சனி, 19 டிசம்பர், 2009

மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?


சுழலும் பூமிப் பந்து எவரை சுவீகரம் கொண்டது?
உழலும் மனமதை யார்தான் வென்றது?
சுழியும் சூன்யமாக சூத்திரம் யார்தான் வகைத்தது?
மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?
மதமும்,நிறமும் ஏன்தான் முண்டியது?

மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை-இது
மார்க்கம் பூண்டதால் மதம் என்ற போர்வை.
ஆதலால் வேர்த்தது பூமித்தாய் என்ற பாவை.
பூமியெல்லாம் குருதியின் பார்வை.இது
பலமுள்ள பராக்கிரமன் பண்ணிய நுண்ணிய கோ(ர்)வை.

வரலாறு இதை வகை,வகையாய் ஆய்ந்தது.
மனிதாபிமானம்,எல்லோரும் ஒருதாய் மக்கள் என்பதை
ஓங்கியே ஒப்பித்தது,
ஆய்வு இதை ஆரோக்கியமாய் ஆய்ந்தது.அதை
அகிலம் இங்கு ஐக்கியமாய் ஆரோகணித்தது.ஆயின்
அவனியில் ஏன் இந்த அவலம் வலம் வார்த்தது?

பிரபஞ்சம் தோன்றி பில்லியன் ஆண்டுகள்-இங்கு
எங்கே பிரம்மனும்,பிதாக்களும்?
மதத்திற்கு இங்கு என்ன ஆளுகை?
சீவராசிகளின் பரிணாம வளர்ச்சியின் அதி உச்ச
பிரமாண்டம் மனித இனம்-பகுத்தறிவு அதன் பிரம்மம்
விஞ்ஞானமாக இங்கு விழுதெறிந்து மனிதன் நாளை
நிலவில் குடியேற நீட்சித்து நிற்கும் நியம் புரியா பிறவிகளே!

இன்னமும் இந்து என்றும்,புத்தமென்றும்,
இசுலாமிய இனமென்றும்,கிறித்துவ கீர்த்தியென்றும்
ஈனமியற்றும் இழியோரே!
வாருங்கள் எம் இனம் அதன் வளம் எல்லாமே
வகுந்தெடுத்த வன்மையாளனின் புயம் தறிக்க
புதுப் பூபாளம் இசைப்போம்.

ஆவணத் தமிழனின் கோவளங்கள் மீட்க,
பூபாளம் பூட்டிய எம் புண்ணியரின் தடம் ஒற்றி,
பேதங்கள் களைந்து எங்கள் பேதமை கலைத்து,
சாதி,மதமென்ற சங்கடங்கள் களைந்து,நாம்
தமிழீழ மக்கள் ஓர் இனமென்ற மகுடம் தரித்து.

மனிதாபிமானம் சுடர மனிதராய்,
ஒற்றுமையாய் ஓரணியில் ஒத்தடம்
ஒற்றிய கல்லறை கனதியரை--
காத்திரமாய் எமதான களங்களில் சுமந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்