திங்கள், 14 டிசம்பர், 2009

தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.


நிமிர்வெழுதிய எம் நித்திலனே-தரணியில்
எம் சாரம் சாற்றிய சத்தியனே
உரிமைக் குரலின் உருத்திரனே-நீ
கருமம் ஆற்றிய கச்சிதத்தால்-நாம்
விறுமம் பெற்றே வீரியம் வீற்றோம்.

அரசியல் ஞானியே!
உன் ஆளுமைகளே எங்கள் அரண்களாக,அதன்
சாரங்களின் சாளரங்களே சத்தாக!
உந்தன் உலக வலத்தில் உறுப்புக்கள்
உயிர்ப்பெய்தே "உசா´ வந்தன.-ஆயின்
மனிதமற்ற பிண்டங்களால் எல்லாமே????

தனக்காக வாழாமல் தமிழீழத்திற்காக வாழ்ந்த
தத்துவஞானியே!
சத்தியனே!
பார் இந்த பாரில்--
எம் பரப்புக்கள் எல்லாம் வரப்பிழந்து-
பாறி,
அரசியல் அனாதைகளாக அவனியில் எங்கள் பவனி—
யார் ஆற்றுவார் எங்கள் யதார்த்த யாதகத்தை?

உனதான உறுப்புக்களை உலகறியும்—எமதான
தரப்புக்களை எவர் அறுப்பர்?
கானகங்கள் கருகுகின்றது.
உனதான இழப்புக்கள் ஆற்றாமைக்கு அப்பாற்பட்டது.
விழுதாக நீ எறிந்த வியர்ப்புக்கள் என்றாவது
நுகம் நூர்க்கும்.
நம்பிக்கையே வாழும் நமக்கு ஓர்மம் தரும் ஓணம்.

உன் நினைவுகளை எங்கள் கரம் என்றும் இறுகப்பற்றி
நாளைய விடியலிற்காய் நாம் உழல்கின்றோம்,இல்லை
உயிராக உழுகின்றோம்,உலகப் பரப்பில்
எங்கள் உரிமம் கோரி-
உளதான உனது பாதப் பரப்பில் உதயம் தேடி.

உத்தமர்கள் எத்தனையா நாம் இழந்தது.எல்லாமே
நாளை ஓர் நர்த்தனம் எம் ஈழப் பரப்பெழுதும்.
விடியல் தேடும் விடுதலை களம் காண
நாம் நாளும் பொழுதும் நயமாக உழைப்போம்.
ஆதலால் நாம் ஆழும் அழுகலை ஆர்ப்போம்.

ஈழ தேசத்தின் எழ குரலே!உன்
ஆர்ப்புக்கள் அழுகலாகிப் போகா,
சத்தியவேள்வியின் சாரங்கள் சங்கூதும்-நாளை
வித்தகராம் எம் மாவீரம் சந்தித்த சாரங்களாய் சாரல் தூவும்,
அது தமிழுக்கு உண்டு நாடென்றே நாயனங்கள் ஊதும்.

எம் தேசத்தின் தேமாங்கான தேசத்தின் குரலே,
உமதான அரசியல் தத்துவம் அன்று அரங்கேறும்.
நாட்டுக்காக தனை ஈன்ற செம்மலே உன் தாபனத்தின்
மேல் நின்று எமதான அந்த அழகிய தேசம்-உன்
பெயரெழுதி பெருமை சேர்க்கும் பொய்கை கூடும் வரை
எங்கள் குவலயம் சோராது.

பூமிப் பந்தில் புலரும் உந்தன் கனவுகள்-அந்த
கலயம் காவும் கனதியாக எங்கள் கனவு நனவாகும்,
அந்த பொன்னான நாள் புலர புலம் பெயர்
உறவுகள் நாம் உங்களின் ஓர்மமான நினைவுகள் புடை
சூழ ஓயாமல் உழைப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இந்த வேதங்கள் உலகொலிக்க,
உங்கள் ஞானங்கள் வழி சமைக்க,
தூங்காத கோணங்கள் கொலுவமைக்க,
ஈழ இதயத் தூயவன் வலுவூட்ட,
நீங்காத நினைவெழுதி நேர்மையாய் நெய்வோம்.
தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்