றுவது தமிழர் புல களத்தில்.
இளநிலை முறைகள் கரம் பற்று,
பல நிலை அவர் கொள கரம் உற்று,
உள நிலை உறுப்பேற்று,

விரைய வேணிய வீசம் புரியும்.
ஆயுத களமிறங்க முதலில் அரசியலை அவதானி,
ஆழக்கடல் பரப்பின் சுழுமியங்களை சுரக்கும்,
சீதளங்களை சிரந் தாழ்த்து.

எம் எதிர்காலங்களின் ஏளனங்கள் புரியும்.
வல்ல புலிகளின் வல்லாற்றலை சீரமமைக்கவேண்டிய,
வன்மம் புரியும்,
வெள்ளோட்டமாய் இப்போ வெள்ளவத்தை முதல்
சிங்கள எல்லையில் சீண்டதொடங்கப்பட்ட சூத்திரம் சுவாசி.
ஏன்?
அங்கெலாம் அலை மோதுவான்,
புலவாழ்வில் புதைந்நிருந்த சிங்களவன்கூட
ஆங்காங்கே எம்மவரின் அவயங்களின் அரங்கேற்றும்
வன்ம வதம் நொய்த்திருக்க நோத்ததின்,
நேரியம் சாற்றும் சாரம்,
பலமிழக்க வலமிழப்பாய்.

எத்தனை தடவை உங்களத்திற்கு ஓங்கி,வீங்கி சாற்றியது,
புத்தகத்தில் நீ படித்து புளகாங்கிதமடைந்தது,
அது ஏனோ,தமிழனிற்கு ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பதை,
ஏற்றமெனவெண்ணி, கலந்து குழம்பி,,,,,
ஒற்றுமை என்பது எப்போதும் பலம் என்பதையும்
ஏட்டச் சுரக்காயாய் எண்ணியதன் தளம்தானோ?

தகமை ஓன்று தானிருக்க ஒற்றுமையொன்றே ஓர்மம்.
அகமை இதை ஆற்றல் மொள ஆற்றுமையே தர்மம்.
உவமையின்றி உறுப்பேற்ற உரிமையே தாளம்,இதை
கயமையற்று காப்பெடுக்க காலம் ஈட்டும் தமிழீழம்.

புதன், 20 மே, 2009

பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.


அவலம்,மாபெரும் மனிதப் பேரவலம்,
பொருதும் பாதகம் விழையும் முன்னே,
அரும்பும் முன் இந்த அவலங்களை களைவதற்காய்,
ஆரியத்தின் அகத்திரையை ஆதாரமாய் உன் வாசலில்
ஊரும்,உறவும்,உற்ற துணை யாவும்,
எத்தனை வீச்சுடன் உன் வாசல்வரை வலிந்துரைத்தோம்.

ஐ.நாவின்
வேதகனே உன் காதில் என்ன நீ உளி கொண்டா,
உறைத்து நின்றாய்?எங்களின் உறவையெலாம் அந்த
காதகன் கரைக்கும் வரை களி(ழி)த்து தின்றாய்.
சாதகமாய் உந்தன் சன்னதியில் இப்போதாவது,எங்கள்
சன்னமான குரல் கேட்குதா?
இல்லை,என்ன அந்தப்புறத்தில் அர்த்தமற்ற கூச்சலென
அகமறந்து நோற்றாயே?

ஸ்ரீலங்காவில்,
ஆரியனின் ஆடியபாதமெல்லாம்,
திராவிடனின் தின[ட]மழித்து தீர்ந்தது தீராத தீவரவாதமென
நீ வகிடெடுத்து மகிந்தாவின் வாசலேகப் போகின்றாய்?
என்னே உந்தன் நெஞ்சகம் சூடிய
வஞ்சகப்புத்தி,

லங்காவில் நீயென்ன லாவகமாக,
பூங்கா அமைத்தொரு புத்த கோயிலமைக்க,
அத்திவாரம் போடவா ஆரவாரம் அகமமைத்து,
சித்தம் கொண்டுள்ளாய்,தித்திக்க
சித்திக்கும் உள்ளம் மௌவ்வினாய்.
எத்திக்கும் ஏதோ உளறினாய்!

