சனி, 28 நவம்பர், 2009

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.


அருகிருந்த துணையின்றி
அழுவதில் சுகம் வருமா?
மனம் விட்டு அழுவதில்
மானசீக சுகம் உண்டு. நெஞ்ச பாரமதை,
இறக்கிவிட பஞ்சாகும் நிறைவுண்டு.

செயலது எம்மாலே நாமே இயக்கவேண்டும்.
எமக்காக நாமே எம்மையும் இலக்கவேண்டும்,
இழப்புகள் இலங்குவதும்,இயற்கையாய் நடப்பதுண்டு,
ஈடாட்டம் கொள்வதுவும் இயல்பாய் இலங்குவதுண்டு:

ஒன்றனதன் இழப்பிலே ஒன்று மலர்வதுண்டு.
நின்றனதன் நிலைப்பதனை நித்திலத்தில் நீயும் உணர்.
கொன்றதன் கோலத்தை கோபுரமாய் கோர்த்துவிடு.
அன்றனதன் காரியத்தை அன்றன்றே ஆற்றிவிடு.
ஆனது ஆகட்டும் ஆர்வமாய் அகன்றுவிடு.

சிந்தனையின் சூட்சுமத்தை சீராக நீவி விடு.
நிந்தனை செய்பவரை நிட்சயமாய் விலக்கிவிடு.
சொந்தமென்று சொக்க வைக்க சோபனமாய் உறவு வரும்.
பந்தமென்று பதவிசாக பாங்குடனும் உலவி வரும்.
உந்தனது உற்பவத்தை உருவவும் கோலமிடும்.
உற்சாகம் ஊட்டுவதில் உறவறுக்க உலவிடும்.ஆகவே
அற்பர்களே இப்படி அடுக்கடுக்காய் அனலிடுவார்-உந்தன்
அற்புதமான ஆற்றலினால் அத்தனையும் தவிர்த்து விடு.

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.
சுற்றம் சூழத்தாரை எந்த சூழலிலும் சுரண்டாதே.
குற்றம் குறை கூறாமல் குன்றாத உதவி செய்.
மாற்றம் எந்த வேளையிலும் தோற்றமின்றி தோன்றி விடும்.
மாநிலத்தை புரிந்து விட்டால் மார்க்கமதும் தேற்றி விடும்.

சுகமான வாழ்வுனக்கு சூத்திரமாய் எண்ணாதே.
அகமான வாழ்வில்லை அடிக்கடி மறக்காதே.
முட் கம்பி வேலிக்குள்ளே உன் முதுசங்கள் அகதியாய்
முடிவுறாத வேதனையில் முடிச்சுள்ளான் எதிரியவன்
முடிவெடுக்க நீயும் முகாந்திரமாற்ற வேண்டும்.முடிந்தவரை
அவர்கட்கு முனகாமல் உதவி செய்.

வியாழன், 26 நவம்பர், 2009

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.


பூபாளம் புலரும்
பூமிப் பந்து மெல்ல அசையும்
புள்ளினங்களும் மெல்லிசை இசைக்கும்
நீர்ப் பரப்பெங்கும் நெகிழும்
ஆலோலம் பாடும் செடி,கொடி,மரங்களெல்லாம்
ஆலிங்கனமாய் ஆரோகணிக்கும்,
வான் பரப்பை மென் முகில் வையப் பரப்பெங்கும்
நெகிழ்த்தி பரவசமாய் பாவும்.
இந்த இயற்கையின் இந்த பரப்பளையும் முகையை
பரவசப்படுத்த பகலவனின் பார்வையே முகாந்திரம்
முகிழ்த்த மூல காரணம்.

சூரியனற்ற பூமிப் பந்தை
யாராலும் கற்பனையிலாவது காணமுடியுமா?
ஆதவனில்லா அவனியை அகப்படுத்த முடியுமா?
மேய்ப்பானில்லா மேனியர் மேதினியில் மேன்மை கொள்ளல்
மேய்ந்தவர்கள் காண்டீரா?
ஆலிங்கனமற்ற ஆனந்தம் அவனியில் ஆர்ப்பதுண்டோ?
ஆயிழையாள் அற்ற அறமெங்கும் உண்டோ?
அவர் தம் மழலை இன்றி அரனேதும் உண்டோ?

இத்தனைக்கும் மூலம்
ஆதவனெனறால் மறுப்போர்தான் உண்டோ?
இதைவிட வலிமை உள்ள வையவர் யாரும் யாண்டால்
பூமிப் பந்தே புவனத்தில் பூண்டே.
இத்தனை மகிமையின் மையலை ஒத்தவன்
ஈழத் தமிழர்க்கு இளையோன் எங்கள்
கிழக்கின் கீர்த்தனன் வல்வை மண் ஈன்ற
மைந்தன் ஈழ வேந்தல் பிரபாகரன் தவிர வேதம் உண்டோ?

தமிழ் இலக்கியத்திற்குள் அடங்கா இலக்கணமவன்,
ஈழ விடுதலைக்காகவே அவதரித்தவன்,ஈழ வானின்
பகலவன்,பகைவர்க்கு சிம்ம சொப்பனவன்,பாங்கானவன்
தமிழீழ விடுதலை வேட்கை பூத்தவர்க்கு பா“ அவன்
எழுத,எழுத இனியவன்,பகை பரப்பளந்தவன் பாரில்
பூக்கும் புவன தமிழீழ கட்டுமானத்தின் கரை கடைத்தவன்:

ஆதலால்தான்
அயலவர்க்கு அமுதமானவன் அவர்தம் ஆளுமையில்
பெரும் வீச்சேந்திய அசகாய நர்த்தனம் நாட்டினான்.
இவ்வளவு கட்டுமானங்களின் ஒப்பீட்டளவற்ற ஓங்கார நாயகனின்
ஒவ்வோர் அசைவிலும் கட்டுண்ட காத்திர நாயகர்கள்தான்
எத்தனை பேர்,
அத்தனையும் எங்கள் மாவீரச் செல்வங்கள் என்றால் மிகை ஏது?
இதில் வகை என்று வேறுண்டா?

விடியல் ஒன்றே இலக்கு
ஈழம் விடியும் இமாலய நாயகனின் பெயர் உச்சரித்து
எம் பூமியை புனிதமாக்கிய சரித்திர நாயகர்களே!
உங்களின் தியாகத்தை எந்த மொழிகளிற்குள்ளும் கட்டி,
அவை
சொரியமுடியாது.
ஆம் இதுதான் யதார்த்தம்.

தமிழினம் என்றால் அது தலைவன் பிரபாகரன் பெயரின்றி
அசைவை ஆர்க்காது.
உதிக்கும் திசை பார்க்கும் எம் உத்தமர்காள்.
ஆதவன் யார் சொல்லி ஆழிக் கரை ஏகுவான்.
இடம்,
பொருள்,
ஏவல்,
காலப் புற யதார்த்தம்,
இத்தனையையும் அறியும் ஞானம் படைத்தவன்
ஈழ ஞாயம் அறிவித்தவன்,
அவனறியா கால,நேரம் யாதும்
உண்டோ?
ஆகவே என் இனிய ஈழ தேசத்துறவுகளே!

எங்கள் அன்னையிலும் மேலான பூமிப் புதல்வர்களாம்
எம் மாவீரர்களை நெஞ்சார அவர்கட்கு புனிதமான
வீராஞ்சலி மானசீகமாக மைத்து வீர சபதம் செய்வவோம்
வாருங்கள் அணி,அணியாய்,
இன்று நாம் பேரணியாய் செலுத்தும் பேராண்மையான அஞ்சலிதான்,
எம் பேராளனாம் அண்ணன்,பெருந்தலைவன் பிரபாகரனிற்கு கூறும்
பிறந்த நாள் நற் செய்தி ஆகும்.

நெஞ்சம் கலங்குமா?
நினைவு சிதையுமா?
துஞ்சும் கோலத்தை தூமணி துய்க்குமா?
இல்லை!
கலங்கும் நாளல்ல,
காத்திரமான,நேர்த்திணை நீட்சிக்கும்
நேரிய நாள் பூத்திருப்போம்!
புது வாழ்வு புலவ யாத்திருப்போம்.
ஒப்பாரும்,மிக்காரும் அற்ற பெருந் தலைவனின் வீர --
வரலாற்றிற்கு வித்திட்ட இந்த வீரிய நாளில்
எம் ஆயங்களை அகன்றெடுப்போமென சித்திக்கும் சித்தம் கொள்வோம்.

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.

புதன், 25 நவம்பர், 2009

அகமாக உற்பவத்தில் உரமேற்ற!


அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
என்ன கடனாற்ற போகின்றோம்?அவர்
தூய உள்ளம் புளகாங்கிம் புலவ என்ன,
கருமமாற்ற பாத்திரமேந்துவோம்?

ஆத்ம சோதிகளின் மூல தானத்தில் என்ன,
முதுசம் முகிழ்விக்க முன் நிற்கப் போகின்றோம்?
அவர் முன்றலில் முகம் புதைத்து எம்
ஆற்றலை ஒன்றாக்கும் வரம்கேட்போம்.

அவர் தம் தாகம் தீர்க்க வலு கேட்போம் –அந்த
உறுதியின் உறைவிடத்தில் முகனமர்ந்து எம்
ஈழ தாகம் இழைக்கும் சத்தியம் சாற்றுவோம்,
சோர்ந்து போகா வல்லமை யாப்போம்.

எம்!
இனிய தேசத்து தேமாங்கின் முத்துக்களின்,
முகாந்திரம் மீட்கும் பணியை இன்னமும்,
இன்னமும் ஆக்ரோசமாய் முன்னெடுப்போமென,
இங்கிதமான சங்கீதத்தின் சாத்தியம் சாற்போம்.
வாருங்கள்!
எம் இனத்தின் விடுதலை விரும்பிகளே.

அந்த புண்ணியர்களின் பூர்வாங்க சந்நிதியில்,
ஆத்மார்த்தமாய் ஆழ புதைந்து,
அவர் யாகங்களை,
ஆழமாய் தொழுது,
அவர் மன சாந்தி கொள்ள,
பாதி வழி பயணத்தை நாம்
சீராய் முன்னெடுப்போமென
எம்!
சத்திய வேள்வியின் சாரங்களை,
சாத்தியமாய் வெல்வோமென,
நித்தியமான உங்கள் ஈழக் கனவை
நிச்சயம் வெல்வோமென ---அந்த
உத்தமர் மூலத்தில் முகங் கொள்வோம்.

ஈழக் கனவுடன்
ஈகையான உம் உறவுகளினதும்
வித்தகமான விதை குழி மீதொரு
சாசனம் எழுதுவோம்,அதுவரை
இந்த!
சாகித்தியமான சாகரங்கள் சகக் கொள்ளும்.
விதி வெல்லும் விற்பனங்களை விசாலமாக்குவோம்.
வாருங்கள்
எம் தேசத்து புலர்வுகளே,
„மா‘‘ வீரர் சந்நியில் எங்களின் ஆதங்கத்தை
அரங்கேற்ற அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
அகமாக விளக்கேற்ற.

விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.


மனிதம் கொன்றவன் மனிதம் பேசுகின்றான்.
மா“ பலி கொண்டவன் மாறு வேடம் பூணுகின்றான்.
நரபலியை எப்போதும் நாணாக கொண்டவன்,
நாட்டில் நாணயத்தை நாற்றிடப் போகின்றானாம்.

உலகம் போகும் ஊற்றைப் பார்த்தால்,எதுவும்
புலவுவதான பூடகமும் புரியவில்லை. ஏனோ?
நிலவுவதெல்லாம் நீதியின் நீட்சிபோல் கலவுகின்ற,
தலங்களெல்லாம் தாங்கியே போமோ? தமிழரின் துயரை,

தமிழனிற்கு துயரம் சிங்களவன் சூட்டியதில்லை,ஆம்
வரலாறு அதைத்தான் வலிமையாய் வகைக்குது,திரும்பி
சரிதம் தரிசிக்க சதிகள் புலவுகின்றது.இது இன்றும் தொடரும்
தொடர் வரலாறு பாரே பார்க்குது.எள்ளிச் சிரிக்குது.
தமிழன் கோடாரிக் காம்புதான் மாற்றுக் கணுவில்லா
காலக் கலமத்து.

ஒல்லாந்துகாரன்!
எந்தையர் மண்ணில் காலடி
வைத்த காலம் முதல் இன்று கரிகாலனின்
பொற்காலம் ஈறாக -----
தன் இனத்தை தானே அழிக்க முதுசம் சூட்டிய மூதேவிகாள்.
மதம் புனைந்தான்—மறைக்க ஈன இனம் புனைந்தான்.
சாதி, பேத, வர்க்கம் வரைந்தான்.கூடவே தமிழர்க்கு
நாக்க எலும்புத் துண்டினையும் அன்றே எறிந்தான்,
நில,புல ஆக்கிரமிப்பாளன்.

