புதன், 27 ஜூலை, 2011

விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்
மொழியின்றி வாழ்வாரா?
உணர்வதை பேண,
உன்னை தானும் புரிந்து கொள்ள-
மொழியின்றி வேற்று வழியுண்டா?

தாய் மொழி தாய்ப் பாலிற்கு அடுத்த மொழி.
சேய் அதை செம்மலாய் புரிந்திடா விடின்,
செவிலி மொழியா வழி காட்டும்?-கற்க
உவப்புணர்ந்து, உணர்வு செறிந்து ,சிந்தனை செய்ய!
அதை சிராக்கி தாயூட்ட தாய் மொழி தவிர,
மாற்று வழி ஏதும்உண்டா?

தாய் நாடிழந்தோம்,தேசமெலாம்,புல​ம்பெயர்ந்தோம்.
ஊரிழந்துஉறவிழந்து,பூமிப்பர​ப்பில்
சிதறுண்டோம்.
அவரவர் நாட்டில் அந்தந்த மொழி பேச -நாம்
எந்த மொழி கொண்டு எம் உறவு பேண?

எம் உறவை பேணவும்,உணர்வைபுரிந்தெழவும​்-
தாய் மொழியே தாரக மந்திரம்.
புரிந்தெழுவோம்.
விழி இழந்தால் வாழ்வுண்டென்பேன்.
எம்
மொழி இழந்தால்,
தாய் மொழி இழந்தால் தேசியம் மட்டுமல்ல
எம் தேசமே அழியும்.
விழி இழந்தால் வாழலாம்-எம்
மொழியிழந்தால் வாழ்வில்லை காணீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்