ஞாயிறு, 6 டிசம்பர், 2009

இயற்பது இயல்பாய் அது இலங்கும்.


சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்,அங்கு
உதிர்ந்தவைகளும் ஓர் நாள் உயரும்,இது
ஓர்மங்களில் ஒளிர்பவை,எனவே
தர்மங்களின் சாட்சியாய் தடயமாய்
தரை விரியும்.

நிமிர்வுகள் உடனே நிர்ணயிப்பதில்லை எதையும்
அவை அவைகளின் அலுப்புச் சலிப்பிலேதான் உயிர்த்தெழும்
இது காலச் சக்கரத்தில் காத்திரமான காட்சிகள்,காடுகள்தான்
இன்று நகரம்,அது இந்த நிலை பூக்க இழந்தவைகள் எண்ணிலடங்கா,

எத்தனை உயிர்,உடமைகளில் எரிந்தவைகள் ஏராளம்,
அத்தனை இழப்புக்களையும் ஈய்ந்தவர்களையும்
இலக்கற்று,இழைத்தவர்களையும்,ஈனத்தனங்களால்
இயக்க மறந்தவரையும் இலக்கற்று இந்த யுகம்?????

இன்று இமயமாய் சனநாயகம் பேசுகின்றது.
பேடித்தனமான பேகம் இல்லை போகம்
பலவற்றின் பாமரத்தனமான,அல்லது ஈனத்தனமான
மனிதாபிமானம் மரத்த போக்கில் எல்லாமே,
ஒன்று மட்டும் நெடுதான உண்மை
நாம் நடமாடும் உலாத் திசையெல்லாம்
இரத்தமும்,சதையுமாக
அழுகையும்,ஓலமுமாக,
எதிர் பரப்பெல்லாம் பரத்து,
விழுதெறியா,விழுதறியா
விகல்பாய்,விதை சிதறி.

நெஞ்சம் நெகிழ்வேத்த,ஏந்த
இந்த வையப் பரப்பு இராகு காலம் பார்ப்பதில்லை,
அதன் இயங்கு தளம் அதன் பலத்தில் இல்லை.
பலமான பார்ப்பனர்களிடம் இந்த வையத்தின் மையங்கள்.

இங்கு பலமான பாத்திரர்களே பாதை விரிப்பார்,அஃது
அற்றவர்களெல்லாம் அற(ர)வாணிகளே.
கனிம வளங்களெல்லாம்,கற்றவன் பாதையில்
காசு பணத்துடன் பத்திரமாய் பற்றேந்தும்.

இனமான உணர்வெல்லாம் இந்த வையத்தில்
வளமேற்றாது,
கனதியான உணர்வேந்த அதை பயங்கரவாதமாய்
இப் பரப்பு பரப்பெழுதும்.
ஈடாடிப் போனாலும்,இந்த இகம் இலங்க மனமெழுதாது.
வாழும் பரப்பிழந்து நாம் ஆயுள் பூராய்
அக நாட்டிலும்,புல வாழ்விலும் பரி பூரணமாய்
நாம் புலமேவிலும் புதிய அகதிகளே.

எனினும்
இப்போதும் நாம் ஒன்றாய் இயங்க மறுத்தால்
மாற்றுக் கருத்தென்று வடம் இழுக்க வகை இழந்தால்
போற்றும காலம் பொலிவிழக்கும்,
தோற்றம் இனி தோரணை இழந்து
மீண்டும்,மீண்டும்
தோணி ஏறவே சோரம் சேரும்.
இணைந்திங்கு இயற்ற மறுத்தால்.
வேண்டாம் வேதமெழுத வேகமாய் வா.
சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்.
இலங்கவா --இழக்கவா?
இருதயம் இதந்து இயங்க வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்