புதன், 25 நவம்பர், 2009

விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.


மனிதம் கொன்றவன் மனிதம் பேசுகின்றான்.
மா“ பலி கொண்டவன் மாறு வேடம் பூணுகின்றான்.
நரபலியை எப்போதும் நாணாக கொண்டவன்,
நாட்டில் நாணயத்தை நாற்றிடப் போகின்றானாம்.

உலகம் போகும் ஊற்றைப் பார்த்தால்,எதுவும்
புலவுவதான பூடகமும் புரியவில்லை. ஏனோ?
நிலவுவதெல்லாம் நீதியின் நீட்சிபோல் கலவுகின்ற,
தலங்களெல்லாம் தாங்கியே போமோ? தமிழரின் துயரை,

தமிழனிற்கு துயரம் சிங்களவன் சூட்டியதில்லை,ஆம்
வரலாறு அதைத்தான் வலிமையாய் வகைக்குது,திரும்பி
சரிதம் தரிசிக்க சதிகள் புலவுகின்றது.இது இன்றும் தொடரும்
தொடர் வரலாறு பாரே பார்க்குது.எள்ளிச் சிரிக்குது.
தமிழன் கோடாரிக் காம்புதான் மாற்றுக் கணுவில்லா
காலக் கலமத்து.

ஒல்லாந்துகாரன்!
எந்தையர் மண்ணில் காலடி
வைத்த காலம் முதல் இன்று கரிகாலனின்
பொற்காலம் ஈறாக -----
தன் இனத்தை தானே அழிக்க முதுசம் சூட்டிய மூதேவிகாள்.
மதம் புனைந்தான்—மறைக்க ஈன இனம் புனைந்தான்.
சாதி, பேத, வர்க்கம் வரைந்தான்.கூடவே தமிழர்க்கு
நாக்க எலும்புத் துண்டினையும் அன்றே எறிந்தான்,
நில,புல ஆக்கிரமிப்பாளன்.

மான தன்மான சிந்தனையால்,
இன விடுதலையின் ஈர்ப்பால்,தன் சுயம் இழந்து
தன் மூச்சையே ஈழ விடுதலையின் பால் இறுமாந்து
காட்டியவர்களின் காலமிது.,
அவன் அந்த தார்மீகத் தலைவனின் அணியாக,
எத்துணை கட்டுமானங்களை காத்திரமாய் கட்டியெழுப்பி,
இவ்வளவு காத தூரமும் காவியமாய் சுமந்தானே,
எத்துணை ஈக,ஈர மாவீரங்களை இந்த மண்ணிற்காய்,
அதன் விடுதலைக்காய் ஈடு,இணையற்ற எங்கள்-
தலைவனின் ஏன்?
எங்களின் தேசிய இலட்சியத்திற்காய்---

இன்னமும் இந்த தேசிய மண்ணை நேசித்ததினால்
அத்துணை சொந்த,பந்தங்களை நாம் இன்றும்
இழக்க!
வழி வகுத்தவன் சிங்களனா?இல்லையே
இன்னமும்
தன்னையும் டமிழர் என தனக்குத்தானே தாம்பாளம்
தூக்கும் இந்த கோடாரிக் காம்புகள்,என்றால் தவறென்ன?
யார் சாற்ற முடிவுறும்?

இன்றும் முட்கம்பி வேலிக்குள்,
முகம் புதைக்கும் எம் மேனியரின் துயராற்ற,
எந்த பிதாமகன் பிறவிக் கடனாற்றுகின்றான்?
சுய நலத்திற்குள் சூடாற்றும் இவர்கள் சூரணர்களாம்.
இன்னமும் சிலதுகள் இன்றும் சிலம்பம் சுற்றுகின்றனர்.
சூடு சுரணையற்ற சிங்களரின் குதம் நக்கும் குரங்குகள்.
இந்த இலட்சணத்தில்
தேர்தலாம் அதற்கோர் கூட்டமாம், கொற்றமாம்.
சா“ வீடே இன்னமும் முடியவில்லை,விடியலில்லை.

இற்றைவரை தாய் மண்ணிற்காய் ஈகையான
எம் „மா“ வீரம் மீது தலை சாய்த்து அவர் மீதொரு
சாகித்தியம் தீட்டி எங்கள் தேசக் கடனாற்ற
தேர்ந்த புயலாய் மீண்டு(ம்) எழவோம்.
எமதான தேச ஈகையர் எமக்கான உந்து சக்தியாய்,
விழி நீட்டி வழி காட்ட,தேசத் துரோகிகளையும்,
எட்டப்பரான, ஒட்டப்பர்களையும் ஓர்மத்துடன்,
ஓணமான ஓர் ஓரம் கட்டி!

எங்கள் ஈகையர்களின்,
சந்நிதியில் தலை வணங்கி,
அவர் தம் தாகம் தீர்க்க,ஓயாமல் ஒழியாமல்,
ஒளிர்வோம்,அவர்தம் நினைவால் நிமிர்வெய்வோம்.
புலம் பெயர் எம் இனிய,
ஈழ இளைய தலைமுறையே!
தேசத்தை நேசிக்கும் எம் ஆத்மார்த்த இனிய உறவே!

தீப்பொறியாக உனக்குள்,
அனல் கக்கும் ஆளுமையை,அந்த ஆற்றலை
தேசத்தை நிர்மாணிக்கும் உன் உறுதியை
உன் ஆத்மார்த்த கீதார்த்தமாய்,
சுகமான சுமையாக சூரியத் தேவனின் சூத்திரத்திற்குள்,
சூசகமாய் சுரமூட்டு.
அகம்!

அந்த ஆளுமைக்காய்,அணையாமல் ஆறாக
ஆங்காரமாய் அனந்தமாய் எரியட்டும்.
விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்