சித்தம் கலங்கி நாம் நித்தம் உன் வாசல் வந்தபோதெல்லாம்,
புத்தவாதம் உன் புலம் மறைத்து நின்றதுவோ?
எத்தனே!
எத்தனை ஆதாரம் ஆரமாக நின் தளம் தந்தோம்,
தந்த தாரம் ஆனதாக்கம் அற்றதென்று நீ
அகம் ஒளித்து ஓதினாய்.இன்று
எந்த வேதார்ணியம் வேக நீ ஸ்ரீலங்காவின் வீதியேக,
விந்தம் கொண்டாய்?

போ,
அங்கு போதையூட்டும் சிங்களத்து சிங்காரிகளின்,
அங்கம் தழுவு,ஆர விந்திடு,
மகிந்தாவின் மங்கள வரவேற்பில்,அந்த செங்கள வரவேற்பில்,
தங்கத் தமிழரின் அங்கம் சிந்திய குருதியில் ஓர்,
ஆனந்த கூத்தாடு,அப்புறமென்ன ஆரவாரமாக அந்த
ஆரியக் கூத்தரின் ஆத்ம போதையில் எம் ஆத்மங்களை கரைத்து குடி..
ஆ,
மறந்து விட்டேன் ஞாபத்தில் ஞாயம் தெளிக்க,
விழியில் உனக்கு ஞானம் மிளிர,
மறந்திடாமல் தலதா மாளிகை ஏகு,
அங்குதான் புத்தனின் புனிதப் பல்லு,
ஆசுவாசமாக ஆங்கு அலங்கரித்திருக்கும்.
புண்ணியம் ஏந்திவா,மொட்டை தலையர்களின்
ஆசியையும் அப்படியை உன் நுதம் மொள்ளு.

மீண்டும்,
ஐ.நாவின் வாசலேகு,அங்கு நீ நுகர்ந்த
நூதனங்களை நீங்காத நினைவேந்தி.
ஆகா,
என்னே!
அந்த சிங்கத்தின் சீற்றமென,
வன்னியில் எந்த வதைமுகமும் வாதிக்கவில்லையென,
தன்மை மேயும் மனிதப் பே(போ)ரவலம் விரிக்காமல்,
தங்கும் மனித உரிமை மதித்து மதியூக வெற்றியீட்டிய,
வேதமென,ஆழுமைப் பத்திரம் அகம் சுரத்து,
வல்ல நிதி வளங்க நீ வையகத்தை வரப்பேற்று.

இதுதான் நீ எங்களிற்கு ஆற்றும் ஆதார சுருதி,
ஆயினுமென்ன!
சுரமிழந்து சோரமாட்டோம்,
சுரக்கும் எங்கள் சுருதி மீட்டுவோம்.

விழ,விழ எழும் எம் தாரக மந்திரம்,
ஒன்று விழ ஓராயிராமாய் ஓங்காரிக்கும்,
ரீங்காரிக்கும் சூரிய ரிதம் மிளிர்ப்போம்.
தான் நிறைப்போம்.எங்கள் வாசல் எம்
வாகை சூட வளமான வகை மொள்ளுவோம்.

நீயே ஓர் நாள்,
ஒவ்வும் ஓர் திருநாள் எம் வாசலை தீயே!
மேவி அழைக்கும் மேதகு மேவுவோம்.
மேதினியில் பூபாளம் இசைக்கும் எம்
மேம்பாலம் கட்டுவோம்,எங்கள் தேசம்
அதைக்கட்டுவோம்,எங்கள் ஆத்மாக்களின்
ஆரணங்கான ஆலயம் அமைத்தே தீருவோம்.
சூரியத் தேவன் சூட்டும் சூசகமான வழிபேணி.

வலைப்பதிவு காப்பகம்