மான தன்மான சிந்தனையால்,
இன விடுதலையின் ஈர்ப்பால்,தன் சுயம் இழந்து
தன் மூச்சையே ஈழ விடுதலையின் பால் இறுமாந்து
காட்டியவர்களின் காலமிது.,
அவன் அந்த தார்மீகத் தலைவனின் அணியாக,
எத்துணை கட்டுமானங்களை காத்திரமாய் கட்டியெழுப்பி,
இவ்வளவு காத தூரமும் காவியமாய் சுமந்தானே,
எத்துணை ஈக,ஈர மாவீரங்களை இந்த மண்ணிற்காய்,
அதன் விடுதலைக்காய் ஈடு,இணையற்ற எங்கள்-
தலைவனின் ஏன்?
எங்களின் தேசிய இலட்சியத்திற்காய்---

இன்னமும் இந்த தேசிய மண்ணை நேசித்ததினால்
அத்துணை சொந்த,பந்தங்களை நாம் இன்றும்
இழக்க!
வழி வகுத்தவன் சிங்களனா?இல்லையே
இன்னமும்
தன்னையும் டமிழர் என தனக்குத்தானே தாம்பாளம்
தூக்கும் இந்த கோடாரிக் காம்புகள்,என்றால் தவறென்ன?
யார் சாற்ற முடிவுறும்?

இன்றும் முட்கம்பி வேலிக்குள்,
முகம் புதைக்கும் எம் மேனியரின் துயராற்ற,
எந்த பிதாமகன் பிறவிக் கடனாற்றுகின்றான்?
சுய நலத்திற்குள் சூடாற்றும் இவர்கள் சூரணர்களாம்.
இன்னமும் சிலதுகள் இன்றும் சிலம்பம் சுற்றுகின்றனர்.
சூடு சுரணையற்ற சிங்களரின் குதம் நக்கும் குரங்குகள்.
இந்த இலட்சணத்தில்
தேர்தலாம் அதற்கோர் கூட்டமாம், கொற்றமாம்.
சா“ வீடே இன்னமும் முடியவில்லை,விடியலில்லை.

இற்றைவரை தாய் மண்ணிற்காய் ஈகையான
எம் „மா“ வீரம் மீது தலை சாய்த்து அவர் மீதொரு
சாகித்தியம் தீட்டி எங்கள் தேசக் கடனாற்ற
தேர்ந்த புயலாய் மீண்டு(ம்) எழவோம்.
எமதான தேச ஈகையர் எமக்கான உந்து சக்தியாய்,
விழி நீட்டி வழி காட்ட,தேசத் துரோகிகளையும்,
எட்டப்பரான, ஒட்டப்பர்களையும் ஓர்மத்துடன்,
ஓணமான ஓர் ஓரம் கட்டி!

எங்கள் ஈகையர்களின்,
சந்நிதியில் தலை வணங்கி,
அவர் தம் தாகம் தீர்க்க,ஓயாமல் ஒழியாமல்,
ஒளிர்வோம்,அவர்தம் நினைவால் நிமிர்வெய்வோம்.
புலம் பெயர் எம் இனிய,
ஈழ இளைய தலைமுறையே!
தேசத்தை நேசிக்கும் எம் ஆத்மார்த்த இனிய உறவே!

தீப்பொறியாக உனக்குள்,
அனல் கக்கும் ஆளுமையை,அந்த ஆற்றலை
தேசத்தை நிர்மாணிக்கும் உன் உறுதியை
உன் ஆத்மார்த்த கீதார்த்தமாய்,
சுகமான சுமையாக சூரியத் தேவனின் சூத்திரத்திற்குள்,
சூசகமாய் சுரமூட்டு.
அகம்!

அந்த ஆளுமைக்காய்,அணையாமல் ஆறாக
ஆங்காரமாய் அனந்தமாய் எரியட்டும்.
விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.

செவ்வாய், 24 நவம்பர், 2009

துணைக்கு நீயும் சுமை தூக்க தூயவர் பாதை சேர்.


வலி தந்த வேதனையின் வாசலை துடைத்து,
பலி கொண்ட பாதகரின் பாதங்களை கடைந்து,
புலி கண்ட பாதையினை புனருத்தானம் புகுத்தி,
கிலி கொள்ள வைப்போமடா கீசக வதம் படிப்போமடா.

வலிமை என்பதை வாசகமாய் கொள்ளாமல்,
வார்த்தெடுக்க வேண்டுமே எம் வாசலதை மீட்க,
புலம் பெயர் மக்களெல்லாம் புது வேகமேற்றி,
வலம் வரவேண்டுமே வாசலது நிறைய.

முட் கம்பி வேலியடு தானாக திறவாது,எங்கள்
கட்டுமானம் கனதியாய் சுரவாமல்,
தொட்டுச் சொல்லும் வேளையில்லை,பகையை
சுட்டுக் கொல்ல கோலம் கோர்க்கும்.கொண்ட-
கோலமெல்லாம் கொலுவாய் மாற்ற.

விட்டுச் செல்லும் வேளையில்லை-விதியென
கட்டுக் கதை இட்டுச் செல்ல,சுற்றும் பகை சூழ,
எட்டாத பாதையெலாம் எம்மவர் எரித்தே வென்ற,
காலமழியா காவியமாக்கி வைத்த சுவடதை அழியவிட.

விதி சொல்லி விகன்றழ வீரியம் விரியாது,
எதிர்த்தால்,எழுச்சியுடன் போரிட்டால்,
உதிக்கும் உறுதி,இல்லையேல் அழிவெனினும்
மதிக்கும் மானுடம் மறு பிறப்பேந்தும் போராட்டம்.
விழிப்புணர்வு ஏற்ற வேண்டும் வீதியெலாம் அதுவே வேண்டும்.

விகன்றினி எழும்பா விட்டால் வீதி கூட-
விதியாய் ஏற்காது,
அகன்றிதை அகமே ஏற்று ஐயத்தை அகற்றி எழு.
பகன்றிடும் பாதை பரக்க பாரமிறக்கி பாதை கீறு.
தகன்றிடும் தர்க்கமெல்லாம் தாளாமையும் தானே விலக.

உனக்கான பாரத்தை நீயே தாங்கணும்-
ஊர்கூடி தேர் இழுக்க நீயும் உதவணும்.
தனக்கான பாதை இல்லை ஈழ தமிழர்க்கான பாதை இடு.
மனக் கணக்கம் பார்த்தாயானால் மரணமே மையல் பூணும்.
தனக்கென வாழா நெஞ்சம் தன் தாயவர் நிலம் மீட்க.

மாவீரர்க்கு எமதான மாவீர வணக்கம்.


மானசீக மார்க்கமாய்,
ஞாலமதில் ஞாற்றுகின்ற ஞாயம் கொண்டோம்.
சீலமவர் சிந்தையில் சீட்டி சுரந்த சீவியத்தை,
காலமதில் கனம் கொண்டு,
காத்திரமாய் காத்து நிற்போம்.

போராளிகள்.
இவர்கள் போர் ஆழிகள்.
வேரோடிய எங்கள் வேதனை களைய,
ஊராடி, உறவோடி, சீரடி சேர்ந்த சீர்காளர்காள்.
நீரோடி போகாமல் எங்கள் நியமங்களை நிர்ணயித்து,
நார்த்து நிற்கும் நாயகர்கள் ஈழத்திற்கான,
வேதாகமத்தை வேதித்த வேதியர்கள்.

உறைகின்ற உயிர்ப் பரப்பில்,
உயிர் இழைத்த இனியோர்கள்,இளையோர்கள்.
கறை படிந்து போகாமல் காலக் கடனாற்றிய காவியர்கள்.
ஆதலால் இவர்கள் ஈகம் இழைந்த இனியோர்கள்.
வேர்த்திரா வேதியர்கள் வேங்கைகள்.
பெரு வெற்றிகளின் நாயகர்கள்.

ஐயா!
உமை உரைக்க உரை கல்லும் உதிரும்.
உமை எழுத மனப் பரப்பு விரியும்.
ஒப்புவமையற்ற ஓங்காரம் ஒலிக்கும்.
ஒற்ற முடியாத ஓர்மங்கள் ஓங்கும்.
வற்றாத சீவிதங்களாய் உங்கள் வாகைகள்-
வரையும் வேற்று விகார மனங் கலைந்து,
வெட்கைகள் வெட்கும்.

காற்றிடை கலந்தோரே,
ஆற்றிடை அலைந்தோரே,
ஆழியின் ஆழத்தை அகத்திற்குள் புதைத்தோரே,
நதியின் சல,சலப்பாய் உங்கள் நர்த்தனங்கள்.
போதிப்பிற்கு அப்பாற்பட்ட „ஆ“ தித்தியாகங்கள்,
தானைத் தலைவனின் தார்மீகத் தாற்பாரியங்கள்.
உங்கள் கனவுகள் எங்கள் வசப்படும்—வான்
பரப்புக் கூட அன்று எங்கள் வாசல் வரும்.

தெய்வீகப் பிறவிகளென்றான் எம் தலைவன்.
ஆம்!
தேசப் பற்றாளன் தன் தேசத்திற்காய் தேகத்தையே,
தேர்ந்து தந்தவர்கள்,
ஈழத் தாயின் இனிய பூப் புதல்வர்கள்.
முகரும் தென்றலெல்லாம் முகிழ்ந்துள்ள முகையர்கள்.

நாமிருப்போம் என்றில்லை,
நாடிருக்கும் அந்த நாளிருக்கும்,என்ற
ஞாயம் ஞார்த்த ஞானியர்கள்.
நேர்த்த நேத்திரத்திற்காய்
ஈழ தோத்திரத்திற்காய்,வீரிந்த சூரிய புதல்வர்கள்.

வித்தகர்களே!
தீர்க்க தரிசனம் தீட்டிய திவ்வியர்களே!
தீக்கும் தியாகத்தின் திரவியம் தீட்டிய தீரர்களே!
தாங்கிகளே!
ஈழ தியாக தூமங்களே!
ஈழக் கனவுகள் எங்கள் காத்திரமாய்-
கனியும்வரை,
எங்கள் வயல்கள் எங்கள் எல்லையாக,
வரைபுகள் எங்கள் வாசல் வரும்வரை,
ஓயாது எங்கள் போராட்டம் ஓயாது.

உங்கள் தியாகத்தின்-சுவட்டில்
ஓர்மத்துடன் எங்கள்,
ஓசைகள் ஒலிக்கும்.அது ஈழ வாசல்
உங்கள் வாசலாய்,வலிமையாய்,
சிங்களத்து வெங்களம் விழலாக,
ஈழ பூமியாய் புவி வரையும் பூபாளமாய்.

சிந்திய குருதியின்,
குவியங்கள் அந்த அந்திமத்தை-
சூட்சுமமாய் சுவீகரித்து,
எந்தையர்களின் ஏணங்கள்,
தந்தையர்களின் தார்மீகங்களை,
சிந்தாமல் தரணி தரவு நுகர- வரும் ஈழம் மலரும்.
அதுவரை-
ஓயாத எங்கள்
தார்மீக தாரக மந்திரம் தரணியெலாம் ஒலிக்க.

திங்கள், 23 நவம்பர், 2009

அன்பாக நீ இருந்தால்
அருவியாக சுகம் இருக்கும்.

வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.


முரசேந்தி நின்றவன் ஈழ முகிலவன்,
பகலவனின் வாரிசாக வசம் தரித்து வகைந்தவன்,
உலக வலவில் உண்மைகளை உறுத்தவன்-,மிகையிலா
பலமதில் பாதை விரித்து பரந்தவன்,
செவ்வனச் செல்வன் எங்கள் சேந்தல்களில் இளையவன்,
இனியவன் இலங்குவதிலும், இழைவதிலும்,
ஈடில்லா ஈர்ப்பவன்,நூர்த்தவன் பாதைகளை
நுகை முகை புன்னகையுடன் பூத்தவன்
மிகையில்லா மிடுக்குகளை மிதமாகவே தரித்தவன்,
தமிழ்ச் செல்வனவன்,தார்மீகச் செல்வனவன்.

பிரிகேடியர்,
பிரிவதை தவிர மார்க்கம் மாற்றில்லையென
உரிமையுடன் உலக வலவில் உறுதியாய் உரைத்தவன்,
பரிவவன் பாதையெலாம் புவனம் பூபாளம்தான் புனைய
புன்னகையாலே புலவுகளை புதித்தவன்,
உதித்த திசையெல்லாம் தித்தித்தவன்,
மதித்தவன் மதியின் மரபில் மாண்பின் மனைப்பில்
கொதித்தவைகளை கோலம் கோர்த்தவன்.
ஆதலால்தான்!

