புதன், 27 ஜூலை, 2011

உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீ
உன் சந்ததிக்கு என்ன வரப்பெழுத வயம் வகுத்தாய்?
காவியாகவும்,கரைசலாகவும் உன் காலம்-எந்த
கருவியையும் கைக் கொள்ளாமல் அடிமை தேசத்தில்-என்ன
கருமாந்தமோ உனதான உவப்பற்ற வாழ்வு?

அன்று!
பாட்டி வடை சுட்ட கதை?
பஞ்ச தந்திர கதை தொடராய்----?
இன்று!
மீண்டும் இதையே மீட்கும்
நினைவு வரையும் காலங்களிற்கு இன்னமும்
வயதிருக்கு.

அதுவரை உன் சமூகம்,சுற்றம்,
முற்றப் பரப்பின் விதி மாற்றும் மார்க்கம்,
இனவிடுதலை,
வரலாறு தந்த தருகின்ற,
வயலை விரிவாக்கு.
தமிழ் தானே வளரும்.
சுதந்திரம்,விடுதலை,இனப் பற்று
இவைகளை கையிலெடு.

உன் அழ்மனதில் அறிந்த ஆயிரம்
அவலங்களை களைய எமக்கும் மருந்திடும்
மார்க்கம் உணர்த்து.
மனமார நீ மையிப்பாய்.
விரல் ஒத்தும் உன் எழுத்துப் பொறி
எம்மையும் பொறிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்