
அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
என்ன கடனாற்ற போகின்றோம்?அவர்
தூய உள்ளம் புளகாங்கிம் புலவ என்ன,
கருமமாற்ற பாத்திரமேந்துவோம்?
ஆத்ம சோதிகளின் மூல தானத்தில் என்ன,
முதுசம் முகிழ்விக்க முன் நிற்கப் போகின்றோம்?
அவர் முன்றலில் முகம் புதைத்து எம்
ஆற்றலை ஒன்றாக்கும் வரம்கேட்போம்.
அவர் தம் தாகம் தீர்க்க வலு கேட்போம் –அந்த
உறுதியின் உறைவிடத்தில் முகனமர்ந்து எம்
ஈழ தாகம் இழைக்கும் சத்தியம் சாற்றுவோம்,
சோர்ந்து போகா வல்லமை யாப்போம்.
எம்!
இனிய தேசத்து தேமாங்கின் முத்துக்களின்,
முகாந்திரம் மீட்கும் பணியை இன்னமும்,
இன்னமும் ஆக்ரோசமாய் முன்னெடுப்போமென,
இங்கிதமான சங்கீதத்தின் சாத்தியம் சாற்போம்.
வாருங்கள்!
எம் இனத்தின் விடுதலை விரும்பிகளே.
அந்த புண்ணியர்களின் பூர்வாங்க சந்நிதியில்,
ஆத்மார்த்தமாய் ஆழ புதைந்து,
அவர் யாகங்களை,
ஆழமாய் தொழுது,
அவர் மன சாந்தி கொள்ள,
பாதி வழி பயணத்தை நாம்
சீராய் முன்னெடுப்போமென
எம்!
சத்திய வேள்வியின் சாரங்களை,
சாத்தியமாய் வெல்வோமென,
நித்தியமான உங்கள் ஈழக் கனவை
நிச்சயம் வெல்வோமென ---அந்த
உத்தமர் மூலத்தில் முகங் கொள்வோம்.
ஈழக் கனவுடன்
ஈகையான உம் உறவுகளினதும்
வித்தகமான விதை குழி மீதொரு
சாசனம் எழுதுவோம்,அதுவரை
இந்த!
சாகித்தியமான சாகரங்கள் சகக் கொள்ளும்.
விதி வெல்லும் விற்பனங்களை விசாலமாக்குவோம்.
வாருங்கள்
எம் தேசத்து புலர்வுகளே,
„மா‘‘ வீரர் சந்நியில் எங்களின் ஆதங்கத்தை
அரங்கேற்ற அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
அகமாக விளக்கேற்ற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக