
சிரிப்பெழுதும் நேரம் எம்
சிந்தை கொள்ளுமா?இந்த
விரிப்பெழுத எங்கள் களம்
வியப்பேத்துமா?
ஆகும் என்பதாக எந்தன் ஆவி அள்ளும்
அனந்தம் வெறும் ஆசைதானா?இல்லை
ஆக்கினாரே என்று இணையம் அரற்றும்
ஆக்கம் மெய்தானா?
குழப்பம் குடி புகும் குதர்க்கம்
குலம் சூடுமா?இது என்ன மாயை என்றே மனம் இருள் சூடுமா?
ஏதா ஒன்று ஒளி கூட்டும் என்ற உத்தி உயருதே.காலம்
கருவூட்ட காத்திரு என்றே புத்தி புலருதே.
யார் குத்தினாலும் ஆரியப் பழு தீர்க்க அனல்
அரியும் அவை கூடுமே! இந்த அரிய நீதி அகம் ஆற்றுமே.
அவயம் புனையும் ஆக்கமான இந்த தேற்றம்
அனிச்சையாகவே அவனியில் அரன் அமைக்குமே.
வெங்களம் இப்பா வேறு திசைதான்,ஆனாலும்
வேட்கைகள் சுமந்த அந்த நேத்திரர்கள் நேர்த்தியை முடிக்கும் காலம்
கண் அசைவிற்காய்,
உறங்கு நிலை யாத்த அற மெளனர்கள் இயற்றும் இந்த
துறவு நிலை தூரமகற்றி தூர் அள்ளுவர்,துலங்கும் துயரம் துடைப்பர்.
இது தொலைதூர கனவாகாது,
நனவாகும் லயம் லாவகமாக இலங்கும் இணைப்பிற்காய்
இருளிற்குள் எங்கள் இளையோர்கள்,நாளை ஒன்று கூட்டி
நாட்டுவர் நலங்கிடும் நமது கொடி.
புரிதல் என்றும் தெளிவானால் குழப்பம் குன்றும்.
தெரிதல் அதில் தேர்வானால் உறுதி ஊன்றும்.
சரிதல் உலகில் சாசுவதமில்லை புரிதல் வேண்டும்
விரிதல்,விழ,விழ எழுதலே சரியென்ற தைரியம்
எரிதலை அழிக்க விழுதேந்தலே-அக
அரிதலை அழிக்க ஆற்றலான ஒளவ்வியம்.
செரிக்கும் மனம் வேண்டும்,உரிக்கும்
உணர்வேந்த உய்விக்கும் உரிமையேந்த
புனருத்தாரண புது வித்துக்கள் புலம் ஏந்த
சீவாருத்தாரண சீவியம் சுரக்க,
எரிதலை எரிதணலாலே!
எந்த ஏகாந்தத்திலும் ஏந்தவே வேண்டும்.
அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக