செவ்வாய், 24 நவம்பர், 2009

மாவீரர்க்கு எமதான மாவீர வணக்கம்.


மானசீக மார்க்கமாய்,
ஞாலமதில் ஞாற்றுகின்ற ஞாயம் கொண்டோம்.
சீலமவர் சிந்தையில் சீட்டி சுரந்த சீவியத்தை,
காலமதில் கனம் கொண்டு,
காத்திரமாய் காத்து நிற்போம்.

போராளிகள்.
இவர்கள் போர் ஆழிகள்.
வேரோடிய எங்கள் வேதனை களைய,
ஊராடி, உறவோடி, சீரடி சேர்ந்த சீர்காளர்காள்.
நீரோடி போகாமல் எங்கள் நியமங்களை நிர்ணயித்து,
நார்த்து நிற்கும் நாயகர்கள் ஈழத்திற்கான,
வேதாகமத்தை வேதித்த வேதியர்கள்.

உறைகின்ற உயிர்ப் பரப்பில்,
உயிர் இழைத்த இனியோர்கள்,இளையோர்கள்.
கறை படிந்து போகாமல் காலக் கடனாற்றிய காவியர்கள்.
ஆதலால் இவர்கள் ஈகம் இழைந்த இனியோர்கள்.
வேர்த்திரா வேதியர்கள் வேங்கைகள்.
பெரு வெற்றிகளின் நாயகர்கள்.

ஐயா!
உமை உரைக்க உரை கல்லும் உதிரும்.
உமை எழுத மனப் பரப்பு விரியும்.
ஒப்புவமையற்ற ஓங்காரம் ஒலிக்கும்.
ஒற்ற முடியாத ஓர்மங்கள் ஓங்கும்.
வற்றாத சீவிதங்களாய் உங்கள் வாகைகள்-
வரையும் வேற்று விகார மனங் கலைந்து,
வெட்கைகள் வெட்கும்.

காற்றிடை கலந்தோரே,
ஆற்றிடை அலைந்தோரே,
ஆழியின் ஆழத்தை அகத்திற்குள் புதைத்தோரே,
நதியின் சல,சலப்பாய் உங்கள் நர்த்தனங்கள்.
போதிப்பிற்கு அப்பாற்பட்ட „ஆ“ தித்தியாகங்கள்,
தானைத் தலைவனின் தார்மீகத் தாற்பாரியங்கள்.
உங்கள் கனவுகள் எங்கள் வசப்படும்—வான்
பரப்புக் கூட அன்று எங்கள் வாசல் வரும்.

தெய்வீகப் பிறவிகளென்றான் எம் தலைவன்.
ஆம்!
தேசப் பற்றாளன் தன் தேசத்திற்காய் தேகத்தையே,
தேர்ந்து தந்தவர்கள்,
ஈழத் தாயின் இனிய பூப் புதல்வர்கள்.
முகரும் தென்றலெல்லாம் முகிழ்ந்துள்ள முகையர்கள்.

நாமிருப்போம் என்றில்லை,
நாடிருக்கும் அந்த நாளிருக்கும்,என்ற
ஞாயம் ஞார்த்த ஞானியர்கள்.
நேர்த்த நேத்திரத்திற்காய்
ஈழ தோத்திரத்திற்காய்,வீரிந்த சூரிய புதல்வர்கள்.

வித்தகர்களே!
தீர்க்க தரிசனம் தீட்டிய திவ்வியர்களே!
தீக்கும் தியாகத்தின் திரவியம் தீட்டிய தீரர்களே!
தாங்கிகளே!
ஈழ தியாக தூமங்களே!
ஈழக் கனவுகள் எங்கள் காத்திரமாய்-
கனியும்வரை,
எங்கள் வயல்கள் எங்கள் எல்லையாக,
வரைபுகள் எங்கள் வாசல் வரும்வரை,
ஓயாது எங்கள் போராட்டம் ஓயாது.

உங்கள் தியாகத்தின்-சுவட்டில்
ஓர்மத்துடன் எங்கள்,
ஓசைகள் ஒலிக்கும்.அது ஈழ வாசல்
உங்கள் வாசலாய்,வலிமையாய்,
சிங்களத்து வெங்களம் விழலாக,
ஈழ பூமியாய் புவி வரையும் பூபாளமாய்.

சிந்திய குருதியின்,
குவியங்கள் அந்த அந்திமத்தை-
சூட்சுமமாய் சுவீகரித்து,
எந்தையர்களின் ஏணங்கள்,
தந்தையர்களின் தார்மீகங்களை,
சிந்தாமல் தரணி தரவு நுகர- வரும் ஈழம் மலரும்.
அதுவரை-
ஓயாத எங்கள்
தார்மீக தாரக மந்திரம் தரணியெலாம் ஒலிக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்