சனி, 28 நவம்பர், 2009

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.


அருகிருந்த துணையின்றி
அழுவதில் சுகம் வருமா?
மனம் விட்டு அழுவதில்
மானசீக சுகம் உண்டு. நெஞ்ச பாரமதை,
இறக்கிவிட பஞ்சாகும் நிறைவுண்டு.

செயலது எம்மாலே நாமே இயக்கவேண்டும்.
எமக்காக நாமே எம்மையும் இலக்கவேண்டும்,
இழப்புகள் இலங்குவதும்,இயற்கையாய் நடப்பதுண்டு,
ஈடாட்டம் கொள்வதுவும் இயல்பாய் இலங்குவதுண்டு:

ஒன்றனதன் இழப்பிலே ஒன்று மலர்வதுண்டு.
நின்றனதன் நிலைப்பதனை நித்திலத்தில் நீயும் உணர்.
கொன்றதன் கோலத்தை கோபுரமாய் கோர்த்துவிடு.
அன்றனதன் காரியத்தை அன்றன்றே ஆற்றிவிடு.
ஆனது ஆகட்டும் ஆர்வமாய் அகன்றுவிடு.

சிந்தனையின் சூட்சுமத்தை சீராக நீவி விடு.
நிந்தனை செய்பவரை நிட்சயமாய் விலக்கிவிடு.
சொந்தமென்று சொக்க வைக்க சோபனமாய் உறவு வரும்.
பந்தமென்று பதவிசாக பாங்குடனும் உலவி வரும்.
உந்தனது உற்பவத்தை உருவவும் கோலமிடும்.
உற்சாகம் ஊட்டுவதில் உறவறுக்க உலவிடும்.ஆகவே
அற்பர்களே இப்படி அடுக்கடுக்காய் அனலிடுவார்-உந்தன்
அற்புதமான ஆற்றலினால் அத்தனையும் தவிர்த்து விடு.

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.
சுற்றம் சூழத்தாரை எந்த சூழலிலும் சுரண்டாதே.
குற்றம் குறை கூறாமல் குன்றாத உதவி செய்.
மாற்றம் எந்த வேளையிலும் தோற்றமின்றி தோன்றி விடும்.
மாநிலத்தை புரிந்து விட்டால் மார்க்கமதும் தேற்றி விடும்.

சுகமான வாழ்வுனக்கு சூத்திரமாய் எண்ணாதே.
அகமான வாழ்வில்லை அடிக்கடி மறக்காதே.
முட் கம்பி வேலிக்குள்ளே உன் முதுசங்கள் அகதியாய்
முடிவுறாத வேதனையில் முடிச்சுள்ளான் எதிரியவன்
முடிவெடுக்க நீயும் முகாந்திரமாற்ற வேண்டும்.முடிந்தவரை
அவர்கட்கு முனகாமல் உதவி செய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்