எதிரியின் ஏவுகணைக்குள் எள்ளளவும்
தினையாமல் ஏற்றமாய் பிழைத்தவன்,
ஆரியனிற்கு அனலவன்,ஆர
அணைப்பவர்க்கு அனந்த களிப்பவன்,ஆக
இன்னமும் எதிரிக்கு கொள்ளிக் கண்ணாய்
கோலம் அளித்தவன்,

எனவேதான்!
எங்களவனை
எப்படியும் எரிக்க எதிரி முகாந்திரம் முச்சூடும் சூட்ட
தப்பாத தளத்தில்கூட தகமையாய் தப்பித்தவன்.
உப்பிட்ட உளத்தைக் கூட எங்கள் உறவுகள்தான்
உருவழிக்க என்ன மனம் காவி எதிரியில் சரணடைந்தானோ?
பாவி,பரதேசிகளின் பாங்கு எங்கோ,எப்படியோ அரணமைக்க
எங்கள் செல்வன் ஏகாந்த தேசம் நோக்கி அவன்
அறுவருடன் ஈழப் பரப்ழுக ஏகினான்.

அண்ணலே!
ஆரோக்கிய அகத்தவனே,இந்த
இகத்தில் ஈரடி இலக்க மூவடி சறுக்கும்,
முகத்தில் ஈரூடக பாய்ச்சலாய் ஈர்த்தவனே,
தகத்தில் அதன் தளத்தில் என்னே பரப்பளவேந்தினாய்,
பெரும் பாய்ச்சலின் பரமம் நீ-இன்று ஈராண்டு
இலக்கெய்ய ஈழத்தில் எத்தனையோ
இழவுகள் சுமந்து நாம்,ஆயினும் உங்களின்
உறுதியான உலைக்களத்தில் உந்தன்
நினைவு நீவி நாம் நிமர்வெய்வோம்.

தலைவனின்!
தார்மீகங்கள் தளராத பீறு நடை பிறளாமல்,
ஏந்த புலத்தில் புவியில் பூப்பெய்ய-நாம்
உன் சந்தங்களின் சாதிப்பில் சலியாமல்
சகமேற்றுவோம்,
நிச்சயம் சாதிப்போம்,
நிலப் பரப்பில் எங்கள் முகாந்திரம்
முத்தெய்யும்வரை.
அன்று உன் ஆசிகள் அனந்தம் பெறும்,
வனப்பெய்யும்,
வரம்புகள் எங்கள் வயலாக.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!


ஏமாற்றும் ஏற்றம் தோற்றம்--யாரை
ஏமாற்றவும் இந்த தேற்றம்,
ஊற்ற,ஊற,வீற்றும் வித்தகம் நாளை
உலகறிய எல்லாமே?ஏளனம் சொட்டும்.

காற்றுக்குள் கூடு கட்டும்
மார்க்கம்
எந்த மையத்தில் மனிதம் ஏற்கும்?
மீள் குடியேற்றமென்ற ஏமாற்றும்
கொற்றம் மகிந்தாவின் ராஜதந்திரம்.
தூற்றுகின்ற துர்க்கன் துகிலுரித்து,
தூர் துவைத்து துளை போட்ட துலாம்பரம்-ஏன்
இவ் வையகம் வாய் பொத்தி மெளனம்?

இளைஞர்கள் இளம் தலைமுறைகள்
இன்று காதகனின் கைகளில் கனதி இழந்து
சான்று யார் சார்த்தார்கள்,கேட்டார்கள்-இவர்
சா“ விளிம்பில் சாகா வரம் பெற்றதை-எந்த
சாத்வீகர் சாகரம் சாய்த்தார்?

ஏய்!
ஐரோப்பிய அறிவாளிகளே,
உன் வரிச் சலுகைக்குள் இந்த வைரிகளை
மடக்கும் மார்க்கம் அறியாயா?ஏன் எங்கள்
உற்றங்களின் சாவினிற்கான உற்பவம் உரக்கக் கேளாயா?
நீதிகளின் காவலர்களே!,
மனித உரிமைகளின் மையர்(ல்)களே!
வெறும் சல்லிக்காசு சதைப்பதற்காக எங்கள் இளவல்களை
ஈனச் சாவாக்கிய,இரக்கமற்ற இருளர்க்காக,

எங்கள் “சா“ மேட்டில்,
உங்கள் சகவாசங்கள்,
வியாபாரிகளே,
வெறும் கஞ்சிக்கும்,மருந்திற்குமா,
வன்னி மக்கள் வ(சு)யமிழந்து தவிக்கின்றார்கள்?
ஞாபகம் உண்டா-
ஹிட்லரின் விச மாடங்கள்?
இருந்தால்!
எங்களை இந்த ஊனத்திற்கு உள்வாங்கியவனை
ஐ.நா மன்றில்
நீதியின் மடியில் நித்திரை நீவ-நீவிர்
நித்திலம் அமைக்கலாமா?

எங்கள் „மா“ விதைகளின்
விரையழிப்பிற்கு என்ன மாதவமாற்றப் போகின்றாய்?
எங்கள் மாநிலம் விரிய இன்னமும்
எத்தனை விதைகளை
ஈகமளித்தும் எங்கள்
மான நிலம் சமைப்போம்,
மார்க்ங்களின் ஈரத்திற்கு ஈகமாய் என்ன
கோர்க்கப் போகின்றாய்?
தர்மம் தலை நிமிர,
தமிழீழம் தரணி தரமேற்றும்.

வியாழன், 22 அக்டோபர், 2009

சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.


திண்ணிய நெஞ்சினர்,
தினவெடுத்த தலைவனின்,
நுண்ணிய பார்வையின்,
நுனிவரை சென்றனர்.
எண்ணிய காரியம்-
ஏற்றியே முடித்தனர்.
எரி தழல் மீதிலோர்-
காவியம் தீட்டினர்.

எதிரியின் ஏற்றத்தை-
உதிரியாய் உதிர்த்தவர்.
குருதியின் குதத்திலே-
கூரிய களத்திலே-
பருதியாய் படித்தவர்.பாரினிலே,
ஈழப் பாரினிலே விடி வெள்ளியாகினர்,
புரவியின் பாய்ச்சலாய்-
பரவியே பனித்தனர்.
இரவின் மடியிலே-
விடிவினை விதைத்தனர்.

வார்த்தைகளின் வகிடுக்கப்பால்-
வைரமாய் வகைத்தவர்,இவர்,
ஈகையின் தொழுவம்,
ஈழப் பாதையின் விட்டம்,
விஞ்சமுடியாத வீரியத்தின் தொகுப்பவர்.

ஆற்றலே,
உறுதியின் உரமே,
மாற்றங்கள் இன்று ஈழப்பரப்பில்,எனினும்
உங்கள் ஈகங்களின் தாகங்கள் தரணியெல்லாம்
தாக்கமாக,
நாளை இந்த தோற்றம் மாறும்,
எங்கள் ஆதவன் உயர்த்திய ஈழக் கொடி
தங்களின் தியாகத்தின் தீப்பிழம்பில்
உலகப் பரப்பில் உத்வேகமாக உயரப் பறக்கும்,

ஞால கதிரதில் அன்று இந்த ஞானியரின்
ஞான விழா,
ஞாயிறாகும்,ஞாயங்கள்
ஞானம் தவிர்த்து நீர்ப்படையாது,

உங்கள் நிறங்களின் உரங்கள் தாகங்களை
தாற் பாரியமாக்கும்.தர்மம் தலை தவழ்வதாக
பவனி என்றுமே பார் மேயாது.
ஈழம் மலர்ந்த பின்பும்-உங்கள்
ஈகங்கள் செழித்தே ஓங்கும்.
கல்லறை மேனியரே உங்கள் களிப்பில்
சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.

என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?


உள்ளம் உறையும்?
உறங்கா உண்மைகள் உயிர் கரிக்க,
உபரிகளாகும் உயிர்களின்
உன்னதம் உறக்குமா?
சின்னங்களேந்தி சிதைக்கும் சின்னத்
தனங்கள்-எங்கள்
வண்ணக் கனவுகளின் வரைபுகளை வறுத்தெடுத்து,
ஈனத்தனம் ஈற்றும் இந்த இழி பிறவிகளை,
என்ன தனம் கொண்டு கறுத்தலாம்,

இன்னமும் எத்தனை உறங்கா!
உண்மைகள் உறவரிக்கும்,ஊன
சிங்களனின் இந்த சித்தத்தை,எந்த
மத்தையில் போட்டு மகுடமெரிக்க,
வித்தகம் விதற்றுவோம்?கண்கள்
ஒத்தடம் ஒதுக்கும் ஓர் விழி கரையும்,
நீர் வரைந்த இந்த நிலவுகளை,எந்த
கானத்தில் வைத்து கழுத்தறுத்தானோ?

புத்தனிற்கு அபிசேகம் எங்கள்
புண்ணியரின் குருதியிலென்றால்
புத்தனும் கூட சித்தம் மகிழ்வானா?
தித்திக்க,திகட்டாமல் எங்கள் சதைப்பிண்டங்களில்
என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
விகாரையின் விகாரங்களில் விக்கிப்பதெல்லாம்
முகாரி விக்கும் வினயமாற்றும் தமிழ் குருதியன்றோ!

என்றோ ஒர் நாள் விடையிறுக்கும் என்று
மன்றாடி எங்கள் மானம் மறைக்கும்
மார்க்கம் வேண்டாம்,
நின்றறுப்பான் நித்திலனென்று நிழல் ஒதுக்கும்
மன்றத்தை விலத்தி,
கொன்றறுக்க கோர்க்கும் கோகிலத்தை கோர்ப்போம்,

அன்றேல்,
நாளை இது உன் வாசல் வந்து
வசந்தம் வரைக்கும்,
உன் வாசத்தை
சீழாக்கி, சூழாக்கும் சுரம்தான் சுரக்கும்,
உறவே!
உறங்கும் இந்த உபாதைகளை ஊர் பரப்பு,
கிறங்காத உந்தன் உறுப்பமை,
விரைவில் விடியல்!
இல்லையெனில்?
விதையெல்லாம் நுரை தள்ளும்
விரையின்றி விதையில்லை விகல்பகற்றி விரிவடை.

வியாழன், 15 அக்டோபர், 2009

தினம் மென்னி கிள்ளும் மேனியரை!


உலகெங்கும் ஓலங்களாய்-எங்கள்
வலம். இது என்ன சீலம் என
கலம் நோகும்?உள்ளம்
உவகையை மறந்து பள்ளத்தில் பல நாட்களாய்-
எந்த,
பாசாங்கும் அற்று விசும்பும்
எண்ணற்ற உறவுகளின் தாகத் தவிப்பில்
தரணியில் தமிழர்,

உலகப் பரப்பை நிரப்பவா நாம்?
திலகம் இட்டுள்ளோம்,
நிலவாதா?
வசந்தமென நீட்சிக்கும்
நயங்கள் என்று நார் கோர்க்கும்?
கலகமென்று முன் காதை விட்டார்,
இன்று!
நிலக் கிளிகளாகக் கூட கூடின்றி
புலம் பெயரும் பூப்புக்களுள் எங்கள்
கோமேதகங்கள்,

கனவாகாத
எங்கள் வயல் மீட்டிருந்தால்???
நிலம் நீட்டி இருந்தால்!! இந்த நிலை
ஈய்ந்திருக்குமா?
ஈனம் இழைந்திருக்குமா?
இல்லை,இந் நிலை
இலங்கித்தான் இருக்குமா?

புலமே!
நீ
மெல்லுவது போல் உள்ளத்தை கரைசலில் தோய்த்து,
எங்கள் கனதியை குறைக்காதே.
இல்லாத திருநாளை உன் கலசத்தில் ஏந்தாதே.
மெல்லக்கூட வழியின்றி எம் இனம்
தினம் மென்னி கிள்ளும் மேனியரை
அவர் ஊனம் உலகாக்கி,
எங்கள் தள மைந்தர்களை
அவர் சுயமூட்ட,
தரமாக்க உற்ற தகமைகளை கரம் பற்று.

நிலமே,
எங்கள் வளமே,
நலமாக்க நல்ல ஞாயம் வகி,

புலமே!
சூலம் ஏந்தும் சூத்திரத்தை சூடு நீக்கி
ஞாலமேந்த இன நமைச்சலை நா`` விரி,
கீலங்கள் தான் விலக்கி
சீலங்கள் தான் சுமக்கவே!பகை
முகாம் சூடு விலக,
சீரியமான சிந்தையை கரம் கொள்-ஆரியன்
காரியமழித்து எங்கள் காலம் வெல்ல.
ஊர் வலம் வா.
தமிழர் பேரவையின் தாற்பாரியத்தில்
தகமை வகி,
இளையோரின் இலங்கலை இயைந்து கை கொடு
இலங்கட்டும் உன் ஈடிணையற்ற இருப்பு.

திங்கள், 12 அக்டோபர், 2009

வல்ல பகையால் எங்கள் வாசல்!

இலங்கிடுமா இவர்களின் இயலாமைகள்,
இந்திய காங்கிரசின் இலக்குகள்
இனியும் மறக்குமா?
ஈழத் தமிழனவன்னிற்கு
இன்னல்கள் இலக்கிய ஈனர்கள் இன்று
எந்த முகம் ஊக்கி எங்களவர் அகதி நிலை
ஆய வந்தார்.இல்லை வேய வந்தார்?

இன்னல்கள் சூழ முன்னர்
என்னவெல்லாமோ நாம் இரந்து நின்றோம்,
சொல்ல நாக்கூசும்,
நினைக்க மனம் கூசும்.

நாம்!
நெக்குருகி புழுவிலும் கேவலமாய்,
உக்கி உருகி செத்தழிந்த போதெல்லாம்,
செவிடராய்,
ஊமையாய்,
குருடராய்
குனுகி இருந்த இந்த குன்(ற்)றமெல்லாம்,,,

இன்று
எந்த மென்னியை அறுக்க
எங்கள் மேனியை நனைக்க வந்தார்?
எந்த
கோலம் கொண்டு எங்கள் கோகுலம் ஏகினர்?
என்னதான் இவர் எத்தனை வேடம் போட்டாலும்
இவர் வந்ததால் எந்த ஏணமும் இழையாது,
இது
முந்தையர் ஆண்டது போல் நாம்
மீண்டும் எம் மண்ணை
ஆளாமல் எந்த விந்தையும் விழையாது,
சிந்தை இவர் நிச்சயமாய் இந்த
வீச்சள்ள எண்ணார்,

மகிந்தாவின் குதம் தடவி மக்கள்
சுகித்த பெரு வாழ்வெய்தார் என்றே
நாளை அழகான விதை தூவுவார்,

காங்கிரசின் கைப்புண்கள்தான் இன்று எம்
வீரர் கால் பட்ட வீரியமான விளை நிலத்தில்!
எந்த காரியமும் இவன் காத்திரமாய் ஏந்தாமல்
பந்தம் அவர் வாழ்வில் பவ்வியம் காத்திடவே,
வெந்த எம் புண்களில் வேலேந்தி கீறும்
சந்தனத்தையே இவன் சாதகமாக சாத்துவார்,

இருந்து பார் இனமே,
இராணுவத்தின் முற்றுகைக்குள் எங்கள் மக்கள்
எந்த மூலிகையை இவர் முன் ஏற்றுவார்,
இந்த அரசியல் நாகரீகம் தெரியாதவரா?
நாம் என்ன இன்னமும் பாமர மக்களா?
சுயாதீனமாக எந்த சுந்தரத்தை சுகிக்க அவன்
இங்கு வந்தான்?

டீ,ஆர் பாலு!
கோடரிக்காம்பின் கொற்றம் இவன்,
இந்திய அரசியலின் விந்தையை அறிவர்,
ஈழ மக்கள் மட்டுமா,இகத்தில்
இளையவரும்,எம் மக்களும்,
இது புரியாத பரி பாசையா?
கருணா நிதிக்க ஒரு வெற்றுத்தாள் கொடு,
இனி புதிதாக ஒரு பா`` பாட,

சேவகரே!
கருண கரத்தின் பாதகரே,
அந்த சேந்தலிற்கு ஒரு
மடல் கொண்டு வாரும் தன்
உடன் பிறப்பிற்கு ஒரு ``மா`` காவியம் சொருக
இவரால் ஈழத் தமிழினம் புளகாங்கிதம் பூண்டதாக
ஒரு உண்மையான சேதியை உறவுகளுடன்
பகிர்ந்து கொள்ள.

மகிந்தாவின் மகிமையை இவர் தேசம்
மொள்ள உடன் ஒரு வெள்ளைத்தாள்
சூரிய உதயத்திற்கு முன் இவன் முன் தாள்
தாள் பணி.
தாடையைத் தடவி நீ என்ன எழுத
திண்ணமாக எண்ணம் கொள்வாய்,
நாளைய முரசொலி வாசி
அப்புறம் சுவாசி.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!

எள்ளி நகையாடுது!
எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்,-தம்மையும்
தமிழரென்றே தரம் வேறு தார்மீகமாம்-எது
ஈழ விடைதலையின் பால் ஏகம் கொள்ளும்?-எதிரி
தன்னை ஏந்தும் இந்த வக்கற்ற கூட்டங்கள்-எந்த
வைடூரியத்தை எங்கள் மனவிருளகற்ற
மா`` விளக்கேற்ற போகின்றார்கள்?

ஆட்சியில் எந்த ஆர்ப்புக்களும் எல்லாள
காட்சிகளை கானம் ஏற்றாது.
மாட்சிகள் எங்கள் பரப்பில் என்றும் ஏந்தும்,
சாட்சிகள் எல்லாம் இன்று சரணாகதியாய் முகாம்களில்
வாயடைத்து,வயிறடைத்து,மூச்சடைத்து
எங்கள் முத்தாரங்கள்,
எந்த மூலவன் இவர்
கையறு நிலையை காத்திரமாய் கானம்
ஏற்றுவார்?

ஒற்றுமை அகன்ற எம் உறவுகளே!
ஒற்றும் இந்த ஓனம் ஒகர-நீ
ஏற்றுவாயா? தமிழ் ஒற்றுமையின் சாகரம்,
இல்லை உன்னால் அது என்றுமே இனி-இந்த
தளம் தகிக்காது.ஏனெனில்
வல்லாளன் பிரபாவின் வனங்கள் இந்த
பார்ப்பனர்களின் பாதையால் பரப்பிழந்து-
மீட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளான பின்கூட-நீ
சாட்சிகளகற்றும் சாரளத்தில் தான் இன்றும்
எம் எதிரியின் கைக்கூலியாய் அவன்
கானமிசைக்கின்றாய்-போலிக்கு பிறந்த
போக்கற்றவர்களாய் அரிதாரம் மிக அழகாக,

மீண்டும் உங்கள் அகத்திற்கு ஆழமாய்
அறைந்து ஆரமிடுவது,
ஆயுத போராட்டமே மீண்டும் எங்கள்
களம் கனதியாக வேண்டும்,
தோல்வி என்பது எங்களின் படிக்கட்டுக்களாய்
தோழமை கொள்ள வேண்டும்,
அழுதலும், தொழுதலும் எந்த
ஆளுமைகளை அரங்கேற்றாது,
விழ,விழ எழுதலே எங்கள்
வலுவான வையகம்-இதை
மெனமையாய்,மேன்மையாய்
மீள மீண்டும் அகக் கொள்
ஆளுமைகள் மையம் தரிக்கும்,
ஆற்றல்களை இனி ஆதரவாய்
தேற்றி தோற்றம் கொள்,எங்கள்
பகலவனின் பாதம் எங்கள் பரப்பேந்தும்,
புவியே!

