
மனையாளை நினைக்கின்றேன்
மற்றும் எமது மக்களை எண்ணுகின்றேன்-என்
சுற்றம்,உற்றார் உறவினரை உற்றே நோக்குகின்றேன்,
சூழலில் சுகமாற்றும் சமூகத்தை சார்ந்து பார்க்கின்றேன்.
எவரிடத்தும்,ஏதோ சோகம்,
கவழ்ந்திருப்பதையே காணக்கூடியதாக--
சுவரிடத்து ஒட்டப்பட்ட கறைகளாக,
ஏதோ களங்கம் சுரப்பதாக---
இடர் தாங்கி இழையோடும்,
சொல்லவெண்ணா துயர் துலங்குவதாக--
படர்ந்திருக்கும் பார்வையே என் படரலில் பரவுகின்றது.
போலியான புன்னகை,
விரக்தியான பார்வை,
இலக்கற்ற இழப்புக்களின்,
இன்னதுதான் என்ற இயல்பை கூறவும்,
கிரகிக்கவும் முடியாத,
ஒரு உன்னத இழப்பை உயிரினும் மேலான ஊட்ட சக்தியை
உறுதியுடன்,இரும்பை ஒத்த இருப்புடன்
உலாவர உவப்புக்களை, உரசவிட்டூ--
உலகப்பரப்பெங்கும் உறைந்திருக்கும்--எம்
உன்னதங்களின் ஏக்கப் பெரு மூச்சில்-ஈழ
மண்ணின் மகோன்னத,மருவற்ற,
மகோற்சவர்களின்-
தியாகங்களின் வரையறைக்கு அப்பாற்பட்ட-
உதயங்களின்,உற்பவங்களின் இலங்கல்களிற்கு -இவ்
வையகம் எந்த உவப்பள்ளி,
முன்னுரை எழுதப் போகின்றது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக