
அகத்தோடு வந்த என்னகத்தவளே!இன்று
நுகமெறிந்து மெளனம் ஏனோ?
யுகமெல்லாம் எனதான யாகம் என்றவளே-இன்று
எந்த யுகமேந்தி யூகம் யூகித்தாய்?அன்று நீ
யாகித்த யாகமெல்லாம் இன்று யதி கலைந்து
சுதி எல்லாம் சுரமேந்த நான் சுகிக்கும் சுரம்
பூப்பிழந்து புலர்வழுகி புன்னமெல்லாம் புகையாக??
எழுதும் ஏணமெல்லாம் என்றும் நீ நீராகராமா?
உழுதும் ஊனமெல்லாம் ஊன்றும் உசாவாக- நீ
அழுதும் தொழும் ஆரமெல்லாம் ஆயிழையே-உன்
பழுதில்லா பாசமெல்லாம்-இன்று பவ்வியம் பாதிப்பதேனோ?
பொழுதுகள் போனதிசை போர் கலந்து விழுதுகளாக உன்
செழுமைகளில் என் சேணமெல்லாம் செவிடு தரித்து!
குலவும் கூடிழந்து கூனமது தான் குடி கொள்ள,
உலவும் உள்ளம் அரித்தவளே!
ஆர்க்கும் அபிலாசைகள்-
அபிநயம் ஆய்ந்து அந்தரத்தில் எம் ஆலிங்கனங்கள்.
களம் கொள்ள கலயம் தேடும் கனங்கள்-என்
கண்களுக்குள் கூடு கட்ட குவலயத்தை குலைத்தவளே-என்
அகத்தவளே!
ஆர்க்கும் என் 'ஆ' சுவாசம் சூடு விட்ட பின்
பேர்க்கும் என் பிணவாசல் தரியாதே. ஏனெனில்
இழந்தபின் இருப்பெழுதும் ஈனத்தை
என் இறப்பின் பின்னாவது!?
இந்த
பிறப்பின் பின்னல் பிரிக்கும் பீரிகைகள்
பிறை எழுதட்டும்-இருக்கும் போதே இன்னல்களையும்,
இனியவைகளையும் இதமாக இனம் காண,
இலங்கும் இதயம் கொள்ளா என் கொலுவிருப்பே!
இனியாவது பூப்பெய்தும் புரிந்துணர்வுகளை புறந்தள்ளாமல்
இயங்கும் இனங்காணும் இலவல்கள் இருப்பெழுதட்டும்.
வாழ்வில் இன்பமும்,துன்பமும்
காலநிலைபோல் காத்திரம் இல்லாதது.
குளிரும்போது வெட்கை கேட்கும் உடல்
வெட்கையின்போது குளிர் கேட்கும்-அதுபோல்
துன்பத்தில் இன்பமும், துன்பத்தில் இன்பமும்
தெரியாமலே எம் தோள் சேரும்.குறைகளை
நிறையாய் கொள்ளும் மனம் உண்டாக்கின்,
மருவும் மையங்கள் மாயமேந்தும்.
உருளும் காலங்கள் எந்த வேதனையையும்
மருளகற்றி மாயம் அகற்றும். எதையும்
நேரான மனமேற்றி முறையாக ஆய்ந்தெழ,
அத்தனையும் அகம் விரிக்கும்.ஆக புரிதலின்
புளகாங்கித்தை சிறகொடித்து சிதைத்தவளே!
இனியும்,
விதைத்தவைகளை வினையறுக்க அகம் கொள். என்றோ
ஓர் நாள் உன் நுகங்கள் உனதான இருப்பெரிக்கும்-அன்று
அழுது ஆர்ப்பழிக்கும் அவயங்களை,
என்ன செய்வதாக உத்தேச உறுப்பெழுதியுள்ளாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக