செவ்வாய், 24 நவம்பர், 2009

துணைக்கு நீயும் சுமை தூக்க தூயவர் பாதை சேர்.


வலி தந்த வேதனையின் வாசலை துடைத்து,
பலி கொண்ட பாதகரின் பாதங்களை கடைந்து,
புலி கண்ட பாதையினை புனருத்தானம் புகுத்தி,
கிலி கொள்ள வைப்போமடா கீசக வதம் படிப்போமடா.

வலிமை என்பதை வாசகமாய் கொள்ளாமல்,
வார்த்தெடுக்க வேண்டுமே எம் வாசலதை மீட்க,
புலம் பெயர் மக்களெல்லாம் புது வேகமேற்றி,
வலம் வரவேண்டுமே வாசலது நிறைய.

முட் கம்பி வேலியடு தானாக திறவாது,எங்கள்
கட்டுமானம் கனதியாய் சுரவாமல்,
தொட்டுச் சொல்லும் வேளையில்லை,பகையை
சுட்டுக் கொல்ல கோலம் கோர்க்கும்.கொண்ட-
கோலமெல்லாம் கொலுவாய் மாற்ற.

விட்டுச் செல்லும் வேளையில்லை-விதியென
கட்டுக் கதை இட்டுச் செல்ல,சுற்றும் பகை சூழ,
எட்டாத பாதையெலாம் எம்மவர் எரித்தே வென்ற,
காலமழியா காவியமாக்கி வைத்த சுவடதை அழியவிட.

விதி சொல்லி விகன்றழ வீரியம் விரியாது,
எதிர்த்தால்,எழுச்சியுடன் போரிட்டால்,
உதிக்கும் உறுதி,இல்லையேல் அழிவெனினும்
மதிக்கும் மானுடம் மறு பிறப்பேந்தும் போராட்டம்.
விழிப்புணர்வு ஏற்ற வேண்டும் வீதியெலாம் அதுவே வேண்டும்.

விகன்றினி எழும்பா விட்டால் வீதி கூட-
விதியாய் ஏற்காது,
அகன்றிதை அகமே ஏற்று ஐயத்தை அகற்றி எழு.
பகன்றிடும் பாதை பரக்க பாரமிறக்கி பாதை கீறு.
தகன்றிடும் தர்க்கமெல்லாம் தாளாமையும் தானே விலக.

உனக்கான பாரத்தை நீயே தாங்கணும்-
ஊர்கூடி தேர் இழுக்க நீயும் உதவணும்.
தனக்கான பாதை இல்லை ஈழ தமிழர்க்கான பாதை இடு.
மனக் கணக்கம் பார்த்தாயானால் மரணமே மையல் பூணும்.
தனக்கென வாழா நெஞ்சம் தன் தாயவர் நிலம் மீட்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்