பிரபாவின் பிரம்மங்கள் களம் மீட்கும்
காலத்தை நாம்தான்
கலயமேந்த வேண்டும்-இனி
இழத்தல்கள் அற்ற இருப்புக்கள் வலயம்
இருத்தும் வன்மங்கள் வாகையாய்
தரமேற்றும் அந்த தாளங்கள்
உரமேற்ற உவகையாய்-உன்
கரமேந்த கருவிகள் களம் மொள்வோம்,

ஈழத் தமிழம் தகமேந்த
வேற்று வழி நிச்சயமாய்-அந்த
நரகத்தில் இல்லை,ஆற்றாமையை
அகமகற்று,கால வெள்ளம் இந்த
கலயத்தை மிகவும் நேத்திரமாய்
உந்தன் சூத்திரமாக்கும்,
நிச்சயமாய் இதுதான் நீதி பகற்றும்,
இது காலத்தின் கட்டளை,

ஸ்ரீ லங்காவில் என்றும்
சீதளக் காற்று வீசாது,எங்கள் களமெரிந்த
அந்த கலசத்திற்கு காத்திரமான
ஒரு முடிவேந்தாது எந்த ஒரு முச்சூடும்
முகிழ்வுகள் அதன் முற்றம் முகராது,
இது கால வெள்ளத்தின் கனதியான
கட்டளை,
இகமே!
இருந்து பார் இது ஈடேற்றாமல்
வையகத்தில் எமக்கு எந்த மூச்சுக்
காற்றும் முத்தாரம் சூட்டாது.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!

நமைச்சலின் நச்சரிப்புக்கள்
அமைக்குமா ஆனந்தம்?
குமைக்கும் குதங்கள் குங்கிலியம்,
கூட்டுமா?
எமை எமைத்தவன் அமைத்ததே
சமையலாகும்.
சாயல் இனி
எரிமலையாய் எழுந்தல்
உளம் சரிக்கும் சிங்களம்.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள்- இனி
எந்த சாலையையும் சாராது.
உரிமங்களின் உரியாசனம் உலவாததால்,
பரிமாணம் பாற்றும் பகலவ பாதைகள்,
கரிசல் காட்டு கட்டமைக்கும் கனதிகள்,
விரிசலகற்றும்.
எங்கள் விபரம் விரிக்கும்.
புரிதல் இனி சகாயம் சதைக்கும்.
எங்கள் விரிதலின் வினைகளை வினயமாற்றும்.
பரிமாணங்கள் நிச்சயம் தரிசனமாக்கும்.

எரிந்தவைகள்!
எழும் ஏகம் கரிக்கும்.
சிரித்தவைகள் இனி சிந்திக்கும் முன்
இவைகளெல்லாம் புரிதலின் புன்னகையில்,
மரித்த மார்க்கம் சில் ஊடகத்தில்,
மீண்டும் பணம் பண்ண பண்ணசைக்கும்,
இந்த கூட்டங்கள் தங்கள் கூத கைகளை
கூச்சமின்றி மாற்றியோர் மாரணைத்து
மாமன்றம் மாற்றுவார்,
இவை அன்று போலவே என்றும்,

இன்றும்!
இவைகளில் மாற்றம் என்ற மாற்றம்,
என்றும் இணைந்திருக்காது.
மனிதாபிமானங்களே என்றும்
மாற்றங்களுடன்
கற்றகமாக வீரியம் சூட்டும்.

தோற்றமே இல்லாத மாக்களிடம் எங்கே
தேற்றமான தேர்விருக்கும்?
இவர்கள்
எங்கள் எரிதணலிலேயே தங்கள்
அடுப்புக்களை ஆனந்தமாக ஆலிங்கத்தவர்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!

நிலவு சுடும் நெருப்பாக,
என் உணர்வகள் அதன் பாளங்களாக,
சீதளக் காற்று சில்லென்று வீச,இந்த
வேதனைக் காச்சல் கொல்லென்று,
மனம் காய்ச்சும்,

செய்திகள்!
சிந்தை வெள்ளத்தை தடம் புரட்ட,
விழ,விழ எழுந்த வீரியங்களை,
அப்படியே பாடையேற்றவே,
காதர்களுடன்,பாதகர்களும்,

விழுந்தவனை மாடு ஏறி மிதிக்குமா?
அழுந்தவனை ஆரியன் அப்படித்தான்,தன்
கொழுந்துகளால் கொல்கின்றான்,ஆக,
ஐந்தறிவு சீவனுக்குள்ள ஆளுமைகள்.
ஆற்றிவு சூடியதாக ஆர்க்கும்,அந்த
அங்கத நாட்டவனிற்கில்லை.

இது!
இன்று,நேற்று நோற்ற பாடம் இல்லை.
ஆனால்,
இன்னமும் இந்த ஈனத் தமிழனிற்கு ஏன்
புரியவில்லை?
அன்றே,
அல்லது,
பார்த்திபனின் பாதக் கமலங்கள்,
பாடை விரித்த போதாவது,
பாதிப் பேரிற்கு புரிந்த இந்த
மார்க்கம் ஏனோ?
இல்லையில்லை,
சிலரிற்கு புரியாமல் இல்லை,
எதுவும்
புரி விக்கவம் போவதுமில்லை.

தன் நயங்களுடன்,தன்னலங்களை
சூடினால்,அது
பொது நலமாகி விடுமா?
அப்படித்தான் சில தலைகள்
வலைகள் யாத்தன,
இன்னமும்,
அதே குட்டையில் யாக்க முனைகின்றன.

ஓடும் ஓட்டத்திற்கு தடை எப்படியோ,
கடை விரிக்கத்தான் கோகின்றது.
உராய்வுகள் என்று அதை நியூட்டன்
விதிகளாக விபரித்தது,
இயற்கையின்
இயங்கலது,
இயற்கைக்கே இந்த மூலம் விதி விலக்கல்ல,
ஆயின்
செயற்கையாய் இலங்கும்
இந்த செம்மறி கூட்டத்திற்கு?

பெளதீக பாடத்தில் மட்டுமல்ல-எங்கள்
பெளதீக மாடத்திலும் தான்,
சில இழப்புக்கள்தான்,
இந்த
உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக
ஆக்கமான பல இழப்புகளும் பங்கெடுத்தன,
இல்லையேல்
உருளும் பொருள் இடைஞ்சலின்றி
என்றுமே
ஓடுதளத்தில்

எந்த
மையமும் இல்லாமல்,
ஆரை என்ற குப்பில்லாத,
எந்த விட்டமும் இல்லா வீதியின்,
ஆடுகளம் இல்லாமல் இயங்கிக் கொண்டே
இகம் முழுவதும்.

நடை முறைக்கு
எதுவும் சாத்தியமற்று
சாலை விரிக்காது.

வலைப்பதிவு காப்பகம்